53. உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |
ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||
இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
494. உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
499. ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||
494. ஓம் உத்தராய நம:
ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்
பந்தனாத் தளைகளிலிருந்து
உத்தரதி (நம்மை) விடுவிக்கிறார்
இதி உத்தர: எனவே, பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, இறப்பென்னும் இந்த
சம்சாரத்தின் தளைகளிலிருந்து (நம்மை) விடுவிக்கிறார். எனவே, பகவான் 'உத்தர:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வ அனைவரைக் காட்டிலும்
உத்க்ருஶ்ட மேலானவராதலால்
இதி வா உத்தர: பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரைக்காட்டிலும் மேலானவராதலால், பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'விஶ்வஸ்மாதிந்த்ர உத்தர:'
அனைவரைக் காட்டிலும் பரம்பொருள்
(இந்த்ர) உயர்ந்தவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
இங்கு இந்த்ர என்ற பதம் பரம்பொருளான பரமாத்மாவையே குறிக்கிறது. தேவர்களின் தலைவரான இந்திரனை அல்ல.
495. ஓம் கோபதயே நம:
கவாம் ஆவினங்களை
பாலனாத் காப்பவராக (பசுக்களை மேய்ப்பவராக)
கோபவேஶதரோ இடையனாக (ஆயர்குலத்தவராக) தோன்றியதால்
கோபதி: பகவான் (கிருஷ்ணர்) 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது கிருஷ்ணாவதாரத்தில் ஆவினங்களை காப்பவராக, இடையனாக தோன்றியதால் பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கௌர்மஹீ: பூமாதேவியே 'கௌ' என்றும் அழைப்பர்
தஸ்யா: பதித்வாத்வா அவரின் (பூமாதேவியின்) கணவரானபடியால்
கோபதி: பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, 'கௌ' என்று அழைக்கப்படும் பூமாதேவியின் கணவரானபடியால் பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
496. ஓம் கோப்த்ரே நம:
ஸமஸ்தபூதாநி அனைத்து உயிரினங்களையும்
பாலயன் காக்கிறார்
ரக்ஷகோ ஜகத: இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் காக்கிறார்
இதி கோப்தா எனவே, பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் காக்கிறார். எனவே பகவான் 'கோப்தா' என்று திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
497. ஓம் ஞானகம்யாய நம:
ந கர்மணா வெறுமனே கடமைகளை ஆற்றுவதால் அல்ல
ந ஞானகர்மப்யாம் ஞானமும், செயலும் கலந்து செயல்படுவதால் அல்ல
வா கம்யதே அவரை (பகவானை) அடைவது
கிந்து ஆயினும்
ஞானேன (வேதங்கள், உபநிடதங்கள், அற நூல்களின் மூலம் பெறப்படும்) அறிவினால்
கம்யதே அவர் அடையப்படுகிறார்
இதி வா ஞானகம்ய: எனவே, பகவான் 'ஞானகம்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கடமைகளை ஆற்றுவதாலோ, ஞானமும், கர்மமும் கலந்து செயல்படுவதாலோ அடையமுடியாதவர் (அறியப்பட முடியாதவர்) பகவான். ஆயினும், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் அறநூல்கள் மூலம் பெறப்படும் தூய அறிவால் பகவானை அறியவும், அடையவும் முடியும். எனவே, அவர் 'ஞானகம்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
498. ஓம் புராதனாய நம:
காலேன காலத்தால்
அபரிச்சின்னத்வாத் வரையறுக்கப்படாதவர், ஆதலால்
புராபி (அனைவருக்கும்) மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே
பவதீதி இருப்பவர்
புராதன: பகவான் 'புராதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காலம் என்னும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். காலத்தால் வரையறுக்கப்படாதவர். எனவே, அவர் அனைவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே (எவரும் தோன்றும் முன்னரே) இருப்பவர். எனவே அவர் 'புராதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
499. ஓம் ஶரீரபூதப்ருதே நம:
ஶரீர (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) உடலை
ஆரம்பக தோற்றுவிக்கும்
பூதானம் (நீர், நிலம், நெருப்பு போன்ற) பூதங்களை
பரணாத் தாங்குகிறார்
ப்ராணரூபதர: (அவற்றின்) உயிராக இருந்து
ஶரீரபூதப்ருத் எனவே, பகவான் 'ஶரீரபூதப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு உயிரினத்தின் உடலும் பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களால் ஆனது. அந்த பஞ்சபூதம் முதலிய தத்துவங்களையும் அவற்றின் உயிராக இருந்து பகவான் தாங்குகிறார். எனவே அவர் 'ஶரீரபூதப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
500. ஓம் போக்த்ரே நம:
பாலகத்வாத் (அனைவரையும்) காப்பாற்றுவதால்
போக்தா
பகவான் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஸ்ரீமன் நாராயணன் காக்கும் கடவுளாவார். அனைவரையும் காப்பாற்றுவதால் அவர் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமானந்த உயரிய ஆனந்தத்தை
ஸந்தோஹ அளவிடமுடியாத
ஸம்போகாத்வா அனுபவிப்பவராதலால்
போக்தா பகவான் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் எப்பொழுதும் உயர்ந்த, அளவிடமுடியாத ஆனந்தத்தை இடைவிடாது அனுபவிக்கிறார். எனவே அவர் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி நாம்னாம் பஞ்சமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (போக்தா என்னும் இந்த திருநாமம் வரையில்) ஐநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
501. ஓம் கபீந்த்ராய நம:
கபிஸ்சாஸா(வ்) கபி அதாவது பன்றியின் உருவத்துடன் இருப்பதோடு
இந்த்ரஸ்சேதி இந்திரனாகவும் (அதாவது சிறந்தவராகவும்) இருப்பதால்
கபிர்வராஹ: 'கபி' என்றால் வராஹம் அதாவது பன்றி
வாராஹம் அந்த பன்றியின்
வபுராஸ்தித: (ஹிரண்யாக்ஷனைக் கொல்ல வராஹ அவதாரம் எடுத்த பொழுது) உடலைத் தாங்கியவராதலால்
கபீந்த்ர: பகவான் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொல்ல
பன்றியின் உருவத்தில் (கபி) அவதரித்தார். இவ்வாறு கபியாகவும் (பன்றியின் வடிவோடு
அவதரித்தவரும்) இந்த்ரனாகவும் (அனைவரைக் காட்டிலும் சிறந்தவராகவும்) இருப்பதால்
பகவான் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கபீனாம் 'கபி' அதாவது வாநரானாம் குரங்குகளின்
இந்த்ர: (சேனைக்குத்) தலைவராக இருந்ததால்
கபீந்த்ர: ராகவோ வா பகவான் ஸ்ரீராமர் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது இராமாவதாரத்தின் பொழுது 'கபி' அதாவது குரங்குகளின் சேனைக்குத் தலைவராக இருந்தபடியால் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
502. ஓம் பூரிதக்ஷிணாய நம:
பூரய: பஹ்வய: 'பூரய:' என்றால் நிறைய
யக்ஞதக்ஷிணா: வேள்வியின் காணிக்கைகள்
தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு
தர்ஶயதோ அளிக்கின்றனர்
யக்ஞம் குர்வதோ வேள்விகளை புரியும் பொழுது
வித்யந்த இதி முடிவில்
பூரிதக்ஷிண: எனவே பகவான் 'பூரிதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு புரியப்படும் வேள்விகளின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை பகவானுக்கு (அவரின் ப்ரதியான வேள்வியை புரியும் அந்தணர்களுக்கு) அளிக்கின்றனர். எனவே, பகவான் 'பூரிதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்திற்கு மாற்று உரையாக "பகவான் தாமே அறத்தை
நிலைநிறுத்தும் பொருட்டு பற்பல வேள்விகளை புரிந்து, அவற்றின் முடிவில் நிரம்ப
காணிக்கைகளை மற்றவருக்கு வழங்கினார். எனவே, அவர் 'பூரிதக்ஷிண:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்" என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக