வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 75

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

46. ஓம் அப்ரமேயாய நம:
ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத் நாப்யுபமான ஸித்த: நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதிஶயாபாவாத் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஶஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா |
பகவானை நாம் நமது புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக் கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும் மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால், சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் 'அப்ரமேய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

47. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:
ஹ்ருஶீகாணிந்த்ரியாணி தேஶாம் ஈஶ: ஹ்ருஶீகேஶ: 
அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்துஅனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார்எனவேபகவான்'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா இந்த்ரியாணி யஸ்ய வஶே வர்த்தந்தே ஸ ஹ்ருஶீகேஶ: 
அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் 'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா ஸூர்யரூபஸ்ய சந்த்ரரூபஸ்ய  ஜகத்ப்ரீதிகரா ஹ்ருஶ்டா: கேஶா ரஶ்மய:  ஸ ஹ்ருஶீகேஶ:
கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும்தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் 'ஹ்ருஷீகேஷன்'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

48ஓம் பத்மநாபாய நம:
ஸர்வஜகத்காரணம் பத்மம் நாபௌ யஸ்ய  பத்மநாப:
அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

49ஓம் அமரப்ரபவே நம:
அமரானாம் ப்ரபு: அமரப்ரபு: 
அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமரப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

50ஓம் விஶ்வகர்மணே நம:
விஶ்வம் கர்மம் க்ரியா யஸ்ய  விஶ்வகர்மா 
அனைத்து உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி ஜகத்கர்ம விஶ்வம் கர்ம யஸ்யேதி  வா விஶ்வகர்மா
இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விசித்ர நிர்மாணஶக்திமத்வாத்வா விஶ்வகர்மா 
ஆச்சரியமான படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான்'விஶ்வகர்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வஶ்ட்ரா ஸாத்ருஶ்யாத்வா விஶ்வகர்மா 
த்வஶ்ட்ரா எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான்'விஸ்வகர்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

51ஓம் மனவே நம:
மனனாத் மனு: 
(அனைத்தையும்) நினைப்பதால் (மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்த்ரோ வா மனு: 
மந்திரங்களின் வடிவில் இருப்பதால் பகவான் 'மனுஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஜாபதிர் வா மனு: 
மனிதக் குலத்தைப் (நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் 'மனுஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

52. ஓம் த்வஶ்ட்ரே நம:
ஸம்ஹாரஸமயே ஸர்வபூத தனூகாரணத்வாத் த்வஶ்டா: 
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் 'த்வஶ்டா'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

53. ஓம் ஸ்தவிஶ்டாய நம:
அதிஶயேன ஸ்தூல ஸ்தவிஶ்ட: 
மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் 'ஸ்தவிஶ்ட:என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

54ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:
புராண: ஸ்தவிர: வயோவசனோ வா ஸ்திரத்வாத் த்ருவ: ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்
மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக