77. விஶ்வமூர்த்திர்மஹாமூர்த்திர்தீப்தமூர்த்திர்அமூர்த்திமான் |
இந்தஎழுபத்தேழாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
717. விஶ்வமூர்த்தி:, 718. மஹாமூர்த்தி:, 719. தீப்தமூர்த்தி:, 720. அமூர்த்திமான் |
721. அனேகமூர்த்தி:, 722. அவ்யக்த:, 723. ஶதமூர்த்தி:, 724. ஶதானன: ||
717. விஶ்வமூர்த்தயே நம:
விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சமே
மூர்த்திரஸ்ய வடிவானவர்
ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால்
இதி விஶ்வமூர்த்தி: எனவே பகவான் 'விஶ்வமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் ப்ரபஞ்ச வடிவாக உள்ளார். எனவே அவர் 'விஶ்வமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
718. மஹாமூர்த்தயே நம:
ஶேஶபர்யங்க ஆதிசேடனை படுக்கையாகக் கொண்டு
ஶயினோஸ்ய பள்ளி கொண்டருளும்
மஹதீ மூர்த்திரிதி பகவானின் திருமேனி மிகப்பெரியதாகும்
மஹாமூர்த்தி: எனவே பகவான் 'மஹாமூர்த்தி:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மிகப்பெரிய திருமேனியுடன் ஆதிசேடனின் மேல், பாம்புப் படுக்கையில், பள்ளிகொண்டு அருளுகிறார். எனவே அவர் 'மஹாமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
719. தீப்தமூர்த்தயே நம:
தீப்தா ஞானமயீ ஞான ஒளிப் பிழம்பான
மூர்த்திரஸ்யேதி திருமேனி உடையவராதலால்
தீப்தமூர்த்தி: பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஞான ஒளிப் பிழம்பான (ஞான ஒளி வீசும்) திருமேனி உடையவராதலால் பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வேச்சயா தனது சுய விருப்பத்தால் (கர்மத்தினால் அன்று)
க்ருஹீதா எடுத்துக்கொள்ளும்
தைஜஸீ மூர்த்திர் தீப்தா சரீரங்கள் ஒளிபொருந்தியவை
அஸ்யேதி வா தீப்தமூர்த்தி: எனவே, பகவான் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
அவதாரகாலத்தில், கர்மத்தினால் உந்தப்படாது தனது சுய விருப்பத்தால் பகவான் ஒளி பொருந்திய சரீரங்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'தீப்தமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் திருமேனி இயற்கையாகவே ஞான ஒளி பொருந்தியது. அவர் தனது இச்சையால் ஏற்றுக்கொள்ளும் அவதார கால திருமேனிகளும் ஒளி பொருந்தியவையே. எவ்வாறு பார்த்தாலும் அவர் 'தீப்தமூர்த்தி' தான்.
720. அமூர்த்திமதே நம:
கர்மாநிபந்தனா கர்மத்தினால் உந்தப்பட்ட (பந்தப்பட்ட)
மூர்த்திரஸ்ய ந வித்யத உடலைப் பகவான் பெறுவதில்லை
இதி அமூர்த்திமான் எனவே அவர் 'அமூர்த்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஒரு பொழுதும் கர்மத்தினால் உந்தப்பட்டு சரீரங்களை (உடலை) ஏற்பதில்லை. எனவே அவர் 'அமூர்த்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமூர்த்திமான் என்றால் சரீரம் இல்லாதவர். இங்கு, கர்மத்தினால் உந்தப்பட்ட சரீரம் இல்லாதவர் என்று பொருள்.
721. அநேகமூர்த்தயே நம:
அவதாரேஶு அவதார காலத்தில்
ஸ்வேச்சயா தனது சுய விருப்பத்தால்
லோகாநாம் உலக மக்களுக்கு
உபகாரிணீர் உதவும் பொருட்டு
பஹ்வீர் பல்வேறு
மூர்த்திர் உடல்களை (உருவங்களை)
பஜத இதி ஏற்றுக்கொள்வதால்
அநேகமூர்த்தி: பகவான் 'அநேகமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவதார காலத்தில், உலக மக்களுக்கு உதவும் பொருட்டு , (கர்மத்தினால் உந்தப்படாது) தனது சுய விருப்பத்தால் பல்வேறு உடல்களை (உருவங்களை) பகவான் ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'அநேகமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
722. அவ்யக்தாய நம:
யத்யப்யனேக இவ்வாறாக பல்வேறு
மூர்த்தித்வம் அஸ்ய உருவங்களை ஏற்றுக்கொண்டாலும்
ததாப்யயம் ஈத்ருஶ ஏவேதி அவர் இவ்வாறானவர் என்று
ந வ்யஜ்யத இதி அறியமுடியாது
அவ்யக்த: எனவே பகவான் 'அவ்யக்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இவ்வாறு தனது அவதார காலத்தில் பல்வேறு உருவங்களை ஏற்றுக்கொண்டாலும், நம்மால் அவர் இவ்வாறானவர் என்று அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் 'அவ்யக்த:' என்ற அழைக்கப்படுகிறார்.
723. ஶதமூர்த்தயே நம:
நானாவிகல்பஜா பல்வேறு விதமாக கற்பிக்கப்பட்ட
மூர்த்தய: உருவங்கள்
ஸம்விதாக்ருதே ஞானமயமாக
ஸந்தீதி (பகவானுக்கு) இருப்பதால்
ஶதமூர்த்தி: பகவான் 'ஶதமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஞானமயமாக பகவானுக்கு பல்வேறு உருவங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே அவர் 'ஶதமூர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
724. ஶதானனாய நம:
விஶ்வாதி ப்ரபஞ்சம் முதலான
மூர்த்தித்வம் யதோSத ஏவ உருவங்கள் அவருக்கு இருப்பதால்
ஶதானன: பகவான் 'ஶதானன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரபஞ்சம் முதலான பல்வேறு உருவங்கள் இருப்பதால் பகவானுக்கு பல்வேறு முகங்களும் உள்ளன. எனவே அவர் 'ஶதானன:' (நூற்றுக்கணக்கான முகங்களுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஶ்ணார்ப்பணம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக