புதன், ஜனவரி 15, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 127

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
     

151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


159. ஓம் ஸர்காய நம:

ஸ்ருஜ்யரூபதயா படைக்கப்பட்டுள்ள அனைத்தின்  வடிவாகவும் 
ஸர்கஹேதுத்வாத்வா படைப்பின் காரணமாய் இருப்பதாலும் 
ஸர்க: பகவான் 'ஸர்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



படைப்பின் காரணமாயும், (படைக்கப்பட்டுள்ள) ஸ்ருஷ்டியின் வடிவாகவும் தானே இருப்பதால், பகவான் 'ஸர்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



160. ஓம் த்ருதாத்மனே நம:

ஏகரூபேண ஒரே வடிவாய் 
ஜன்மாதிரஹிததயா பிறப்பொன்றுமின்றி 
த்ருத ஆத்மா யேன ஸ (ஆத்மாவைக்) கொண்டுள்ளபடியால் 
த்ருதாத்மா பகவான் 'த்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



பிறப்பொன்றுமின்றி, என்றும் மாறாத ஒரே வடிவத்தைக் உடையவராதலால், பகவான் 'த்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ருத என்றால் தரித்தல்; ஆத்மா - அவ்வாறு தரித்தவரைக் குறிக்கும். பகவான் என்றும் மாறாத வடிவை தரித்திருக்கிறார் என்பது இந்தத் திருநாமத்தின் பொருளாகும்.



161. ஓம் நியமாய நம:

ஸ்வேஶு அவரவரை 
ஸ்வேஶ்வதிகாரேஶு அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்
ப்ரஜா அனைவரையும் 
நியமயதீதி நியமிக்கிறார் 
நியம: எனவே, பகவான் 'நியம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



ஒவ்வொருவரையும், அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்) நியமிப்பதால், பகவான் 'நியம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



162. ஓம் யமாய நம:

அந்தர்யச்சதீதி அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால் 
யம: எனவே, பகவான் 'யம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.



அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால், பகவான் 'யம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நியம: - வெளியிலிருந்து அவரவரை தத்தம் பதவியில் நியமிப்பதன் மூலம் ஆள்கிறார். யம: - அந்தர்யாமியாய் இருந்து அவர்களை உள்ளிருந்தும் ஆள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக