ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 74

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


52. ஓம் த்வஶ்ட்ரே நம:
ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில் ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் தனூகாரணத்வாத் குன்றச் செய்வதால் (அழியச் செய்வதால்) த்வஶ்டா: பகவான் 'த்வஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் 'த்வஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வக்ஷதேஸ் இங்கு, ‘த்வக்ஷ்’ எனும் வேர்ச்சொல் தனூகரண குன்ற செய்வது அல்லது அழிப்பது அர்தாத் என்ற பொருளில் வருகிறது த்ருச் ப்ரத்யய: அதனுடன் ‘த்ருச்’ என்ற விகுதி சேர்ந்து ‘த்வஷ்டா’ என்ற திருநாமம் அமைகிறது.

53. ஓம் ஸ்தவிஶ்டாய நம:
அதிஶயேன மிகுந்த ஸ்தூல பருத்திருப்பதால் ஸ்தவிஶ்ட: பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்தும் அவரே, அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருப்பவரும் அவரே. அவரைக் காட்டிலும் பருத்தப் பொருள் வேறொன்றுமில்லை என்ற கருத்தில் இந்த திருநாமம் அமைக்கப்பட்டுள்ளது.

54. ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:
புராண: ஸ்தவிர: ‘ஸ்தவிர:’ என்றால் மிகப்பழமையானது என்று பொருள்.

'த்வேகம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம' இதி பஹ்வ்ருசா
பஹ்வ்ருசரின் கூற்றின்படி: இந்தப் பழமையானதற்கு ஒரே திருநாமம் உள்ளது.

வயோவசனோ வா (அல்லது ஸ்தவிர என்றால்) வயது முதிர்ந்த என்ற பொருளும் கொள்ளலாம் ஸ்திரத்வாத் த்ருவ: நிலைபெற்றுள்ளதால் ‘த்ருவ:’ ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம் பகவானின் இவ்விரு பண்புகளையும் ஒன்று சேர்த்து ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்படுகிறது.

மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக