வியாழன், பிப்ரவரி 18, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 149

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம். 

207. ஓம் விஶ்ருதாத்மனே நம:

விஶேஶேண சிறப்பாக 

ஶ்ருதோ அறிகிறார் 

யேன ஸத்யஞானாதிலக்ஷண: தன்னுடைய ஸத்யம் (மெய்), அறிவு முதலிய குணங்களால் 

ஆத்மாதோ ஆத்மாவின் தன்மையை 

விஶ்ருதாத்மா எனவே, பகவான் 'விஶ்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் 'விஶ்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

208. ஓம் ஸுராரிக்னே நம:

ஸுராரிணாம் (ஸுர + அரிணாம்) தேவர்களின் எதிரிகளை (அஸுரர்களை

நிஹந்த்ருத்வாத் அழிக்கிறார் 

ஸுராரிஹா எனவே, பகவான் 'ஸுராரிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் 'ஸுராரிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக