செவ்வாய், மே 03, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 206

59. வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத: 

வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||

இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

547. வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத:  |

553. வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||  

547. ஓம் வேதஸே நம:

விதாதா அனைத்தையும் படைப்பவராதலால் 

வேத பகவான் 'வேத' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ப்ருஶோதராதித்வாத் 'ப்ருஶோதரா' கணத்தை சேர்ந்த சொல்லாதலால் 

ஸாதுத்வம் 'வேத' என்ற இந்த சொல் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.

அனைத்தையும் படைப்பவராதலால் பகவான் 'வேத' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த 'வேத' என்ற திருநாமம் நான்காவது 'த' வை உடையது. மறைகளைக் குறிக்கும் 'வேதம்' மூன்றாவது 'த' வை உடையது. 

548. ஓம் ஸ்வாங்காய நம:

ஸ்வயமேவ (பகவான்) தானே 

கார்யகரணே செயல்களைச் செய்கையில் உதவிபுரியும் 

அங்க அங்கமாகிய 

ஸஹகாரீதி 'ஸஹகாரி' அதாவது உபகரணங்களாய் இருப்பதால் 

ஸ்வாங்க: பகவான் 'ஸ்வாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு செயலைப் புரிவதற்கும் மூன்று காரணங்கள் தேவை. முதலாவது மூல காரணம் (உபாதான காரணம் - ஆங்கிலத்தில் Raw Material). இரண்டாவது அந்த செயலைப் புரிபவர் (நிமித்த காரணம் - Doer). மூன்றாவது அந்த செயலைப் புரிவதற்கு துணை புரியும் கருவிகள் (ஸஹகாரி காரணம்). பகவான் தானே (ஸ்வயம்) ஒரு காரியத்தின் அங்கமாக, அதன் ஸஹகாரி காரணமாக இருப்பதால் அவர் 'ஸ்வாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காரியம் எனப்படுவது பரப்ரஹ்மத்தின் படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

549. ஓம் அஜிதாய நம:

ந கேனாபி அவதாரேஶு ஜித எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர் 

இதி அஜித: ஆகையால், அவர் 'அஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர், ஆகையால், அவர் 'அஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

550. ஓம் க்ருஶ்ணாய நம:

க்ருஶ்ண: க்ருஶ்ணத்வைபாயன: 'க்ருஶ்ணத்வைபாயனர்' என்றழைக்கப்படும் வ்யாஸ பகவானே 'க்ருஶ்ணர்' என்று அழைக்கப்படுகிறார்.

'க்ருஶ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் |

கோ ஹ்யன்ய: புண்டரீகாக்ஷான்மஹாபாரதக்ருத்பவேத் ||’

(ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.4.5)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் வேத வ்யாஸரை ப்ரபு ஸ்ரீமந்நாராயணனாகவே அறிவாயாக. தாமரைக் கண்ணனான பகவானைத் தவிர வேறு யாரால் மஹாபாரதம் என்னும் இதிஹாஸத்தை இயற்றி இருக்க முடியும்?

இதி விஶ்ணு புராண வசனாத் | இந்த ஸ்ரீவிஶ்ணு புராண வாக்கியத்தின் படி (பகவான் வேத வ்யாஸரே க்ருஶ்ணர், க்ருஶ்ணரே வ்யாஸர்). 

551. ஓம் த்ருடாய நம:

ஸ்வரூபஸாமர்த்யாதே: அவரது இயற்கையான தனித்தன்மை (ஸ்வரூபம்) மற்றும் ஸாமர்த்தியம் முதலிய குணங்களுக்கு  

ப்ரத்யுச்யபாவாத் (ப்ரத்யுச்ய அபாவாத்) குறைவு என்பதே இல்லை 

த்ருட: எனவே பகவான் 'த்ருட:'  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இயற்கையான தனித்தன்மையும், அவரது ஸாமர்த்யம் முதலிய குணங்களுக்கும் என்றுமே குறைவு உண்டாவதில்லை. எனவே அவர் 'த்ருட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

552. ஓம் ஸங்கர்ஶணோச்யுதாய நம:

ஸம்ஹார ஸமயே இந்தப் ப்ரபஞ்சத்தின் முடிவில் அதை அழிக்கும் ஸம்ஹார காலத்தில் 

யுகபத்ப்ரஜா: அனைத்து உயிரினங்களையும் ஒருசேர 

ஸங்கர்ஶதீதி அவற்றின் அழிவை நோக்கி இழுப்பதால் 

ஸங்கர்ஶண: பகவான் 'ஸங்கர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ந ச்யோததி என்றும் அழிவதில்லை 

ஸ்வரூபாதி அவரது இயற்கையான தன்மை முதலியவை 

இதி அச்யுத: எனவே பகவான் 'அச்யுத:' என்று அழைக்கப்படுகிறார். 

ஸங்கர்ஶணோச்யுத: இதி நாமைகம் ஸ விஶேஶணம் இவ்வாறு 'ஸங்கர்ஶணராகவும்' 'அச்யுதராகவும்' இருப்பதால் 'ஸங்கர்ஶணோச்யுத:' என்ற இந்த இரண்டு பதங்களும் சேர்ந்த இந்த திருநாமம் பகவானை விசேஷமாக குறிப்பதாகும். 

பகவான் இந்தப் ப்ரபஞ்சம் முடியும் தறுவாயில், ப்ரளய காலத்தில், அனைத்து உயிரினங்களையும் அவற்றின் முடிவை நோக்கி இழுக்கிறார். எனவே அவர் ஸங்கர்ஶணர் என்று அழைக்கப்படுகிறார். அவரது இயற்கையான தன்மை முதலியவை என்றுமே குறைவுபடாது இருப்பதால் 'அச்யுதர்' என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு, 'ஸங்கர்ஶணராகவும்' 'அச்யுதராகவும்' இருப்பதால் பகவான் 'ஸங்கர்ஶணோச்யுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ஸம்ஹார காலத்திலும் (ஸங்கர்ஶணராய் இருக்கும் பொழுதும்) தனது மேன்மை குறையாமல் அச்யுதராய் இருக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

553. ஓம் வருணாய நம:

ஸ்வரஶ்மீனாம் தனது கிரணங்களை 

ஸம்வரணாத் மூடிக்கொள்வதால் 

ஸாயங்கத: ஸூர்யோ மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் இருக்கும் பகவான் 

வருண: 'வருண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் பகவான் தனது கிரணங்களை மூடிக்கொள்கிறார் (ஸம்வரணம் செய்கிறார்). எனவே அவர் 'வருண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'இமம் மே வருணம் ஶ்ருதீ ஹவம்'

இதி மந்த்ரவர்ணாத் | இந்த மந்திரத்தில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

554. ஓம் வாருணாய நம:

வருணஸ்யாபத்யம் வருணனின் புதல்வர்களான 

வசிஶ்டோ(S)கஸ்த்யோ வா வசிஶ்டரும், அகஸ்தியரும் (அவர்களின் அந்தராத்மாவான பகவான்) 

வாருண: 'வாருண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வசிஶ்டர் மற்றும் அகஸ்தியரின் வடிவில் வருணனின் புதல்வர்களாக இருப்பதால் அவர் 'வாருண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 555. ஓம் வ்ருக்ஷாய நம:

வ்ருக்ஷ இவ மரங்களைப் போன்று 

அசலதயா ஸ்தித இதி அசையாது நிலைபெற்று இருப்பதால் 

வ்ருக்ஷ: பகவான்  'வ்ருக்ஷ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மரங்களைப் போன்று அசையாது நிலைபெற்று இருப்பதால் பகவான்  'வ்ருக்ஷ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஶ்டத்யேக:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு மரத்தைப் போன்று அசையாது (மரம் எவ்வாறு அசையாது ஓரிடத்தில் நிலைபெற்று இருக்கிறதோ, அவ்வாறே) தன்னுடைய இயற்கையான மேன்மையில் (அந்த பரப்ரஹ்மம்) நிலைபெற்று இருக்கிறார். 

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

556. ஓம் புஶ்கராக்ஷாய நம:

ஹ்ருதய புண்டரீகே அனைவரின் உள்ளத்தாமரைகளிலும் 

சிந்தித: த்யானிக்கப்படுவதால் 

புஶ்கராக்ஷ: பகவான் 'புஶ்கராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைவரின் (குறிப்பாக யோகிகளின்) உள்ளத்தாமரைகளிலும் த்யானிக்கப்படுவதால் பகவான் 'புஶ்கராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வரூபேண தனது இயற்கையான வடிவில் 

ப்ரகாஶத இதி வா ஒளிவீசுவதால் (ஒளியுடன் திகழ்வதால்) 

புஶ்கராக்ஷ: பகவான் 'புஶ்கராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான வடிவில் மிகுந்த ஒளியுடன் பிரகாசிப்பதால் அவர் 'புஶ்கராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

557. ஓம் மஹாமனஸே நம:

ஸ்ருஶ்டிஸ்தித்யந்தகர்மாணி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை 

மனஸைவ கரோதீதி (வேறு கரணங்கள் இன்றி) தனது மனதாலேயே புரிவதால் 

மஹாமனா: பகவான் 'மஹாமனா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை வேறு கரணங்கள் இன்றி தனது மனதாலேயே புரிகிறார். எனவே அவர் 'மஹாமனா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'மனஸைவ ஜகத்ஸ்ருஶ்டிம் ஸம்ஹாரம் ச கரோதி ய: |' (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் தனது மனதாலேயே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் புரிகிறாரோ (செய்கிறாரோ)…

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக