75. ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |
இந்த எழுபத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
699. ஸத்கதி:, 700. ஸத்க்ருதி:, 701. ஸத்தா, 702. ஸத்பூதி:, 703. ஸத்பராயண: |
704. ஶூரஸேன:, 705. யதுஶ்ரேஶ்ட:, 706. ஸன்னிவாஸ:, 707. ஸுயாமுன: ||
699. ஸத்கதயே நம:
அஸ்தி ப்ரஹமேதி சேத்வேத ஸந்தமேனம் ததோ விது: | (தைத்ரீய உபநிஶத் 2.6)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மம் இருப்பதாக ஏற்றுக்கொள்பவனை மேலோனாகக் கருதுகிறார்கள்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு
வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
ப்ரஹ்மாஸ்தீதி ப்ரஹ்மம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்பவர்
யே விதுஸ்தே ஸந்த: மேலானோராக அறியப்படுகிறார்கள்
தை: அவர்களால்
ப்ராப்யத இதி அடையப்படும் இலக்காக இருப்பதால்
ஸத்கதி: பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்மம் உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் மேலானவர்கள் சென்றடையும் இலக்காக இருப்பதால் பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸதீ கதிர்வ்ருத்தி: அவரது 'கதி' அதாவது வளர்ச்சி (வளர்தல்)
ஸமுத்க்ருஶ்டா மிகச்சிறந்ததாகும்
அஸ்யேதி வா ஸத்கதி:
எனவே, பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவானின் வளர்ச்சி (கதி) மிகச்சிறந்தது. எனவே அவர் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
700. ஸத்க்ருதயே நம:
ஸதீ க்ருதி: நற்கர்மம் (சிறந்தவை)
ஜகத்ரக்ஷணலக்ஷணா இந்த ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலான பகவானின் செயல்கள்
அஸ்ய யஸ்மாத்தேன ஸத்க்ருதி: எனவே பகவான் 'ஸத்க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலான பகவானின் செயல்கள் மிகச்சிறந்தவை. எனவே அவர் 'ஸத்க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி நாம்னாம் ஸப்தமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸத்க்ருதி: என்னும் இந்த திருநாமம் வரையில்) எழுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
701. ஸத்தாயை நம:
ஸஜாதீய ஒரே வகையை சேர்ந்த பொருட்களுக்குள்
விஜாதீய வெவ்வேறு பொருட்களின் இடையே
ஸ்வகதபேத வேறுபாடுகள்
ரஹிதா அற்ற
அனுபூதி: அனுபவத்திற்கு
ஸத்தா 'ஸத்தா' என்று பெயர். பகவான் எவ்வித வேறுபாடுகளும் அற்றவராக இருப்பதால் அவர் 'ஸத்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மல்லிகை, செம்பருத்தி போன்றவை மலர்கள் என்ற ஒரே வகையைச் சேர்ந்தாலும் அவற்றுக்குள் உருவம், நிறம், மணம் முதலிய வேறுபாடுகள் உள்ளன. இவை ஸஜாதீய (ஒரே வகையை சேர்ந்த பொருட்களுக்குள்) வேறுபாடுகள் என்று அழைக்கப்படும். பூக்கள், புத்தகங்கள் முதலிய பொருட்களின் இடையே உள்ள உருவம் முதலான வேறுபாடுகள் விஜாதீய வேறுபாடுகள் என்று அழைக்கப்படும். பகவான் இவ்வாறு எந்தவித வேறுபாடுகளும் அற்றவர் (ஏனெனில் அனைத்தும் பரப்ரஹ்மத்தின் வடிவங்களே). இவ்வாறு வேறுபாடுகள் அற்ற அனுபவத்தை 'ஸத்தா' என்று அழைப்பர். எனவே, இவ்வாறு வேறுபாடுகள் அற்ற அனுபவத்தை தனது இயற்கையாக கொண்டவராதலால் பகவான் 'ஸத்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஏகமேவாத்விதீயம்' (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) ஒன்றே. இரண்டாவது தத்துவம் என்று வேறொன்றில்லை (அத்விதீய).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
702. ஸத்பூதயே நம:
ஸன்னேவ 'ஸத்' அதாவது உண்மையில் இருக்கக்கூடியதான
பரமாத்மா பரம்பொருள் ஒன்றே
சிதாத்மக: ஞானமயமான
அபாதாத் (எவற்றாலும்) தடைபடாத
பாஸமானத்வாச்ச ஒளிவீசும்
ஸத்பூதி: 'ஸத்பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
நான்ய: வேறொருவருமில்லை (வேறெதுவுமில்லை).
என்றும் இருக்கக்கூடியதும், ஞானமயமாக தடையின்றி ஒளிவீசுபவரான பரமாத்மா (பரம்பொருளான நாரயணன்) ஒருவரே 'ஸத்பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். வேறொருவருமில்லை (வேறெதுவுமில்லை).
ப்ரதீதேர்பாத்யமானத்வாச்ச ஸன்னாப்யஸத் | ஶ்ரௌதோ யௌக்திகோ வா பாத: ப்ரபஞ்சஸ்ய விவக்ஷித: |
ஶ்ருதி (வேத) வாக்கியங்கள் மற்றும் உள்ள ப்ரமாணங்களினால் நாம் அறிவது என்னவென்றால், இந்தப் ப்ரபஞ்சத்தில் உள்ள (பரப்பொருளைத் தவிர்த்து) மற்றவை அனைத்துமே உண்மையில் நிலையற்றவை.
703. ஸத்பராயணாய நம:
ஸதாம் ஸத்புருஶர்கள்
தத்வவிதாம் தத்துவத்தை (உண்மைப் பொருளை) உணர்ந்த
பரம் மேன்மையானதும்
ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த
அயனம் இதி அடையக்கூடிய இடமாக (பகவான்) இருப்பதால்
ஸத்பராயணம் பகவான் 'ஸத்பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தத்துவத்தை (அதாவது உண்மைப் பொருளை) உணர்ந்த ஸத்புருஶர்கள் சென்றடையக்கூடிய மேன்மையான, மிகச்சிறந்த இடமாக இருப்பதால் பகவான் 'ஸத்பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதாவது, பகவானிடம் ஒன்றுவதே முக்தி.
704. ஶூரஸேனாய நம:
ஹனூமத்ப்ரமுகா: ஹனுமான் முதலான
ஸைனிகா: படைவீரர்கள் (கொண்ட)
ஶௌர்யஶாலினோ ஸூரர்களை
யஸ்யாம் ஸேனாயாம் ஸா அத்தகைய படை
ஶூரஸேனா 'ஶூரஸேனா' அதாவது ஸூரர்களைக் கொண்ட படை என்று அழைக்கப்படுகிறது
யஸ்ய ஸ ஶூரஸேன:
அத்தகைய படையை உடைய பகவான் (ஸ்ரீராமபிரான்) ஶூரஸேன: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஹனுமான் முதலான ஸூரர்களைக் படைவீரர்களாகக் கொண்ட படை (சேனை) ஶூரஸேனை என்று அழைக்கப்படும். அத்தகைய படையை உடையவராதலால் பகவான் (ஸ்ரீராமபிரான்) 'ஶூரஸேன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
705. யதுஶ்ரேஶ்டாய நம:
யதூனாம் யாதவர்களுக்குள்
ப்ரதாநத்வாத் முதன்மையானவராதலால்
யதுஶ்ரேஶ்ட: பகவான் 'யதுஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யதுகளுக்குள் (யாதவர்களுக்குள்) முதன்மையானவர் - யாதவர்களின் தலைவர். ஆதலால், பகவான் 'யதுஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
706. ஸன்னிவாஸாய நம:
ஸதாம் 'ஸத்' அதாவது
விதுஶாம் கற்றோரின்
ஆஶ்ரய: புகலிடமாக இருப்பதால்
ஸன்னிவாஸ: பகவான் 'ஸன்னிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸத்' அதாவது கற்றோரின் புகலிடமாக இருப்பதால் பகவான் 'ஸன்னிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
707. ஸுயாமுனாய நம:
ஶோபனா அழகானது
யாமுனா யமுனாஸம்பந்தினோ 'யாமுனா' அதாவது யமுனா நதிக்கரை வாசிகளான
தேவகி வஸுதேவ நந்த யஶோதா பலபத்ர ஸுபத்ராதய: தேவகி, வஸுதேவர், நந்தகோபர், யஶோதா, பலராமன் மற்றும் ஸுபத்ரா ஆகியோரால்
பரிவேஶ்டாரோSஸ்யேதி சூழப்பட்டு இருந்ததால்
ஸுயாமுன: பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் (தனது க்ருஶ்ணாவதாரத்தில்) யமுனா நதிக்கரை வாசிகளான தேவகி, வஸுதேவர், நந்தகோபர், யஶோதா, பலராமன் மற்றும் ஸுபத்ரா ஆகியோரால் சூழப்பட்டு, மிகவும் அழகாக விளங்கினார். எனவே அவர் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கோபவேஶதரா பகவான் இடையனாக இருந்தபொழுது
யாமுனா: யமுனை நதிக்கரையில்
பரிவேஶ்டார: சூழப்பட்டிருந்தார்
பத்மாஸநாதய: தாமரை இருக்கை (பத்மாஸனம்) முதலான
ஶோபனா அழகாக
அஸ்யேதி ஸுயாமுன: எனவே, பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, (தனது க்ருஶ்ணாவதாரத்தில்) பகவான் இடையனாக
இருந்தபொழுது, யமுனா நதிக்கரையில் தாமரை இருக்கை
(பத்மாஸனம்) முதலானவற்றால் சூழப்பட்டிருந்தார். எனவே, பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக