ஞாயிறு, ஏப்ரல் 28, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 110

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

114ஓம் ருத்ராய நம:
ஸம்ஹாரகாலே 
ப்ரஜா: 
ஸம்ஹரன் 
ரோதயதீதி 
ருத்ர: 
ரோதயதி என்றால் அழவைத்தல்ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார்எனவேஅவர் 'ருத்ரன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் 
ராதி ததாதீதி வா 
ருத்ர: 
அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியைவழங்குவதால் பகவான் 'ருத்ரன்'என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருர்துக்கம் துக்ககாரணம் வா த்ராவயதி வா ருத்ர:
அனைவரின் (அனைத்துத்துன்பங்களையும்அஞ்ஞானம்மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் 'ருத்ரன்'என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோதனாத் 
த்ராவணாத்வாபி 
ருத்ர  இதயுச்யதே
அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் 'ருத்ரன்என்று அழைக்கப்படுகிறார்.

115ஓம் பஹுஶிரஸே நம:
பஹுனி 
ஶிராம்ஸி 
யஸ்யேதி 
பஹுஶிரா: 
ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)
புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:
(பரப்ரஹ்மமான புருஶருக்குபல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.

இதி மந்த்ரவர்ணாத்  இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்கூறியுள்ளபடி.
\(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடிஎண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் பஹுஶிராஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

116ஓம் பப்ரவே நம:
பிபர்த்தி 
லோகானிதி 
பப்ரு:
அனைத்து உலகங்களையும்இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான்'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

117ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வஸ்ய 
காரணத்வாத் 
விஶ்வயோனி:
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான்'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

118ஓம் ஶுசிஶ்ரவஸே நம:
ஶுசீனி 
ஶ்ரவாம்ஸி 
நாமானி 
ஶ்ரவணீயான்யஸ்யேதி 
ஶுசிஶ்ரவா: 
பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானதுஅவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவைஎனவேபகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

119ஓம் அம்ருதாய நம:
ந வித்யதே 
ம்ருதம் மரணம் 
அஸ்யேதி 
அம்ருத: 
பகவானுக்கு மரணம் என்பதே கிடையாதுஎனவேஅவர் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

120ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:
ஶாஶ்வதஸ்சாஸௌ 
ஸ்தாணுஸ்சேதி 
ஶாஶ்வதஸ்தாணு: 
பகவான் என்றும் உள்ளார்என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார்எனவேஅவர் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

121ஓம் வராரோஹாய நம:
வர 
ஆரோஹோSஅங்கோSஸ்யேதி 
வராரோஹ: 
பகவானின் இடைப்பகுதி மிக அழகானதுஎனவேஅவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் 
ஆரோஹணம் 
யஸ்மின்னிதி வா 
ஆரூடனாம் 
புனராவ்ருத்யஸம்பவாத் 
வராரோஹ: 
பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை.அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் 'வராரோஹ:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

122ஓம் மஹாதபஸே நம:
மஹத் 
ஸ்ருஜ்யவிஶயம் 
தபோ 
ஞானமஸ்யேதி 
மஹாதபா:
(இந்தப் ப்ரபஞ்சத்தைபடைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் 'மஹாதபாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஐஸ்வர்யம் 
ப்ரதாபோ வா 
தபோ 
மஹதஸ்யேதி வா 
மஹாதபா:
அவரது செல்வமும்வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்)இருப்பதால் பகவான் 'மஹாதபாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஏப்ரல் 21, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 109

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
                   114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.

119. ஓம் அம்ருதாய நம:
ந வித்யதே அடைவதில்லை 
ம்ருதம் மரணம் 'ம்ருதம்' என்றால் மரணம் 
அஸ்யேதி எனவே 
அம்ருத: பகவான் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு மரணம் என்பதே கிடையாது. எனவே, அவர் 'அம்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஜரோSமர:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.25)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மமான பகவான்) மூப்பற்றவர், இறவாதவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

120. ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:
ஶாஶ்வதஸ்சாஸௌ நிரந்தரமானவர் 
ஸ்தாணுஸ்சேதி நிலையானவர் 
ஶாஶ்வதஸ்தாணு: (எனவே) பகவான் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் உள்ளார், என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார். எனவே, அவர் 'ஶாஶ்வதஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

121. ஓம் வராரோஹாய நம:
வர அழகிய 
ஆரோஹோSஅங்கோSஸ்யேதி இடையை (மடியை) உடையவராதலால் 
வராரோஹ: பகவான் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இடைப்பகுதி மிக அழகானது. எனவே, அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆரோஹ என்றால் இடைப்பகுதி (அல்லது மடி)

வரம் மிகச்சிறந்த 
ஆரோஹணம் ஏற்றம் (ஏற்றமான இடம்
யஸ்மின்னிதி வா எவருடையதோ 
ஆரூடனாம் எங்கு சென்றால் 
புனராவ்ருத்யஸம்பவாத் (இந்த ஸம்ஸாரத்தினுள்) திரும்பி வருதல் இல்லையோ 
வராரோஹ: பகவான் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை. அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் 'வராரோஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வரம் - மிகச்சிறந்த + ஆரோஹணம் - ஏறுதல் = வராரோஹ:
புனராவ்ருத்தி + அஸம்பவாத் = புனராவ்ருத்யஸம்பவாத்

' புனராவர்த்ததே' (சாந்தோக்ய உபநிஶத் 8.15.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த உத்தமமான இடத்தை அடைந்தவன்) மீண்டும் இங்கு வருவதில்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'யத் கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம' || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.6)
ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எதனை எய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

122. ஓம் மஹாதபஸே நம:
மஹத் மிகச்சிறந்த 
ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் 
தபோ 'தப' என்றால் 
ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால் 
மஹாதபா: பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யஸ்ய ஞானமயம் தப:' (முண்டக உபநிஶத் 1.1.9)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின் 
ப்ரதாபோ வா வீரத்தின் 
தபோ காந்தி (ஒளி
மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும் 
மஹாதபா: எனவே, பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் 'மஹாதபா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முதல் விளக்கத்தில் 'தப' என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் 'தப' என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

சனி, ஏப்ரல் 20, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 108

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:
                   114. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
119. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பாப்போம்.

116. ஓம் பப்ரவே நம:
பிபர்த்தி தாங்குகிறார் 
லோகானிதி அனைத்து உலகங்களையும் (இந்தப் ப்ரபஞ்சத்தையும்) 
பப்ரு: பகவான் 'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களையும், இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான் 'பப்ரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

117. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் 
காரணத்வாத் மூலகாரணமாக இருப்பதால் 
விஶ்வயோனி: பகவான் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 'ஓம் விஶ்வரேதஸே நம:' என்ற 88வது திருநாமத்திற்கும் ஆச்சார்யாள் இதே உரையை எழுதியுள்ளார் (விஶ்வஸ்ய காரணத்வாத்). அங்கு 'ரேதஸ்' (தந்தையின் வீர்யம்), இங்கு 'யோனி' (தாயின் கரு). மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் இவை இரண்டும் வெவ்வேறாக இருக்கும். ப்ரபஞ்சம் பகவானிடமிருந்து நேரடியாகத் தோன்றுவதால், ப்ரபஞ்சத்திற்கு (ரேதஸ், யோனி ஆகிய) இந்த இரண்டுமே பகவான்தான். எனவே, இரண்டு திருநாமங்களுக்கும் ஒரே உரை தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால் புனருக்தி தோஷம் கிடையாது.

118. ஓம் ஶுசிஶ்ரவஸே நம:
ஶுசீனி தூய்மையானவை (தூய்மைபடுத்த வல்லவை
ஶ்ரவாம்ஸி கேட்பது 
நாமானி அவரது திருநாமங்கள் 
ஶ்ரவணீயான்யஸ்யேதி கேட்கத் தகுந்தவை (கேட்பதற்கு உகந்தவை
ஶுசிஶ்ரவா: (எனவே) பகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானது. அவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவை. எனவே, பகவான் 'ஶுசிஶ்ரவா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶுசி - தூய்மையானது + ஶ்ரவா - அவரைப் பற்றிக் கேட்பது = ஶுசிஶ்ரவா: