39. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||
இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
363. விக்ஷர:, 364. ரோஹித:,
365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
369. மஹீதர:, 370.
மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||
363. ஓம் விக்ஷராய நம:
விகத: இல்லை
க்ஷரோ நாஶோ 'க்ஷரம்' அதாவது அழிவு (அல்லது தேய்வு)
யஸ்யாஸௌ எவருக்கு
விக்ஷர: (அந்த) பகவான் 'விக்ஷர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு அழிவோ, தேய்வோ கிடையாதோ. எனவே அவர் 'விக்ஷர' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வச்சந்ததயா தன்னிச்சையால்
ரோஹிதாம் மூர்த்தி: சிவந்த வடிவானவராய்
மத்ஸ்யவிஶேஶமூர்த்தி: வா வஹன் ரோஹிதம் எனப்படும் ஒருவகை மீனாக அவதரித்ததால்
ரோஹித: பகவான் 'ரோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னிச்சையால் சிவந்த
வடிவினராய் ரோஹிதம் என்ற ஒரு வகை மீனாக (தனது மச்சாவதாரத்தில்) தோன்றியமையால் அவர்
'ரோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரோஹிதம் என்றால் சிவப்பு என்றும் பொருள், ஒரு வகை மீன் என்றும் பொருள். இதை இரண்டு அர்த்தங்களாகவும் கொள்ளலாம் (சிவந்த வடிவினர் மற்றும் மீனாய்த் தோன்றியவர்). அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து சிவந்த வடிவான மீனாய்த் தோன்றியவர் என்றும் கொள்ளலாம்.
365. ஓம் மார்க்காய நம:
முமுக்ஷவஸ்தம் முக்தியை விழைவோர்
தேவம் பரமாத்மாவை (பகவானை)
மார்கயந்தி இதி தேடுகின்றனர்
மார்க்க: எனவே, பகவான் 'மார்க்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமாத்மாவான பகவான் முக்தியை விழைவோரால் தேடப்படுகிறார். எனவே, அவர் 'மார்க்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமானந்தோ மிக உயர்ந்ததான இன்பத்தை
யேன ப்ராப்யதே தரவல்லதான
ஸ மார்க்க இதி வா மார்க்கமாய் (வழியாக) இருப்பதால்
மார்க்க: பகவான் 'மார்க்க:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
அல்லது, மிக உயர்ந்த இன்பத்தை (முக்தியை) தரவல்ல மார்க்கமாய் தானே இருப்பதால் பகவான் 'மார்க்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
366. ஓம் ஹேதவே நம:
உபாதானம் (இந்த ப்ரபஞ்சத்தின்) மூலப்பொருளாகவும்
நிமித்தம் ச காரணம் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும்
ஸ ஏவேதி அவரே இருப்பதால்
ஹேது: பகவான் 'ஹேது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்கும் மூலப்பொருளாயும்,
உருவாக்குபவராயும் தானே இருப்பதால் பகவான் 'ஹேது:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
மூலப்பொருள் உபாதான காரணமென்றும், அதை உருவாக்குபவர் நிமித்த காரணம் என்றும் அழைக்கப்படுவர். உதாரணமாக, மண், தங்கம், நூல், இரும்பு ஆகியவை உபாதான காரணங்கள். அதைக் கொண்டு பானை, சங்கிலி, சேலை, சுத்தியல் ஆகியவற்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணி (உழைக்கும்) குயவர், பொற்கொல்லர், நெசவாளி, கருமார் ஆகியோர் நிமித்த காரணங்கள். இந்தப் ப்ரபஞ்சத்திற்கு இரண்டுமே பகவான் தான்.
367. ஓம் தாமோதராய நம:
தமாதிஸாதனேனோதாரோத்க்ருஶ்டா புலனடக்கம் முதலிய முயற்சிகளால் 'உதாரமாகும்' அதாவது நமக்குள் தோன்றும்
மதிர்யா தயா அறிவால்
கம்யத இதி அறியப்படுவதால்
தாமோதர: பகவான் 'தாமோதர:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
'தமம்' என்ற புலனடக்கம் முதலிய முயற்சிகளால் நம்முள்ளே தோன்றும் அறிவால் (ஞானத்தால்) அறியப்படுவதால் பகவான் 'தாமோதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'தாம' - தமத்தால் முதலான
முயற்சிகள் + உதர - அவற்றால் மேலெழும் அறிவு. இதனால் அறியப்படுபவர் தாமோதரன்.
'தமாத்தாமோதரோ விபு:' (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.8)
மஹாபாரதம் உத்யோக
பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:
புலனடக்கமும், பெரும் ஒளியும்
கொண்டிருப்பதால் பகவான் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்.
இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
யஶோதயா யசோதையால்
தாம்னோதரே கயிற்றால் வயிற்றுப் பகுதியில்
பத்த இதி வா கட்டப்பட்டதால்
தாமோதர: பகவான் 'தாமோதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்
'ததர்ஶ சால்பதந்தாஸ்யம்
ஸ்மிதஹாஸம் சா பாலகம் |
தயோர்மத்யகதம் பத்தம்
தாம்னா காடம் ததோதரே |
ததஸ்ச தாமோதரதாம் ஸ யயௌ
தாமபந்தனாத் ||' (ப்ரஹ்ம புராணம் 13-14)
ப்ரஹ்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ஆயர்குல மக்கள், தனது தெற்றுப்பல் தெரியும் புன்சிரிப்புடனும், இடையில் உரலுடன் கட்டிய கயிற்றுடனும் அந்த பாலகன் (பாலகிருஷ்ணன்) இரு மருத மரங்களுக்கிடையில் தவழ்ந்து செல்வதைக் கண்டனர். இடையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் பகவான் 'தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்...
‘தாமானி லோகநாமானி தானி
யஸ்யோதராந்தரே |
தேன தாமோதரோ தேவ: ஸ்ரீதர:
ஸ்ரீஸமாஶ்ரரித: ||’
அனைத்தும் உலகங்களையும் 'தாமம்' என்று அழைப்பர். அவை பகவானின் திருவயிற்றில் (உதரத்தில், ப்ரளய காலத்தில்) இருக்கின்றது. எனவே, ஸ்ரீதரன், திருமாமகள் கேள்வனான பகவான் 'தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி வ்யாஸவசனாத்வா தாமோதர: |
ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் 'தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
368. ஓம் ஸஹாய நம:
ஸர்வானபிபவதி அனைவரையும் அடக்கி, தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார்
க்ஷமத இதி வா அனைவரையும் (அவர்களின் செய்கைகளை) பொறுத்துக் கொள்கிறார்
ஸஹ: எனவே, பகவான் 'ஸஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைவரையும் அடக்கி தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார். அனைவரின் (தவறான) செய்கைகளைப் பொறுத்துக் கொள்கிறார். எனவே அவர் 'ஸஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
369. ஓம் மஹீதராய நம:
மஹீம் இந்த பூமியை
கிரிரூபேண மலைகளின் வடிவில்
தரதீதி தாங்குவதால்
மஹீதர: பகவான் 'மஹீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்த பூமியை மலைகளின் வடிவில்
தாங்குகிறார். எனவே, அவர் 'மஹீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சார்யர், முன்பு மஹீதரா என்ற 317வது திருநாமத்தில் பூமிக்கும், பூஜைக்கும் ஆதாரமாக இருந்து தாங்குகிறார் என்று பொருளுரைத்திருந்தார்.
'வனானி விஶ்ணுர்கிரயோ திஸஸ்ச' (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.12.38)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: காடுகள், மலைகள் மற்றும் திசைகளெல்லாம் பகவான் விஶ்ணுவே.
இதி பராஶரோக்தே | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பராசர மஹரிஷியின் கூற்றாகும்.
370. ஓம் மஹாபாகாய நம:
ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி
தாரயன் தேஹம் பல்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு
மஹாந்தி உத்க்ருஶ்டானி 'மஹா' அதாவது மிகச்சிறந்ததான
போஜனானி பாகஜன்யானி உணவுவகைகளை
புங்க்தே இதி உண்கிறார்
மஹாபாக:
எனவே, பகவான் 'மஹாபாக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னிச்சைப்படி வெவ்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு (அவருக்குப் படைக்கப்படும்) பல்வேறு சிறந்த உணவுகளை உட்கொள்கிறார். எனவே, அவர் 'மஹாபாக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹான் மிகவும்
பாக: பாக்யம் 'பாக' அதாவது சிறந்ததான
அஸ்ய அவதாரேஶு அவரது அவதாரங்கள்
இதி வா மஹாபாக: எனவே பகவான் 'மஹாபாக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மிகச்சிறந்த (பெரும் பாக்கியம் படைத்த) அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'மஹாபாக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
371. ஓம் வேகவதே நம:
வேகோ 'வேக' என்றால்
ஜவ்ஸதத்வான் விரைவாகச் செல்பவர்
வேகவான் எனவே, பகவான் 'வேகவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிக விரைவாகச் செல்பவராதலால் பகவான் 'வேகவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அனேஜதேகம் மனஸோ ஜவீய:’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)
ஈசாவாஸ்ய
உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த ஆத்மாவானது சலனமற்றது. எனினும், மனதைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியது.
ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில்
விஶ்வமஶ்னாதீதி இந்தப் ப்ரபஞ்சத்தை உண்கிறார்
அமிதாஶன: எனவே பகவான் 'அமிதாஶன:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ப்ரளயத்தின் பொழுது) அழிக்கும் காலத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தை உண்கிறார். எனவே பகவான் 'அமிதாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக