ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 102

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

106. ஓம் ஸத்யாய நம:
அவிததரூபத்வாத் உண்மையே வடிவாக இருப்பதால் 
பரமாத்மா ஸத்ய: பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவிதத என்றால் 'பொய்யல்லாத ஒன்று' அதாவது உண்மை என்று பொருள்.

உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம' (தைத்ரீய உபநிஶத் 2.1.1)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மமானது என்றுமுள்ள ஸ்வரூபமானது (ஸத்யம்), அறிவு ஸ்வரூபமானது (ஞானம்), வரையறுக்கப்படாத ஸ்வரூபமானது (அனந்தம்).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

மூர்த்த புலன்களால் அறியப்படும் ஸ்தூல உருவங்களாகவும்
அமூர்த்தாத்மகத் வாத் வா புலன்களால் அறியப்படமுடியாத ஸூக்ஷ்ம உருவங்களாகவும் இருப்பதால் 
ஸத்ய: (அனைத்துமாகவும் இருப்பதால்) பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும், ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸச்ச த்யச்சாபவத்' (தைத்ரீய உபநிஶத் 2.6.1)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ப்ரஹ்மம்) ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் ஆனார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத் இதி ப்ராணா: '' என்ற சொல் ப்ராணனைக் குறிக்கும்
தி இதி அன்னம் 'த்' என்ற சொல் அன்னத்தைக் குறிக்கும்
யம் இதி திவாகரஸ்தேன '' என்ற சொல் சூரியனைக் குறிக்கும் 
ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய: ப்ராணன் (மூச்சுக்காற்று), அன்னம் (உணவு) மற்றும் சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்) பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் '' என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), 'த்' என்ற அன்னம் (உணவு) மற்றும் '' என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸதிதி ப்ராணாஸ்தீத்யன்னம் யமித்யஸாவாதித்ய:' (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5.6)
ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: '' என்றால் ப்ராணன், 'த்' என்றால் அன்னம், '' என்றால் சூரியன்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்ஸு ஸத்புருஷர்களுக்கு (ஸாதுக்களுக்கு
ஸாதுத்வா நன்மையே (ஸாது) வடிவானவராய் காட்சி அளிப்பதால் 
ஸத்ய: பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால், அவர் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக