ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 103

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

107. ஓம் ஸமாத்மனே நம: 
ஸம ஆத்மா அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் 
யஸ்ய அவரது மனம் 
ராக விருப்பு 
த்வேஶாதிபிர் வெறுப்பு போன்றவைகளால் 
அதூஶித களங்கப்படாது இருப்பதால் 
: ஸமாத்மா பகவான் 'ஸமாத்மா' என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வபூதேஶு அனைத்து ஜீவராசிகளையும் 
ஸம ஏக ஒன்றாகவே சமமாக எண்ணும் 
ஆத்மா வா ஆத்மா பகவான் என்பது இதன் பொருளாகும்.

பகவானின் மனம் விருப்பு, வெறுப்புக்கள் என்ற களங்கங்கள் அற்றது. எனவே, அவர் அனைத்து ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்று) ஒன்றாகவே பார்க்கிறார். எனவே, பகவான் 'ஸமாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸம ஆத்மேதி வித்யாத்'
அந்த ஆத்மன் ஸமமானவர் என்று அறிவாயாக.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

108. ஓம் ஸம்மிதாய நம: / ஓம் அஸம்மிதாய நம:
ஸர்வைர் அனைத்து 
அப்யர்தஜாதை: பதார்த்தங்களிலும் 
பரிச்சின்ன: (நீக்கமற நிறைந்திருப்பதால்) பகவானை அறியமுடியுமாதலால்
ஸம்மித: பகவான் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸம்மித: என்றால் அளவிடமுடிந்தவர் என்று பொருள்.

பகவான் அனைத்துப் பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டு) அவரை அளவிடமுடியும், அறியமுடியுமாதலால் அவர் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைர் அனைத்து 
அபரிச்சின்னோSமித (அனைத்திலும் நிறைந்திருந்தாலும் இவை மட்டும்தான் என்று) பகவானை அளவிடமுடியாததால் 
இதி அஸம்மித: பகவான் 'அஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாது, அளவிடமுடியாது. எனவே, பகவான் 'அஸம்மித:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அஸம்மித: என்றால் அளவிடமுடியாதவர் என்று பொருள். ஸமாத்மாஸம்மித ஸம: என்று இந்த ஸ்லோகத்தில் வருகிறது. இதை ஸமாத்மா + ஸம்மித: என்றும் பிரிக்கலாம், ஸமாத்மா + அஸம்மித: என்றும் பிரிக்கலாம். எனவே, ஆசார்யாள் இதற்கு இரண்டு விளக்கங்களையும் அளித்துள்ளார். ஆனால், பொதுவாக ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் ஸஹஸ்ரநாமத்தை நாமாவளியாக உரைக்கும்பொழுது, 'அஸம்மித:' (பகவான் அளவிடமுடியாதவர்) என்ற திருநாமத்தை உரைப்பதே வழக்கத்தில் உள்ளது.

ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 102

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

106. ஓம் ஸத்யாய நம:
அவிததரூபத்வாத் உண்மையே வடிவாக இருப்பதால் 
பரமாத்மா ஸத்ய: பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவிதத என்றால் 'பொய்யல்லாத ஒன்று' அதாவது உண்மை என்று பொருள்.

உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம' (தைத்ரீய உபநிஶத் 2.1.1)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மமானது என்றுமுள்ள ஸ்வரூபமானது (ஸத்யம்), அறிவு ஸ்வரூபமானது (ஞானம்), வரையறுக்கப்படாத ஸ்வரூபமானது (அனந்தம்).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

மூர்த்த புலன்களால் அறியப்படும் ஸ்தூல உருவங்களாகவும்
அமூர்த்தாத்மகத் வாத் வா புலன்களால் அறியப்படமுடியாத ஸூக்ஷ்ம உருவங்களாகவும் இருப்பதால் 
ஸத்ய: (அனைத்துமாகவும் இருப்பதால்) பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும், ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸச்ச த்யச்சாபவத்' (தைத்ரீய உபநிஶத் 2.6.1)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ப்ரஹ்மம்) ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் ஆனார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத் இதி ப்ராணா: '' என்ற சொல் ப்ராணனைக் குறிக்கும்
தி இதி அன்னம் 'த்' என்ற சொல் அன்னத்தைக் குறிக்கும்
யம் இதி திவாகரஸ்தேன '' என்ற சொல் சூரியனைக் குறிக்கும் 
ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய: ப்ராணன் (மூச்சுக்காற்று), அன்னம் (உணவு) மற்றும் சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்) பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் '' என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), 'த்' என்ற அன்னம் (உணவு) மற்றும் '' என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸதிதி ப்ராணாஸ்தீத்யன்னம் யமித்யஸாவாதித்ய:' (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5.6)
ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: '' என்றால் ப்ராணன், 'த்' என்றால் அன்னம், '' என்றால் சூரியன்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்ஸு ஸத்புருஷர்களுக்கு (ஸாதுக்களுக்கு
ஸாதுத்வா நன்மையே (ஸாது) வடிவானவராய் காட்சி அளிப்பதால் 
ஸத்ய: பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால், அவர் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, பிப்ரவரி 03, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 101

12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

104ஓம் வஸவே நம:
வஸந்தி ஸர்வபூதான்யத்ர எவருக்குள் அனைத்து ஜீவராசிகளும் வசிக்கின்றனவோ (வாழ்கின்றனவோ), 
தேஶ்வயமபி வஸதீதி வா எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் (அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக) வசிக்கின்றாரோ 
வஸு: அந்த பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்பட) பகவானுக்குள் வசிக்கின்றன. அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) வசிக்கின்றார். இவ்விரண்டு காரணங்களுக்காகவும், பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸூனாம் பாவகஸ்சாஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வஸுக்களில் நான் தீ.

இத்யுக்தோ வா இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்) குறிப்பிட்டுள்ளபடி 
வஸு: அக்னியின் (தீயின்) வடிவாய் இருப்பதால் பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஸ்ரீமத் பகவத்கீதை விபூதி யோகம் என்னும் 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி) அனைத்துமாய் இருக்கும் பரம்பொருள், எட்டு வஸுக்களுள் அக்னியின் வடிவாக இருக்கிறார். எனவே, பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
105. ஓம் வஸுமனஸே நம:
வஸுஶப்தேன 'வஸு' என்றால் 
தனவாசினா செல்வம் (தனம்) என்று பொருள் 
ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே (எனவே, வஸு என்ற சொல்) அனைத்திலும் சிறந்தவற்றைக் குறிக்கும்
ப்ரஶஸ்தம் மனோ 'மிகச்சிறந்த மனதை' உடையவராதலால் 
யஸ்ய வஸுமனா: பகவான் 'வஸுமனா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ராக விருப்பு 
த்வேஶாதிபி வெறுப்புக்கள் 
க்லேஶைர் போன்ற துன்பங்களாலும் 
மதாதிபிர் கர்வம் போன்ற 
உபக்லேஶைர் துன்பங்களாலும் 
யதோ ந கலுஶிதம் விகாரமடையாத 
சித்தம் மனமுடையவராதலால் 
ததஸ்தன்மன: ப்ரஶஸ்தம் அவரது மனம் 'மிகச் சிறந்ததாகும்'.

'வஸு' என்ற சொல் செல்வம் (தனம்) என்ற பொருளின் மூலம், சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறது. விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால், பகவான் 'மிகச்சிறந்த மனமுடையவர்' என்ற பொருளில் 'வஸுமனா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, ஜனவரி 25, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 100

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத |

101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக):

95ஓம் அஜாய நம:
ந ஜாயத இதி அஜ: 
பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார்எனவேஅவர் பிறப்பதில்லைஇவ்வாறுபிறப்பே இல்லாத பகவான் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


96ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் ஈஶ்வராணாம் ஈஶ்வர: ஸர்வேஶ்வர: 
உலகில் சாதாரணமாக தலைவர்கள்அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம்.இவர்கள் அனைவரும்தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறுப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள்.இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால்,பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்


97ஓம் ஸித்தாய நம:
நித்ய நிஶ்பின்ன ரூபத்வாத் ஸித்த:
பகவான் எக்காலத்திலும்எல்லாவற்றிலும் முழுமையானவராகவும்அனைத்தையும் அடையப்பெற்றவராகவும்குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

98ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு ஸம்வித்ரூபத்வாத் நிரதிஶயரூபத்வாத் ஃபலரூபத்வாத் வா ஸித்தி: ஸ்வர்காதீனாம் வினாஶித்வாத்  அஃபலத்வம் 
பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்தி:' (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.


99ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் ஆதிகாரணத்வாத் ஸர்வாதி: 
அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஸர்வாதி:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


100ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் ந ச்யுதோ ந ச்யவதே இதி அச்யுத: 
பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்துமுன்பு என்றும் நழுவியதில்லைஇனி நழுவப்போவதுமில்லைஎனவேஅவர் 'அச்யுதன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


101ஓம் வ்ருஶாகபயே நம:
வர்ஶணாத் ஸர்வகாமானாம் தர்மோ வ்ருஶ: காத் தோயாத் பூமிமபாதிதி கபிர்வராஹ: வ்ருஶரூபத்வாத் கபிரூபத்வாத் வ்ருஶாகபி: 
பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார்அந்த வராஹப் பெருமானேதர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார்இவ்வாறுதர்மத்தின் உருவமாயும்வராஹமாயும் இருப்பதால் பகவான் 'வ்ருஶாகபி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


102ஓம் அமேயாத்மனே நம:
இயானிதி மாதும் பரிச்சேதும் ந ஶக்யத ஆத்மா யஸ்யேதி அமேயாத்மா 
மா என்றால் தீர்மானித்தல்அனுமானித்தல்பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாதுஎனவேபகவான்'அமேயாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


103ஓம் ஸர்வயோகவிநி:ஸ்ருதாய நம:
ஸர்வஸம்பந்தவினிர்கதஸர்வயோகவிநி:ஸ்ருத: 
பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார்எனவேஅவர் 'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(நானாஶாஸ்த்ரோக்தாத்யோகாதபகதத்வாத் வா)  
நானாஶாஸ்த்ர உக்தாத் யோக அதபகதத்வாத் வா 
பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்திகர்மஞானம் போன்றயோக சாதனங்களால் அவர் அறியப்படுவதால்பகவான்'ஸர்வயோகவிநி:ஸ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.