7. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
55. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன: |
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
55. ஓம் அக்ராஹ்யாய நம:
கர்மேந்த்ரியைர் ந க்ருஹ்யதே இதி அக்ராஹ்ய:
வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
56. ஓம் ஶாஶ்வதாய நம:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு பவதீதி ஶாஶ்வத:
அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
57. ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |
விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
"க்ருஶி" என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள், ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி வ்யாஸ வசனாத் ஸச்சிதானந்தாத்மக: க்ருஶ்ண:
பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா க்ருஶ்ண:
(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
58. ஓம் லோஹிதாக்ஷாய நம:
லோஹிதே அக்ஷிணீ யஸ்யேதி லோஹிதாக்ஷ:
சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
59. ஓம் ப்ரதர்தனாய நம:
ப்ரளயே பூதானி ப்ரதர்தயதி ஹினஸ்தீதி ப்ரதர்தன:
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
60. ஓம் ப்ரபூதாய நம:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஸம்பன்ன: ப்ரபூத:
பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர்‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
61. ஓம் த்ரிககுப்தாம்னே நம:
ஊர்த்வாதோமத்யபேதேன திஸ்ருணாம் ககுபாமபி தாமேதி த்ரிககுப்தாம இத்யேகமிதம் நாம
ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
62. ஓம் பவித்ரே நம:
யேன புனாதி யோ வா புனாதி ரிஶிர்தேவதா வா தத் பவித்ரம்
பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
63. ஓம் மங்களாய பரஸ்மை நம:
‘அஶுபானி நிராசஷ்டே தனோதி ஶுபஸந்ததிம் |
ஸ்ம்ருதிமாத்ரேன யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்களம் விது: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவரொருவரை நினைத்த மாத்திரத்திலேயே (தன்னை நினைக்கும்) மனிதனின் அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றை அதிகரிக்கிறாரோ, அந்த பரப்ரஹ்மத்தை “மங்களம்” என்று அழைக்கின்றனர்.
இதி விஶ்ணு புராண வசனாத் கல்யாணரூபத்வாத்வா மங்களம் பரம் ஸர்வபூதேப்ய: உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம மங்களம் பரம் இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்
பகவான் விஶ்ணு தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, நினைப்பவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளையும், நல்லனவற்றையும் அதிகரிக்கிறார். இத்தகைய மங்களமான அனைவருக்குள்ளும் சிறந்தவராகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘மங்களம் பரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக