ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 77

7. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

55. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன: |
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:


58. ஓம் லோஹிதாக்ஷாய நம:
லோஹிதே சிவந்த அக்ஷிணீ திருக்கண்கள் யஸ்யேதி உடையவர் ஆதலால் லோஹிதாக்ஷ: பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
  
சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஸாவ்ருஶபௌ லோஹிதாக்ஷ:'

அவர் உயர்ந்தவர்; சிவந்த திருக்கண்களை உடையவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.


59. ஓம் ப்ரதர்தனாய நம:
ப்ரளயே ப்ரபஞ்சத்தின் அழிவுக் காலத்தில் (ப்ரளயம்) பூதானி ஜீவராசிகளை ப்ரதர்தயதி ஹினஸ்தீதி அழிப்பதால் (ப்ரதர்தன என்றால் அழிப்பது என்று பொருள்) ப்ரதர்தன: பகவான் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

60. ஓம் ப்ரபூதாய நம:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஞானம், செல்வம் முதலிய குணங்கள் ஸம்பன்ன: நிரம்பியவராதலால் ப்ரபூத: பகவான் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

61. ஓம் த்ரிககுப்தாம்னே நம:
ஊர்த்வாதோமத்யபேதேன மேல், நடு, கீழ் என்று பிரிக்கப்படும் திஸ்ருணாம் மூன்று ககுபாமபி இடங்களையும் தாமேதி தமது இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் த்ரிககுப்தாம பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இத்யேகமிதம் நாம (த்ரிககுப், தாம என்று இரண்டாகப் பிரிக்காமல் ‘த்ரிககுப்தாம’ என்ற) இது ஒரே திருநாமமாகும்.

ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக