வெள்ளி, மே 27, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 207

60. பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:

ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||

இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

558. பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |

563. ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||  

558. ஓம் பகவதே நம:

‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் "பக" என்ற சொல்லினால் குறிக்கப்படும். 

ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால் 

பகவான் ஸ்ரீமந்நாராயணன் 'பகவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் 'பகவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||' (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

559. ஓம் பகக்னே நம:

ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை 

ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில் 

ஹந்தீதி அழிப்பதால் 

பகஹா பகவான் 'பகஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் 'பகஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைவரின் "பக"த்தையும் "ஹ" - அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார். 

560. ஓம் ஆனந்தினே நம:

ஸுகஸ்வரூபத்வாத் ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால் 

ஆனந்தீ பகவான் 'ஆனந்தீ' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால் பகவான் 'ஆனந்தீ' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸம்பத்ஸம்ருதத்வாத் அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால் 

ஆனந்தீ வா பகவான் 'ஆனந்தீ' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது,  அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால் பகவான் 'ஆனந்தீ' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

561. ஓம் வனமாலினே நம:

பூததன்மாத்ரரூபாம் ஐம்பூதங்களின் நுண்வடிவான  தன்மாத்திரைகளின் பிரதிநிதியான 

வைஜயந்த்யாக்யாம் 'வைஜயந்தி' எனும் பெயர் கொண்ட 

வனமாலாம் வஹன் வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால் 

வனமாலீ பகவான் 'வனமாலீ' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஐம்பூதங்களின் ஸூக்ஷ்ம வடிவான  தன்மாத்திரைகளின் பிரதிநிதியான 'வைஜயந்தி' எனும் பெயர் கொண்ட வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால் பகவான் 'வனமாலீ' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

562. ஓம் ஹலாயுதாய நம:

ஹலமாயுதம் கலப்பையை ஆயுதமாக (தரித்திருந்ததால்) 

அஸ்யேதி ஹலாயுத: பகவான் 'ஹலாயுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

பலபத்ராக்ருதி: பலராமனின் வடிவாக

பலராம அவதாரத்தின் பொழுது பகவான் கலப்பையை ஆயுதமாகத் தரித்திருந்ததால் அவர் 'ஹலாயுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

563. ஓம் ஆதித்யாய நம:

அதித்யாம் அதிதி தேவியின் புதல்வராக 

கஶ்யபாத் காஶ்யப மஹரிஶி மூலமாக 

வாமனரூபேண வாமனரின் வடிவில் 

ஜாத பிறந்தபடியால் 

ஆதித்ய: பகவான் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வாமன அவதாரத்தில் காஶ்யப மஹரிஶி மூலமாக அதிதி தேவியின் புதல்வராக தோன்றினார். எனவே அவர் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

564. ஓம் ஜ்யோதிராதித்யாய நம:

ஜ்யோதிஶி ஒளி வடிவாய் 

ஸவித்ருமண்டலே சூரிய மண்டலத்தினுள் 

ஸ்திதோ வீற்றிருப்பதால் 

ஜ்யோதிராதித்ய: பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரிய மண்டலத்தினுள் ஒளி வடிவாக வீற்றிருப்பதால் பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

565. ஓம் ஸஹிஶ்ணவே நம:

த்வந்த்வானி இருமைகளை 

ஶீதோஶ்ணாதீனி குளிர், வெப்பம் போன்ற 

ஸஹத பொறுத்துக் கொள்வதால் 

இதி ஸஹிஶ்ணு: பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குளிர், வெப்பம் போன்ற இருமைகளை பொறுத்துக் கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 144வது திருநாமத்தில் 'ஸஹிஶ்ணு:' என்ற பதத்திற்கு ஆசார்யாள் “ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று பொருளுரைத்திருந்தார்.. 

566. ஓம் கதிஸத்தமாய நம:

கதிஸ்சாஸௌ அனைவருக்கும் புகலிடமாகவும் ஸத்தமஸ்சேதி 

அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால் 

கதிஸத்தம: பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் புகலிடமாகவும், அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால் பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்திலும் உயர்ந்த புகலிடம் பகவானே என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக