ஞாயிறு, பிப்ரவரி 03, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 101

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

104ஓம் வஸவே நம:
வஸந்தி ஸர்வபூதான்யத்ர எவருக்குள் அனைத்து ஜீவராசிகளும் வசிக்கின்றனவோ (வாழ்கின்றனவோ), 
தேஶ்வயமபி வஸதீதி வா எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் (அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக) வசிக்கின்றாரோ 
வஸு: அந்த பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்பட) பகவானுக்குள் வசிக்கின்றன. அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) வசிக்கின்றார். இவ்விரண்டு காரணங்களுக்காகவும், பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸூனாம் பாவகஸ்சாஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வஸுக்களில் நான் தீ.

இத்யுக்தோ வா இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்) குறிப்பிட்டுள்ளபடி 
வஸு: அக்னியின் (தீயின்) வடிவாய் இருப்பதால் பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஸ்ரீமத் பகவத்கீதை விபூதி யோகம் என்னும் 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி) அனைத்துமாய் இருக்கும் பரம்பொருள், எட்டு வஸுக்களுள் அக்னியின் வடிவாக இருக்கிறார். எனவே, பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
105. ஓம் வஸுமனஸே நம:
வஸுஶப்தேன 'வஸு' என்றால் 
தனவாசினா செல்வம் (தனம்) என்று பொருள் 
ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே (எனவே, வஸு என்ற சொல்) அனைத்திலும் சிறந்தவற்றைக் குறிக்கும்
ப்ரஶஸ்தம் மனோ 'மிகச்சிறந்த மனதை' உடையவராதலால் 
யஸ்ய வஸுமனா: பகவான் 'வஸுமனா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ராக விருப்பு 
த்வேஶாதிபி வெறுப்புக்கள் 
க்லேஶைர் போன்ற துன்பங்களாலும் 
மதாதிபிர் கர்வம் போன்ற 
உபக்லேஶைர் துன்பங்களாலும் 
யதோ ந கலுஶிதம் விகாரமடையாத 
சித்தம் மனமுடையவராதலால் 
ததஸ்தன்மன: ப்ரஶஸ்தம் அவரது மனம் 'மிகச் சிறந்ததாகும்'.

'வஸு' என்ற சொல் செல்வம் (தனம்) என்ற பொருளின் மூலம், சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறது. விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால், பகவான் 'மிகச்சிறந்த மனமுடையவர்' என்ற பொருளில் 'வஸுமனா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக