57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||
இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |
534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||
531. ஓம் மஹர்ஶயே கபிலாச்சார்யாய நம:
'மஹர்ஶி கபிலாச்சார்ய:' என்ற இந்த பதம்
ஸவிஶேஶணம் பகவானை (பகவானின் ஸ்ரீகபிலாவதாரத்தை) தனித்துக் குறிப்பதான
ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.
மஹாம்ஸ்சாஸாவ்ருஶிஸ்சேதி எவரொருவர் மிகச்சிறந்தவராகவும் (மஹான்) முனிவராகவும் (ரிஷி) உள்ளாரோ
மஹர்ஶி: அவரை 'மஹரிஷி' என்று அழைப்பர்.
க்ருத்ஸனஸ்ய முழுமையாக (பூரணமாக)
வேதஸ்ய தர்ஶனாத் வேதத்தை உணர்ந்ததால் (உணர்ந்ததாலும் அவர்கள் மஹரிஷிகள் என்று அழைக்கப்படுவர்).
அன்யே து வேதைகதேஶ (அவ்வாறு முழுமையாக வேதங்களை அறியாது) வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் அறிந்தோரை
ரிஶய: ரிஷிகள் என்று மட்டும் அழைப்பர்.
கபிலஸ்சாஸௌ 'கபிலர்' என்ற பெயருடனும்
ஸாங்க்யஸ்ய ஶுத்ததத்வ 'ஸாங்க்யம்' எனும் தூய்மையான தத்துவத்தை
விஞ்ஞானஸ்ய அறிந்தவரும்
ஆச்சார்யஸ்சேதி (அதனால்) ஆசார்யருமான
கபிலாசார்ய: பகவான் 'கபிலாசார்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் 'கபிலர்' என்ற பெயருடன் ஸாங்க்ய தத்துவ ஆச்சார்யராக விளங்கினார். வேதத்தை, ஒரு பகுதியை மட்டும் பயிலாது, முழுமையாக உணர்ந்ததனாலும், மிகச்சிறந்தவரானதாலும் 'மஹர்ஶி' என்ற அடைமொழியுடன் பகவான் 'மஹர்ஶி கபிலச்சார்யர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இது பகவானை தனித்துக் குறிப்பதான திருநாமமாகும்.
'ஶுத்தாத்மதத்வவிஞ்ஞானம் ஸாங்க்யமித்யபிதீயதே |'
தூய்மையான ஆத்ம தத்துவத்தை விளக்கும் அறிவிற்கு ஸாங்க்யம் என்று பெயர்.
இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
'ரிஶி ப்ரஸூதம் கபிலம்' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 5.2)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ரிஷியாகப் பிறந்த கபிலர்...
இதி ஶ்ருதேஸ்ச | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
'ஸித்தானாம் கபில முனி:' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.26)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சித்தர்களில் (நான்) கபில முனி
இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை) போன்ற ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
கபிலாவதார சுருக்கம்: பகவான் கர்த்தம ப்ரஜாபதிக்கும், ஸ்வயம்புவ மனுவின் மகளான தேவஹூதிக்கும் மகனாக 'கபிலர்' என்ற பெயருடன் தோன்றினார். தனது தாயாரான தேவஹூதிக்கு 'ஸாங்க்ய' யோகத்தை விளக்கினார். பகவான் கபிலாவதாரமும், அவரது போதனைகளும், அவர் பரப்பிய ஸாங்க்ய யோகமும் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் அத்யாயம் 21ல் இருந்து, அத்யாயம் 33 வரை விவரிக்கப்பட்டுள்ளது.
532. ஓம் க்ருதஜ்ஞாய நம:
க்ருதம் கார்யம் ஜகத் 'க்ருத' அதாவது காரியமான (விளைவான) இந்தப் ப்ரபஞ்சத்தை
ஞ ஆத்மா 'ஞ' ஆத்மாவை குறிக்கும்
க்ருதம் ச காரியமான இந்தப் ப்ரபஞ்சமாகவும்
தஜ் ஞஸ்சேதி ஆத்மாவாகவும் இருப்பதனால்
க்ருதஜ்ஞ: பகவான் 'க்ருதஜ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காரிய வடிவான இந்தப் ப்ரபஞ்சமாகவும் (க்ருத), அந்தப் ப்ரபஞ்சத்தை அறியும் ஆத்மாவாகவும் (ஞ) இருப்பதனால் 'க்ருதஜ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
533. ஓம் மேதினீபதயே நம:
மேதின்யா பூம்யா: 'மேதினி' என்றால் பூமியைக் குறிக்கும்
பதி: பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால்
மேதினீபதி: பகவான் 'மேதினீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேதினி என்றழைக்கப்படும் பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால் பகவான் 'மேதினீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
534. ஓம் த்ரிபதாய நம:
த்ரீணி மூன்று
பதான்யஸ்யேதி அடிகளை உடையவராதலால்
த்ரிபத: பகவான் 'த்ரிபத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மூன்று அடிகளை உடையவராதலால் பகவான் 'த்ரிபத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'த்ரீணி பதா விசக்ரமே' - அவர் மூன்றடிகள் நடந்தார்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
முன்பே கூறியிருந்தபடி, மூன்று அடிகள் என்பது 'ஜாக்ரத' (விழிப்பு நிலை), 'ஸ்வாபன' (கனவு நிலை) மற்றும் 'ஶுஶுப்தி' (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான 'துரீய' நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார். அடுத்த திருநாமத்தில் இது ஸ்பஶ்டமாக விளக்கப்பட்டுள்ளது.
535. ஓம் த்ரிதஶாத்யக்ஷாய நம:
குணாவேஶேன குணங்களின் மேலீட்டால்
ஸஞ்ஜாதாஸ் பிறப்பதான
திஸ்ரோ தஶா அவஸ்தா மூன்று நிலைகளை
ஜாக்ரதாதய: ஜாக்ரத் முதலான
தாஸாம் அத்யக்ஷ அவற்றை மேற்பார்வையிடுகிறார்
இதி த்ரிதஶாத்யக்ஷ: எனவே, பகவான் 'த்ரிதஶாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
குணங்களின் மேலீட்டால் உருவாகும் ஜாக்ரத் (விழிப்பு நிலை) முதலான மூன்று நிலைகளையும் பகவான் மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் 'த்ரிதஶாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
536. ஓம் மஹாஶ்ருங்காய நம:
மத்ஸ்யரூபி பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் (மீனாக அவதரித்த காலத்தில்)
மஹதி ஶ்ரிங்கே தனது மிகப்பெரிய கொம்பில்
ப்ரளயாம்போதௌ நாவம் ப்ரளய நீரில் (ஸத்யவ்ரதனின்) படகை
பத்வா கட்டிக்கொண்டு
சிக்ரீட இதி விளையாடியவராதலால்
மஹாஶருங்க: பகவான் 'மஹாஶருங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் ஸத்யவ்ரதனின் படகை தனது மிகப்பெரிய கொம்பில் (ஶ்ரிங்கத்தில்) கட்டிக்கொண்டு ப்ரளய நீரில் விளையாடியவராதலால் அவர் 'மஹாஶருங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
537. ஓம் க்ருதாந்தக்ருதே நம:
க்ருதஸ்ய க்ருத, அதாவது காரிய வடிவான இந்த ப்ரபஞ்சத்தை
அந்தம் ஸம்ஹாரம் கரோதீதி அந்தம் அதாவது (ப்ரளய காலத்தில்) அழிக்கிறார்
க்ருதாந்தக்ருத் எனவே பகவான் 'க்ருதாந்தக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காரிய வடிவான ப்ரபஞ்சத்தை ('க்ருத') ப்ரளய காலத்தில் அழிக்கிறார் ('அந்த க்ருத்'). எனவே அவர் 'க்ருதாந்தக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருதாந்தம் ம்ருத்யும் 'க்ருதாந்தம்' என்று அழைக்கப்படும் மரணத்தை
க்ருந்ததீதி வா வெட்டுகிறார் (அழிக்கிறார்)
க்ருதாந்தக்ருத் எனவே பகவான் 'க்ருதாந்தக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் 'க்ருதாந்தம்' என்று அழைக்கப்படும் மரணத்தை வெட்டுகிறார் (அழிக்கிறார்). எனவே, அவர் 'க்ருதாந்தக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த விளக்கத்தை இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம். தனது அடியவர்களுக்கு மரணம் இல்லாத நிலையை அளிக்கிறார் (அவர்களது மரணத்தை வெட்டுகிறார்). அல்லது, ம்ருத்யு தேவதையையே மஹாப்ரளயத்தில் அழிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக