20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|
அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:
இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:
187. ஓம் கோவிந்தாய நம:
'நஶ்டாம்வை தரணீம் பூர்வமவிந்தத்யத்குஹாகதாம் |
கோவிந்த இதி தேனாஹம் தேவைர்வாக்பிரபிஶ்டுத:' ||
(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.70)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: நான் முற்காலத்தில் பாதாளத்தில்
அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை மீட்டு
வந்தேன். எனவே, தேவர்கள் தங்கள் வாக்கால் என்னை 'கோவிந்தா' என்றழைத்து துதித்தனர்.
இதி மோக்ஷதர்மவசனாத் இந்த (மஹாபாரத) மோக்ஷ தர்மக் கூற்றின்படி
கோவிந்த: பகவான்
'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரளய காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை அதனின்று மீட்டுத் தூக்கி எடுத்து வந்ததால் பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு பூமி என்று பொருள்.
‘அஹம் கிலேந்திரோ தேவானாம் த்வம் க்வாமிந்த்ரதாம் கத: |
கோவிந்த இதி லோகாஸ்த்வாம்
ஸ்தோஶ்யந்தி புவி ஶாஶ்வதம்’ || (ஹரிவம்ஶம் 2.19.45)
ஹரிவம்ஸத்தில்
கூறப்பட்டுள்ளது:
நான் தேவர்களின் இந்திரன். தாங்கள் பசுக்களுக்கு இந்திரனாக உள்ளீர்கள். எனவே, பூமியில் அனைவரும் தங்களை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் தங்களைத் துதிப்பார்கள்.
இதி இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி
கோவிந்த: பகவான்
'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எவ்வாறு, இந்திரன் தேவர்களின் தலைவனோ, அவ்வாறே பகவான் (தனது க்ருஷ்ணாவதாரத்தில்) ஆநிரைகளுக்குத் தலைவராவார். எனவே, பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு ஆநிரை என்று பொருள்.
‘கௌரேஶா து யதோ வாணி தாம் ச விந்தயதே பவான் |
கோவிந்தஸ்து ததோ தேவ
முனிபி: கத்யதே பவான்’ || (ஹரிவம்ஶம்
3.88.50)
ஹரிவம்ஸத்தில்
கூறப்பட்டுள்ளது:
'கௌ' என்ற சொல் வாக்கைக் (வாணி) குறிக்கும். தாங்கள் அதில் வன்மை
பொருந்தியவர். எனவே, ஓ பகவானே!!! முனிவர்கள் தங்களை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
இதி ச ஹரிவம்ஶே இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி
கோவிந்த: பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் சிறந்த வாக்குவன்மை
பொருந்தியவர். எனவே, முனிவர்கள் அவரை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி ஆகிய பொருள்.
188. ஓம் கோவிதாம் பதயே நம:
கௌர்வாணி 'கௌ' என்றால் சொல் (இங்கு வேதம் என்று பொருள்)
தாம் விந்ததீதி கோவித: வேதத்தை நன்கு கற்றறிந்தவர்களை 'கோவித:' என்று அழைப்பர்
தேஶாம் அவர்களின்
பதிர்விஶேஶேணேதி (வேதமறிந்தோரை வழி நடத்தும்) தலைவரானபடியால்
கோவிதாம்பதி: பகவான்
'கோவிதாம்பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வேதமறிந்தோரை 'கோவித:' என்று கூறுவர். அத்தகையோரை வழிநடத்தும் தலைவராக இருப்பதால், பகவான் 'கோவிதாம்பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு, 'கோ' என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி, ஆகிய பொருள். அதிலும், குறிப்பாக (மிகச் சிறந்த வாக்கான) வேதங்கள் என்ற பொருளில் உரை அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக