சனி, ஆகஸ்ட் 18, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 76

7. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

55. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன: |
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


55. ஓம் அக்ராஹ்யாய நம:
கர்மேந்த்ரியைர் வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் ந க்ருஹ்யதே அறிந்துகொள்ளவோ (உணரவோ) இயலாததால் இதி அக்ராஹ்ய: பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ' (தைத்ரீய உபநிஶத் 2.9)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எதனிடமிருந்து மனதுடன் சொற்கள் அடைய முடியாமல் திரும்புகின்றனவோ...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

56. ஓம் ஶாஶ்வதாய நம:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு ‘ஶஷ்வத்’ என்றால் அனைத்து காலங்களிலும் பவதீதி தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) ஶாஶ்வத: பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶாஶ்வதம் ஶிவம் அச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எக்காலத்திலும் உள்ளவர், மங்களமானவர், தன்னிலையினின்று வழுவாதவர்...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.


57. ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |
விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
"க்ருஶி" என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள்,  ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனாத் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் (மஹாபாரதத்தில் உள்ள) கூற்றின்படி ச்சிதானந்தாத்மக: ச்சிதானந்த சொரூபனான (அறிவும், இன்பமும் என்றும் நிலைபெற்றுள்ள) பகவான் விஶ்ணுவே க்ருஶ்ண: ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் க்ருஶ்ணரின் திருநாமமே ஆனந்தம்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதும் ஆனந்தம்; அதை அன்றாடம் உச்சரிப்போரின் வாழ்க்கையிலும் ஆனந்தமே; அவரது சரித்திரமும், லீலைகளும் அவரது பெயருக்கேற்ப ஆனந்தமே உருவாக உள்ளது. அவரது சரித்திரமே ஆனந்தம், படிப்பவருக்கும் ஆனந்தம், கேட்பவருக்கும் ஆனந்தம். க்ருஶ்ணனே ‘ஆனந்த மயன்’ என்றால் அது மிகையாகாது.

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா பகவான் கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் க்ருஶ்ண: ‘க்ருஷ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருஶாமி ப்ருதிவீம் பார்த்த பூத்வா கார்ஶ்ணாயஸோ ஹல: |
க்ருஶ்ணோ வர்ணஸ்ச மே யஸ்மாத்தஸ்மாத் க்ருஶ்ணோSஹமர்ஜுன’ || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.79)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்:
ஒ அர்ஜுனனே (பார்த்தனே)!!! நான் கரிய நுனி கொண்ட கலப்பையைப் போல பூமியை உழுகிறேன். மற்றும், கருமையான திருமேனியைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் ‘க்ருஶ்ன்’ என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக