நமோ நாராயணா!!!
பரம்பொருளான பகவானை அடைய பல வழிகள் உண்டு. அவற்றுள் கலியுகத்திற்கு நாம சங்கீர்த்தனம் மிக சிறந்த வழியாக நமது ஆசார்யர்களால் காட்டப்பட்டிருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்வதற்கு எளிமையானது ஆனால் பெரிய பலன்களை அளிக்க வல்லது. நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை சொல்லி மாளாது.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சர்யர் பகவானின் நாம ஜபமானது "பவித்ரானாம் பவித்ரம்யோ மங்களனாஞ்ச மங்களம்" - பகவத் நாம சங்கீர்த்தனம் நம்மை புனிதமாக்கி நற்பலன்களை கொடுக்கும் என்கிறார்.
பல வழிகள் இருந்தும் ஏன் ஆசார்யர்கள் நாம சங்க்கீர்தனத்திற்கு அதிக முக்யத்வம் தருகிறார்கள்? இதை ஆதிசங்கரர் தனது விஷ்ணுசஹாஸ்ரநாம பாஷ்யத்தில் விளக்குகிறார்.
"அஸ்ய ஸ்துதி லக்ஷனர்ஸ்யார்சநஸ்யாதிக்யே கிம் காரணம் உச்யதே?". ஸ்துதி (ஜபம் / நாம சங்கீர்த்தனம்) மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற என்ன காரணம்?
"ஹிம்ஸாதி புருஷாந்தர த்ரவ்யாந்தர தேஷ காலாதி நியமானபேக்ஷத்வம் ஆதிக்யே காரணம்". இடம், காலம், உபயோக படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றில் ஹிம்ஸைக்கோ பாவத்திற்கோ இடம் இல்லை. எனவே ஸ்துதி மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற்றது.
வேறு சில மேற்கோள்களை காண்போம்:
கீதையிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணர்: "யஜ்ஞானாம் ஜப யஜ்ஞோ'ஸ்மி" - அனைத்து வகை யஜ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தன) யஜ்ஞமாக இருக்கிறேன்
ஸ்ரீ விஷ்ணுபுராணம்: "த்யாயன் கிருதே யஜன் யஜ்ஞைஸ் த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" - கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதா யுகத்தில் யஜ்ஞங்களாலும், த்வாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்ரஹம்) கலி யுகத்தில் நாம சங்கீர்த்தனத்தேலேயே எளிதில் கிடைத்துவிடும்.
திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி: "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்"
நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் நாமம் திண்ணம் நாரணமே"
பிருஹத் நாராதீய புராணம்: "ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலௌ நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா" - ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது!!
ஆண்டாளின் திருப்பாவை: "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி", "பாற்கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி", "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை .... வாயினால் பாடி", "கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ"
சரி. பகவானின் திருநாமங்களை சொல்வதால் என்ன கிடைக்கும்? முன்னமே சொன்னபடி (பவித்ரானம் பவித்ரம்யோ ...) பகவத் நாமம் நம்மை புனிதபடுத்தும். ஸ்ருதி, ஸ்ம்ருதி மற்றும் புராணங்களில் நாம சங்கீர்தனத்தின் எண்ணற்ற பலன்கள் கூறப்பட்டுள்ளன.
ஆண்டாளின் திருப்பாவை: "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் நின்றதுவும் தீயினில் தூசாகும்..."
நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்". பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர், நமது துயர்கள் அனைத்தும் விலகும்.
"ரூபமாரோக்யமர்தாம்ஸ்ச போகாம்ஷைவானுஷங்கிகான்| ததாதி த்யாயதோ நித்யம் அபவர்கப்ரதோ ஹரி:" - ஹரியை துதித்தால் அவர் அவ்வுலகத்திற்கு முக்தி கொடுப்பதோடு, இவ்வுலகில் ரூபம் (அழகு), ஆரோக்யம், போகம் ஆகியவற்றையும் அருள்கிறார்.
"ஹரிர் ஹரதி பாபானி துஷ்டசித்தைர் அபி ஸ்ம்ருதஹ அணிச்சயாபி ஸம் ஸப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவகஹ" - ஹரி என்ற திருநாமம் நமது பாவங்களை அபஹரிக்கிறது. நாம் தெரியாமல் கூறினால் கூட பலன் கொடுக்கவல்லது. எவ்வாறெனில், அது சுடும் என்று தெரியாமல் ஸ்பரிசித்தால் கூட நெருப்பு நம்மை சுடுகின்றதே அதைப்போல.
"ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டசேஷ்டைக பேஷஜம்| கிருஷ்னேதி வைஷ்ணவ மந்த்ர ஷ்ருத்வா முக்தோ பவேந்நரஹ||" - ஸம்ஸாரமென்னும் பாம்பு தீண்டுவதால் துன்பத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு மருந்து போன்றது கிருஷ்ணா என்னும் நாமம். இதை கேட்பதாலேயே (ஷ்ருத்வா) ஒருவர் ஸம்ஸார துன்பத்திலிருந்து முக்தி அடைகிறார். இதை சொல்பவர் அடையும் பலன்களை கேட்கவும் வேண்டுமா??
இனி வரும் இடுகைகளில் பகவத் நாம மேன்மைகளையும் அவன் புகழை விளக்கும் புராணங்களையும் அனுபவிப்போம்.
நமோ நாராயணா!!!

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சர்யர் பகவானின் நாம ஜபமானது "பவித்ரானாம் பவித்ரம்யோ மங்களனாஞ்ச மங்களம்" - பகவத் நாம சங்கீர்த்தனம் நம்மை புனிதமாக்கி நற்பலன்களை கொடுக்கும் என்கிறார்.
பல வழிகள் இருந்தும் ஏன் ஆசார்யர்கள் நாம சங்க்கீர்தனத்திற்கு அதிக முக்யத்வம் தருகிறார்கள்? இதை ஆதிசங்கரர் தனது விஷ்ணுசஹாஸ்ரநாம பாஷ்யத்தில் விளக்குகிறார்.
"அஸ்ய ஸ்துதி லக்ஷனர்ஸ்யார்சநஸ்யாதிக்யே கிம் காரணம் உச்யதே?". ஸ்துதி (ஜபம் / நாம சங்கீர்த்தனம்) மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற என்ன காரணம்?
"ஹிம்ஸாதி புருஷாந்தர த்ரவ்யாந்தர தேஷ காலாதி நியமானபேக்ஷத்வம் ஆதிக்யே காரணம்". இடம், காலம், உபயோக படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றில் ஹிம்ஸைக்கோ பாவத்திற்கோ இடம் இல்லை. எனவே ஸ்துதி மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற்றது.
வேறு சில மேற்கோள்களை காண்போம்:

ஸ்ரீ விஷ்ணுபுராணம்: "த்யாயன் கிருதே யஜன் யஜ்ஞைஸ் த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" - கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதா யுகத்தில் யஜ்ஞங்களாலும், த்வாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்ரஹம்) கலி யுகத்தில் நாம சங்கீர்த்தனத்தேலேயே எளிதில் கிடைத்துவிடும்.
திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி: "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்"
நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் நாமம் திண்ணம் நாரணமே"
பிருஹத் நாராதீய புராணம்: "ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலௌ நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா" - ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது!!

சரி. பகவானின் திருநாமங்களை சொல்வதால் என்ன கிடைக்கும்? முன்னமே சொன்னபடி (பவித்ரானம் பவித்ரம்யோ ...) பகவத் நாமம் நம்மை புனிதபடுத்தும். ஸ்ருதி, ஸ்ம்ருதி மற்றும் புராணங்களில் நாம சங்கீர்தனத்தின் எண்ணற்ற பலன்கள் கூறப்பட்டுள்ளன.
ஆண்டாளின் திருப்பாவை: "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் நின்றதுவும் தீயினில் தூசாகும்..."
நம்மாழ்வாரின் திருவாய்மொழி: "கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்". பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர், நமது துயர்கள் அனைத்தும் விலகும்.
"ரூபமாரோக்யமர்தாம்ஸ்ச போகாம்ஷைவானுஷங்கிகான்| ததாதி த்யாயதோ நித்யம் அபவர்கப்ரதோ ஹரி:" - ஹரியை துதித்தால் அவர் அவ்வுலகத்திற்கு முக்தி கொடுப்பதோடு, இவ்வுலகில் ரூபம் (அழகு), ஆரோக்யம், போகம் ஆகியவற்றையும் அருள்கிறார்.
"ஹரிர் ஹரதி பாபானி துஷ்டசித்தைர் அபி ஸ்ம்ருதஹ அணிச்சயாபி ஸம் ஸப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவகஹ" - ஹரி என்ற திருநாமம் நமது பாவங்களை அபஹரிக்கிறது. நாம் தெரியாமல் கூறினால் கூட பலன் கொடுக்கவல்லது. எவ்வாறெனில், அது சுடும் என்று தெரியாமல் ஸ்பரிசித்தால் கூட நெருப்பு நம்மை சுடுகின்றதே அதைப்போல.
"ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டசேஷ்டைக பேஷஜம்| கிருஷ்னேதி வைஷ்ணவ மந்த்ர ஷ்ருத்வா முக்தோ பவேந்நரஹ||" - ஸம்ஸாரமென்னும் பாம்பு தீண்டுவதால் துன்பத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு மருந்து போன்றது கிருஷ்ணா என்னும் நாமம். இதை கேட்பதாலேயே (ஷ்ருத்வா) ஒருவர் ஸம்ஸார துன்பத்திலிருந்து முக்தி அடைகிறார். இதை சொல்பவர் அடையும் பலன்களை கேட்கவும் வேண்டுமா??
இனி வரும் இடுகைகளில் பகவத் நாம மேன்மைகளையும் அவன் புகழை விளக்கும் புராணங்களையும் அனுபவிப்போம்.
நமோ நாராயணா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக