சனி, செப்டம்பர் 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 82

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64ஈஶான:, 65. ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

70. ஒம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஹிரண்மயாண்டர்வர்த்தித்வாத் இந்தப் ப்ரபஞ்சம் எதிலிருந்து உருவானதோ அந்த பொன்மயமான முட்டைக்குள் இருந்ததால் ஹிரண்யகர்ப்போ ப்ரஹ்மா விரிஞ்சி: நான்முகக்கடவுளான ப்ரஹ்மா 'ஹிரண்யகர்ப்பர்' என்று அழைக்கப்படுகிறார். ததாத்மா, அந்த நான்முகக்கடவுளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் 'ஹிரண்யகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் தாங்கும் இந்தப் ப்ரபஞ்சமானது ஒரு பொன்மயமான முட்டைக்குள்ளிருந்து பிறக்கிறது. அந்த பொன்மயமான முட்டையின் உள்ளே நான்முகக்கடவுளான ப்ரஹ்மா இருக்கிறார். எனவே, பொதுவாக அவர் 'ஹிரண்யகர்ப்பர்' என்று அழைக்கப்படுகிறார். பகவானோ அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்த்ராத்மாவாக இருந்து அவரை வழிநடத்துகிறார். எனவே பகவான் 'ஹிரண்யகர்ப்பர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஹிரண்யகர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே' (ரிக் வேதம் 10.121.1)
முதன்முதலில் அந்த ஹிரண்யகர்ப்பர் மட்டுமே இருந்தார்

இதி ஶ்ருதே: | இவ்வாறு ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

71. ஒம் பூகர்ப்பாய நம:
பூகர்ப்பே யஸ்ய எவருடைய கர்ப்பத்தில் இந்த பூமியும் மற்றுமுண்டான ஸகல ஸ்ருஷ்டியும் உள்ளதோபூகர்ப்ப: அந்த பகவான் 'பூகர்ப்ப' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியையும், ப்ரபஞ்சத்தையும், மற்றுமுண்டான ஸகலவிதமான ஸ்ருஷ்டிகளையும் ப்ரளய காலத்தில் பகவான் தன் வயிற்றினுள் வைத்துக் காக்கிறார். இந்த பூமி (ப்ரபஞ்சம் மற்றும் அனைத்து ஸ்ருஷ்டியும்) பகவானின் கர்ப்பத்தில் உள்ளது எனக்கொள்ளலாம். எனவே பகவான் 'பூகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக