சனி, ஜனவரி 11, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 126

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
     

151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

155. ஓம் ஶுசயே நம:
ஸ்மரதாம் அவரை நினைப்பது 
ஸ்துவதாம் துதிப்பது 
அர்ச்சயதாம் ச வழிபடுவது 
பாவனத்வாத் (இவை அனைத்தும் நம்மிடையே உள்ள பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி) நம்மை தூய்மையாக்குகின்றன 
ஶுசி: எனவே, பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நினைத்தலும், துதித்தலும் மற்றும் வழிபடுதலும் நம்மிடையே உள்ள பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி நம்மை தூய்மையாக்குகின்றன. எனவே, பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶுசி என்றால் தூய்மை.
ஆதிசங்கரரின் இந்த உரைக்கு நேரடியான தமிழாக்கம் போல உள்ளது திருப்பாவையின் இந்த வரிகள்: "தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!!!"

156. ஓம் ஊர்ஜிதாய நம:
பலப்ரகர்ஶஶாத்வாத் எண்ணற்கரிய பலமுடையவராதலால் 
ஊர்ஜித: பகவான் 'ஊர்ஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நினைத்தற்கரிய பலம் பொருந்தியவர். எனவே, அவர் 'ஊர்ஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

157. ஓம் அதீந்த்ராய நம:
அதீத்யேந்த்ரம் இந்த்ரனுக்கும் மேலான 
ஸ்திதோ நிலையில் இருப்பவர் 
ஞானைஸ்வர்யாதிபி: ஞானம், செல்வம் முதலிய குணங்களால் 
ஸ்வபாவஸித்தைரிதி தன்னுடைய இயல்பான 
அதீந்த்ரிய: பகவான் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய இயற்கையான ஞானம், செல்வம் முதலிய குணங்களால் இந்த்ரனுக்கு மேம்பட்டவர். எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

158. ஓம் ஸங்க்ரஹாய நம:
ஸர்வேஶாம் அனைத்து ஜீவராசிகளையும் 
ப்ரதிஸம்ஹாராத் (ப்ரளய காலத்தில்) அழிப்பதால் 
ஸங்க்ரஹ: பகவான் 'ஸங்க்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் 'ஸங்க்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக