55. ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம: |
அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||
இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
513. ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம: |
517. அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||
513. ஜீவாய நம:
ப்ராணான் 'ப்ராணனை' (உயிரை, உயிர்மூச்சை)
க்ஷேத்ரஞ்ஞ ரூபேண அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் 'க்ஷேத்ரஞ்ஞராய்'
தாரயன் தாங்குவதால்
ஜீவ உச்யதே பகவான் 'ஜீவ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் 'க்ஷேத்ரஞ்ஞராய்' அவற்றின் (அந்த ஜீவராசிகளின்) 'ப்ராணனை' (உயிரை, உயிர்மூச்சை) தாங்குவதால் பகவான் 'ஜீவ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
514. வினயிதாஸாக்ஷிணே நம:
வினயித்வம் வினயிதா 'வினயிதா' என்றால் பணிவு என்று பொருள்
தாம் ச ஸாக்ஷாத் தானே நேரடியாக
பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்)
ப்ரஜானாமிதி அனைத்து உயிரினங்களிடமும்
வினயிதாஸாக்ஷி எனவே பகவான் 'வினயிதாஸாக்ஷி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் (அவற்றுக்கு தம்மிடம்) உள்ள பணிவை தானே நேரடியாக அறிகிறார். எனவே அவர் 'வினயிதாஸாக்ஷி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதவா அல்லது
நயதேர்கதிவாசினோ 'கதி' அதாவது நடையை (செல்லும் வழியை) குறிக்கும் "நீ" என்ற வேர்ச்சொல்லிற்கு
ரூபம் வினயிதா வினயிதா என்று ஒரு வடிவம் உண்டு,
அஸாக்ஷி அஸாக்ஷாத்த்ருஶ்டா 'அஸாக்ஷி' அதாவது எதையும் பார்க்காதவர்
ஆத்மாதிரிக்தம் ஆத்மாவைத் தவிர மற்றொரு
வஸ்து ந பஶ்யதீத்யர்த்த: பொருளைக் காணாதவர் என்று பொருள். இவ்வாறு வழிநடத்துபவர் (வினயிதா), மற்றும் ஆத்மாவைத் தவிர்த்து மற்றொரு பொருளைக் காண்பதவர் (அஸாக்ஷி) என்று இரு திருநாமங்களாகக் கொள்ளலாம்.
அல்லது, 'கதி' அதாவது வழி என்ற
பொருளில் 'வினயிதா' என்ற திருநாமத்தாலும், ஆத்மாவைத்தவிர மற்றொருப் பொருளைப்
பார்க்காதவர் என்ற பொருளில் 'அஸாக்ஷி' என்ற திருநாமத்தாலும் பகவான்
அழைக்கப்படுகிறார் (என்றும் பொருள் கொள்ளலாம்).
இங்கு, இரண்டு திருநாமங்களாக ஆச்சார்யாள் உரை அளித்திருந்தாலும், தனது ஸஹஸ்ரநாம கணக்கில் இதை ஒரே திருநாமமாகத் தான் கணக்கிட்டுள்ளார். ஆகவே, முதல் உரையையே பிரதானமாகக் கொள்ளவேண்டும்.
515. முகுந்தாய நம:
முக்திம் மோக்ஷத்தை
ததாதி இதி அளிப்பதால்
முகுந்த: பகவான் 'முகுந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் 'ப்ருஶோதரா' வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும்.
அக்ஷரஸாம்யான்நிருக்திவசனாத் எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும்
நைருக்தானாம் நிருக்திகாரர்கள் பகவானை
முகுந்த இதி நிருக்த: முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.
முக்தியை அளிப்பதால் பகவான்
'முகுந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ப்ருஶோதரா' வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும்.
எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும்
நிருக்திகாரர்கள் பகவானை முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.
நிருக்தி: வேதாங்கங்கள் ஆறினுள் ஒன்று. இந்த வேதாங்கம், வெவ்வேறு வார்த்தைகளின் சேர்க்கைகளையும், அவை உருவான விதத்தையும் விளக்குவதாகும்.
516. அமிதவிக்ரமாய நம:
அமிதா அபரிச்சின்னா 'அமித' அதாவது அளவிடமுடியாத
விக்ரமாஸ்வய: பாதவிக்ஷேபா விக்ரம அதாவது மூன்றடிகளைக் கொண்டவர்
அஸ்ய அமிதவிக்ரம: எனவே, பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் மூன்றடிகள் அளவிடமுடியாதவை. எனவே, அவர் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமிதம் அளவிடமுடியாத
விக்ரமணம் ஶௌர்யமஸ்யேதி வா பராக்ரமம் (பலம், சூரத்தனம்) உடையவராதலால்
அமிதவிக்ரம: எனவே, பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அளவிடமுடியாத பராக்ரமம்
உடையவராதலால் பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முதல் பொருளில் விக்ரம என்பதை 'நடை' அல்லது 'அடிகள்' என்றும், இரண்டாவது பொருளில் விக்ரம என்றால் பராக்ரமம் என்றும் பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யாள்.
517. அம்போநிதயே நம:
அம்பாம்ஸி 'அம்ப' அதாவது
தேவாதயோSஸ்மின்னிதீயந்த தேவர்களும், மற்றோரும் பகவானுக்குள் வசிப்பதால்
இதி அம்போநிதி: பகவான் 'அம்போநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்குள் 'அம்ப' என்றழைக்கப்படும் தேவர்களும், மற்றவர்களும் வசிக்கின்றனர். எனவே, அவர் 'அம்போநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'தானி வா ஏதானி சத்வார்யம்பாஸி | தேவா மனுஶ்யா பிதரோSஸுரா:'
இங்கு நால்வகைப்பட்டோர் 'அம்பர்கள்'
என்றழைக்கப்படுகின்றன. தேவர்கள், மானிடர்கள், பித்ருக்கள் மற்றும் அஸுரர்கள்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ஸாகரோ வா கடலின் வடிவாக இருப்பதால்
அம்போநிதி: பகவான் 'அம்போநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, கடலின் வடிவாக இருப்பதால் பகவான் 'அம்போநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸரஸாஸ்மி ஸாகர:' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.24)
ஸ்ரீமத்
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நீர்நிலைகளில் நான் கடல்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
518. அனந்தாத்மனே நம:
தேஶத: இடம்
காலதோ காலம்
வஸ்துஸ்ச பொருள் (உருவம் முதலியன) போன்ற
அபரிச்சின்னத்வாத் எல்லைகள் அற்றவராதலால்
அனந்தாத்மா பகவான் 'அனந்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இடம், காலம், பொருள் போன்ற எல்லைகள்
அற்றவராதலால் (இவற்றால் கட்டுப்படுத்த இயலாதவர் ஆதலால்) பகவான் 'அனந்தாத்மா' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எந்த ஒரு ஜீவனும் இந்த மூன்றினால் கட்டுப்பட்டுள்ளவர். ஒரு இடத்தில் இருப்போர் மற்றொரு இடத்தில் இருப்பதில்லை. ஒரு காலகட்டத்தில் இருப்பவர் என்றும், எக்காலத்திலும் இருப்பதில்லை (இது ப்ரஹமா முதலான தேவர்களுக்கும் பொருந்தும்). ஒரு உருவில், ஒரு பொருளாய் இருப்பவர் மற்றொரு பொருளாய், மற்றொரு உருவத்தில் இருப்பதில்லை. பகவானுக்கு இத்தகைய எல்லைகள் இல்லை. அவர் எல்லாவிடத்திலும், எக்காலத்திலும், எல்லாமுமாய் இருப்பவர் என்பதையே இந்த திருநாமம் குறிக்கிறது.
519. மஹோததிஶயாய நம:
ஸம்ஹ்ருத்ய (ப்ரளய காலத்தில்) அழித்து
ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும்
ஏகார்ணவம் ஜகத்க்ருத்வா இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் நீர்மயமாகும்படி செய்து
அதிஶேதே அதன் மீது பள்ளிகொண்டுள்ளார்
மஹோததி மிகப் பெரியதானதொரு கடலில்
மஹோததிஶய: எனவே பகவான் 'மஹோததிஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ப்ரளய காலத்தில் அனைத்து
உயிரினங்களையும் அழித்து இந்தப் ப்ரபஞ்சத்தை நீர்மயமாகும்படி செய்கிறார். அந்த
மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடலில் பள்ளிகொண்டு அருள்கிறார். எனவே அவர்
'மஹோததிஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹோததி = மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடல் + ஶயதி - பள்ளி கொள்ளுதல் = மஹோததிஶய:
520. அந்தகாய நம:
அந்தம் கரோதி முடிப்பதனால் (அழிப்பதனால்)
பூதாநாமிதி அனைத்து உயிரினங்களையும்
அந்தக:
பகவான் 'அந்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'தத்கரோதி ததாசஶ்டே' (சுராதிகணவார்த்திகம்) இதி ணிசி இந்த வார்த்திக ஸூத்ரத்தின் படி 'ணி' விகுதி (அந்த என்ற பதத்தோடு) சேர்கிறது.
'ண்வுல்த்ருசௌ' (பாணினி ஸூத்ரம் 3.1.133) இதி
'யுவாரநாகௌ' (பாணினி ஸூத்ரம் 7.1.1) இதி அகாதேஶ: இந்த பாணினி ஸூத்ர விதிகளின்படி 'அந்த’ என்ற பதத்தோடு 'அக' என்ற விகுதி சேர்ந்து 'அந்தக:' என்ற சொல் உருவாகிறது.
(அவரவரது கால முடிவிலும், ப்ரளயத்தின்
பொழுதும்) அனைத்து உயிரினங்களையும் முடிப்பதால் (அழிப்பதால்) பகவான் 'அந்தக:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சார்யாள் வார்த்திகம் மற்றும் பாணினி ஸூத்ரங்களின் படி 'அந்தக:' என்ற சொல் எவ்வாறு உருவாகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக