சனி, மே 30, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 132

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||


இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

163. ஓம் வேத்யாய நம:
நி:ஶ்ரேயஸார்த்திபிர் வேதனார்ஹத்வாத் வேத்ய:
மிகச்சிறந்த பலனான மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார். எனவே, அவர் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

164. ஓம் வைத்யாய நம:
ஸர்வவித்யானாம் வேதித்ருத்வாத் வைத்ய:
அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்) அறிபவராதலால் பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

165. ஓம் ஸதாயோகினே நம:
ஸதா அவிர்பூத ஸ்வரூபத்வாத் ஸதாயோகி 
எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

166. ஓம் வீரக்னே நம:
தர்மத்ராணாய வீரான் அஸுரான் ஹந்தீதி
தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ' வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

167. ஓம் மாதவாய நம:
மாயா வித்யாயா: பதி: மாதவ:
'மா' என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

168. ஓம் மதவே நம:
யதா மது பராம் ப்ரீதிம் உத்பாதயதி அயமபி ததேதி மது: 
பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர், இன்பமளிப்பவர். எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

169. ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் இந்த்ரியானாம் அவிஶய இதி அதீந்த்ரிய: 
பகவான், ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்) எட்டாதவர். எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

170. ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாகாரித்வாத் மஹாமாய:
பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவி. சாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோ, மீறவோ இயலாது. எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

171. ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் உத்பத்தி ஸ்திதி லயார்த்தம் உத்யுக்தத்வாத் மஹோத்ஸாஹ:
இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார். எனவே, அவர் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

172. ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலவத்வாத் மஹாபல:
அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சனி, ஏப்ரல் 11, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 131

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:

169. ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் ஶப்தம் முதலிய (கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய) 
இந்த்ரியானாம் ஐம்புலன்களுக்கும் 
அவிஶய இதி விஶயம் ஆகாதவர் (அவற்றிற்கு எட்டாதவர்) 
அதீந்த்ரிய: பகவான் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்) எட்டாதவர். எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157-வது திருநாமம் 'அதீந்த்ர:' (அதி + இந்த்ரன்); இந்தத் திருநாமம் அதீந்த்ரிய: (அதி + இந்த்ரியம்)

170. ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாவிகளுக்குக் கூட 
மாயாகாரித்வாத் மாயையை விளைவிப்பவர் 
மஹாமாய: எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவி. சாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோ, மீறவோ இயலாது. எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மம மாயா துரத்யயா (ஸ்ரீமத் பகவத்கீதை 7.14)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: எனது தேவமாயை கடத்தற்கரியது.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

171. ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 
உத்பத்தி படைத்து 
ஸ்திதி காத்து 
லயார்த்தம் அழிப்பது (ஆகிய முத்தொழில்களை) 
உத்யுக்தத்வாத் மிகுந்த உற்சாகத்துடன் செய்வதால் 
மஹோத்ஸாஹ: பகவான் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார். எனவே, அவர் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

172. ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 
பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 
மஹாபல: பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 130

18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:


163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |

169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||


இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


165. ஓம் ஸதாயோகினே நம:
ஸதா எப்பொழுதும் 
அவிர்பூத (தன் ஞானத்தால்) ப்ரகாசிக்கும் 
ஸ்வரூபத்வாத் உருவமுடையவர் 
ஸதாயோகி பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

166. ஓம் வீரக்னே நம:
தர்மத்ராணாய தர்மத்தைக் காப்பதற்காக 
வீரான் அஸுரான் அஸுர வீரர்களை 
ஹந்தீதி கொல்கிறார் 
வீரஹா பகவான் 'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ' வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வினாஶாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய (ஸ்ரீமத் பகவத்கீதை)

167. ஓம் மாதவாய நம:
மாயா 'மா' என்றால் 
வித்யாயா: அனைத்து வித்தைகளும் (கல்வியும்) 
பதி: (அனைத்து வித்தைகளின்) தலைவராதலால் 
மாதவ: பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'மா' என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 72-வது திருநாமத்தில் 'மாதவ:' என்பதற்கு “மஹாலக்ஷ்மியின் கணவர்”, “மது வித்யையின் மூலம் அறியப்படுபவர்”, “மௌனத்தாலும், த்யானத்தாலும், யோகத்தாலும் அறியப்படுபவர்” என்று மூன்று விளக்கங்களை அளித்திருந்தார் ஆச்சார்யர்.

மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈஶோ யதோ பவான் |
தஸ்மான்மாதவநாமாஸி தவ: ஸ்வாமீதி ஶப்தித: || (ஹரிவம்ஶம் 3.88.49)

ஹரிவம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது:
பகவான் ஹரியை அறியும் வித்தைக்கு 'மா' என்று பெயர். தாங்கள் அதன் ஸ்வாமி; "தவ" என்ற சொல் ஸ்வாமியை (தலைவனைக்) குறிக்கும். எனவே, தாங்கள் மாதவ: என்ற திருநாமத்தால் அறியப்படுகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

168. ஓம் மதவே நம:
யதா மது எவ்வாறு தேனானது 
பராம் ப்ரீதிம் (தன் சுவையின் மூலம் அதை சுவைப்பவர்களுக்கு) சிறந்த இன்பத்தை 
உத்பாதயதி தருகிறதோ 
அயமபி ததேதி அவ்வாறே பகவானும் (தன் பக்தர்களுக்கு) இன்பமளிக்கிறார் 
மது: எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர், இன்பமளிப்பவர். எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.