திங்கள், பிப்ரவரி 15, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 147

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.

201. ஓம் ஸந்தாத்ரே நம:

கர்மஃபலை: அவரவரது வினைப்பயன்களை 

புருஶான் அவரவரோடு 

ஸந்தத்த இணைக்கிறார் (கூட்டுவிக்கிறார்

இதி எனவே 

ஸந்தாதா பகவான் 'ஸந்தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவே, அவர் 'ஸந்தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எத்தனை பிறவி எடுத்தாலும் தத்தம் வினைப்பயனை அவரவர்களே தான் அனுபவிக்க வேண்டும். ஒருவரது வினைப்பயனை மற்றவர் அனுபவித்தல் இயலாது.

 202. ஓம் ஸந்திமதே நம:

ஃபலபோக்தா அந்தந்த பலனை அனுபவிப்பவரும் 

ச ஸ ஏவேதி அவரேயாதலால் 

ஸந்திமான் பகவான் 'ஸந்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லை. பற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரே. எனவே, பகவான் 'ஸந்திமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

203. ஓம் ஸ்திராய நம:

ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்) எப்பொழுதும் மாறாத உருவத்துடன் இருப்பவராதலால் 

ஸ்திர: பகவான் 'ஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் 'ஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

204. ஓம் அஜாய நம:

அஜதி 'அஜ' என்றால் 

கச்சதி செல்வது மற்றும் 

க்ஷிபதி அழித்தல் என்று பொருள் 

இதி வா பகவான் இவ்விரண்டும் செய்வதால் (நல்லோரிடம் செல்கிறார், தீயோரை அழிக்கிறார்

அஜ: அவர் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரிடம் செல்கிறார்; தீயோரை அழிக்கிறார். எனவே, அவர் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக