ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 205

58. மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ 

குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர:  ||

இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

538. மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |

542. குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||  

538. ஓம் மஹாவராஹாய நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகப்பெரியவரும் 

வராஹஸ்சேதி பன்றி வடிவெடுத்தவருமாதலால் 

மஹாவராஹ: பகவான் 'மஹாவராஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகப்பெரியவர் (மிகவும் மஹிமை பொருந்தியவர் என்றும் கொள்ளலாம்). பன்றி வடிவெடுத்தவர். எனவே அவர் 'மஹாவராஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகப்பெரிய வராஹ உருவம் எடுத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். 

539. ஓம் கோவிந்தாய நம:

கோபிர்வாணீபிர் 'கோ' என்றால் வாக்கு (அதாவது வேதங்கள்) என்று பொருள் 

விந்ததே அடையப்படுவர் 

கோவிந்த: எனவே பகவான் 'கோவிந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் 'கோ' ஶப்தத்தால் குறிக்கப்படும் வேதங்களால் (மட்டுமே) அடையப்படுபவர். எனவே அவர் 'கோவிந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வேத்தி அறியப்படுபவர் 

வேதாந்தவாக்யைரிதி வா வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே) 

கோவிந்த: எனவே பகவான் 'கோவிந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே) அறியப்படுகிறார். எனவே அவர் 'கோவிந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கோ' என்றால் வேதங்களைக் குறிக்கும் என்பது இந்த இரண்டு விளக்கங்களும் பொது. முதல் விளக்கத்தில் 'கோ' + 'விந்ததி' = கோவிந்த:. இரண்டாவது விளக்கத்தில் 'கோ' + 'வேத்தி' = கோவிந்த:.

'கோபிரேவ யதோ வேத்யோ கோவிந்த: ஸமுதாஹ்ருத:'

ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது: வேதங்களைக் கொண்டே (வேத, வேதாந்த வாக்யங்களைக் கொண்டே) அவரை அறிந்துகொள்ள முடியும். எனவே அவர் 'கோவிந்த:' என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஸ்ரீவிஶ்ணுதிலகே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது. 

540. ஓம் ஸுஶேணாய நம:

ஶோபனா அழகான 

ஸேனா கணாத்மிகா படைக்கூட்டங்களை (சேனைகளை) யஸ்யேதி 

ஸுஶேண: உடையவராதலால் பகவான் 'ஸுஶேண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகான படைக்கூட்டங்களை (சேனைகளை) உடையவராதலால் பகவான் 'ஸுஶேண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

541. ஓம் கனகாங்கதினே நம:

கனகமயானி பொன்மயமான 

அங்கதானி அஸ்யேதி தோள்வளைகளை உடையவராதலால் (அணிந்திருப்பவர்) 

கனகாங்கதி பகவான் 'கனகாங்கதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பொன்மயமான தோள்வளைகளை அணிந்திருப்பவர். எனவே அவர் 'கனகாங்கதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

542. ஓம் குஹ்யாய நம:

ரஹஸ்யோபநிஶத் ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே 

வேத்யத்வாத் அறியப்படுபவராதலால் 

குஹ்ய: பகவான் 'குஹ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே அறியப்படுபவராதலால் பகவான் 'குஹ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

குஹாயாம் ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில் 

நிஹித வீற்றிருக்கிறார் 

இதி வா குஹ்ய: எனவே பகவான் 'குஹ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் அனைவரது இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில் வீற்றிருக்கிறார் (மறைந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்). எனவே பகவான் 'குஹ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

543. ஓம் கபீராய நம:

ஞானைஶ்வர்ய அறிவு, செல்வம் 

பலவீர்யாதிபிர் பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும் 

கம்பீரோ மேன்மையுடையவர் ஆதலால் 

கபீர: எனவே பகவான் 'கபீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறிவு, செல்வம், பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும் மேன்மையுடையவர் ஆதலால் பகவான் 'கபீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

544. ஓம் கஹனாய நம:

துஶ்ப்ரவேஶத்வாத் அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால் 

கஹன: பகவான் 'கஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால் பகவான் 'கஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரய மூன்று நிலைகளிலும் (ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி) உள்ள 

பாவ அபாவ விருப்பங்கள் மற்றும் விருப்பமற்ற தன்மைகளை 

ஸாக்ஷித்வாத் ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால் 

கஹனோ வா பகவான் 'கஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி ஆகிய மூன்று நிலைகளில் உள்ள நமது விருப்பு மற்றும் விருப்பமற்ற தன்மைகளை ஒரு ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால் 'கஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

545. ஓம் குப்தாய நம:

வாங் வாக்கிற்கும் 

மனஸா மனதிற்கும் 

அகோசரத்வாத் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால் 

குப்த: பகவான் 'குப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால் பகவான் 'குப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஏஶ ஸர்வேஶு பூதேஶு கூடோத்மா ந ப்ரகாஶதே' (கடோபநிஶத் 1.3.12)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

546. ஓம் சக்ரகதாதராய நம:

'மனஸ்தத்வாத்மகம் சக்ர புத்திதத்வாத்மிகாம் கதாம் |

தாரயன் லோகரக்ஷார்த்தமுக்த: சக்ரகதாதர: ||'

மனத்தை குறிக்கும் சக்ரத்தையும், புத்தியை குறிக்கும் கதையையும் உலகத்தின் (உலகத்தோரின்) நலனுக்காக தனது திருக்கைகளில் ஏந்தியுள்ளார். எனவே, அவர் (பகவான்) 'சக்ரகதாதர:' என்று அழைக்கப்படுகிறார்.

 இதி சக்ரகதாதர: 

இந்த ஸ்லோகத்தின் படி பகவான் 'சக்ரகதாதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக