8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||
இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
64. ஈஶான:, 65. ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
67. ஒம் ஜ்யேஶ்டாய நம:
வ்ருத்ததமோ
(வயதில்) மிகவும் பெரியவரை அல்லது மூத்தவரை ஜ்யேஶ்ட: 'ஜ்யேஶ்ட' என்று அழைக்கிறோம்.
'ஜ்ய ச’
(பாணினி சூத்ரம் 5.3.61)
இத்யதிகாரே பாணினி
ஸூத்ரத்தில் 'ஜ்ய' என்ற சொல்லை விளக்குகையில்
'வ்ருத்தஸ்ய
ச' (பாணினி ஸூத்ரம் 5.3.62)
இதி வ்ருத்த ஶப்தஸ்ய இவ்வாறு 'வயது முதிர்ந்தவர்' என்ற பொருளில் ஜ்யாதேஶவிதானாத் 'ஜ்ய' என்ற
சொல்லிற்கு பாணினி விளக்கம் அளிக்கிறார்.
அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால் பகவான் 'ஜ்யேஷ்ட:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார் (அனைத்திற்கும் காரணமாய் இருக்குமவர், அனைவரைக்காட்டிலும் மூத்தவர்).
68. ஒம் ஶ்ரேஶ்டாய நம:
ப்ரஶஸ்ய
தம: மிகவும் புகழ்பெற்று விளங்குவதால் (அல்லது புகழ்பெற்று
விளங்குவோர் அனைவரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பதால்) ஶ்ரேஶ்ட: பகவான் 'ஶ்ரேஶ்ட' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரைக்காட்டிலும்
மேம்பட்டவராய், நிகரில்லாத
புகழை உடையவராய் இருப்பதால் பகவான் 'ஶ்ரேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ப்ரஶஸ்யஸ்ய
ஶ்ர:' (பாணினி சூத்ரம் 5.3.60)
இதி ஶ்ராதேஶவிதானாத் இவ்வாறு
'ஶ்ர' என்ற சொல்லிற்கு
மேம்பட்ட புகழை உடையவர் என்று பாணினி விளக்கியுள்ளார்.
'ப்ராணோ வாவ
ஜ்யேஷ்டஸ்ய ஶ்ரேஷ்டஸ்ய' (சாந்தோக்ய உபநிஶத் 5.1.1)
சாந்தோக்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த ப்ராணனே (முக்கிய ப்ராணனாக இருப்பவரே) அனைவரைக்காட்டிலும் வயது முதிர்ந்தவர். அனைவரைக்காட்டிலும்
புகழிலும் மேம்பட்டவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
முக்யப்ராணோ
வா, அந்த முக்கியப் ப்ராணரே ‘ஶ்ரேஶ்டஸ்ய’
(ப்ரஹ்ம ஸூத்ரம் 2.4.7) அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர் (என்று) இத்யதிகரண ஸித்தத்வாத் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் இந்த கூற்றின் மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸர்வகாரணத்வாத்வா
ஜ்யேஶ்ட:, ஸர்வாதிஶயத்வாத்வா ஶ்ரேஶ்ட:
அனைத்திற்கும்
மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'ஜ்யேஶ்டர்'. அனைத்திலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் 'ஶ்ரேஶ்டர்'.
69. ஒம் ப்ரஜாபதயே நம:
ஈஶ்வரத்வேன
பகவான் அனைவருக்கும் அரசானாய் இருந்து ஸர்வாஸாம்
அனைத்து ஜீவராசிகளையும் ஆள்வதால் ப்ரஜானாம் பதி: அவர்
ப்ரஜைகளுக்குத் தலைவர், 'ப்ரஜாபதி'
என்று அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளும் பகவான் என்னும் அரசனின் குடிமக்கள் (ப்ரஜைகள்).
பகவானே இந்த ப்ரஜைகளின் அரசன் (பதி).
எனவே, பகவான் 'ப்ரஜாபதி'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக