வெள்ளி, செப்டம்பர் 21, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 80

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64. ஈஶான:, 65. ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

64. ஓம் ஈஶானாய நம:
ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் நியந்த்ருத்வாத் ஆட்சி செய்வதால் (அடக்கி ஆள்வதால்) ஈஶான: பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

65. ஓம் ப்ராணதாய நம:
ப்ராணான் ததாதி ப்ராணனைத் தருவதால் சேஷ்ட்யதீதி நடமாட வைப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கோ ஹ்யேவான்யாத் க: ப்ராணயாத்’ (தைத்ரீய உபநிஶத் 2.7)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஹ்ருதய ஆகாசத்திற்குள் இந்த பரப்ரஹ்மம் இல்லையென்றால்) யார்தான் மூச்சை இழுப்பார். யார்தான் மூச்சை வெளியிடுவார்கள்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி = ப்ராணத:

யத்வா, அல்லது ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) காலாத்மனா காலத்தின் உருவில் த்யதி கண்டயதீதி (த்யதி என்ற சொல்லுக்கு கண்டயதி அதாவது) அழிப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காலத்தின் உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + த்யதி = ப்ராணத:

ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) தீபயதி ஷோதயதீதி வா (தீபயதி  என்ற சொல்லுக்கு ஷோதயதி அதாவது) ஒளி கொடுத்துப் பிரகாசிக்கச் செய்வதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + தீபயதி = ப்ராணத:

ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) ததாதி லுனாதீதி வா (ததாதி  என்ற சொல்லுக்கு லுனாதி என்ற பொருள் கொண்டு அதாவது) வெட்டுவது அல்லது அழிப்பது ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி (லுனாதி) = ப்ராணத:

66. ஓம் ப்ராணாய நம:
ப்ராணிதீதி மூச்சை ஸ்வாசிப்பவர் ப்ராண: ‘ப்ராண’ என்று அழைக்கபடுவர் க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் பரமாத்மாவே அவர்களை அவ்வாறு வழிநடத்துவதால், பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ராணஸ்ய ப்ராணம்’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.18)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(அந்த பரமாத்மா) ப்ராணனுக்கே ப்ராணனாய் இருப்பவர்.

அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முக்யப்ராணோ வா| பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப் ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.
காற்று இருந்தும், அதை உள்ளிழுத்து வெளியிடும் புலன் இருந்தும், பகவான் நமது அந்தர்யாமியாக இல்லாவிடில், நம்மால் ஸ்வாசிக்க முடியாது (அதாவது, உயிர் வாழ முடியாது) என்பது இதன் உட்பொருளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக