சனி, ஜனவரி 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 146

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |

204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.

198. ஓம் அம்ருத்யவே நம:

ம்ருத்யுர் 'ம்ருத்யு' என்றால் 

வினாஶஸ் மரணம், அல்லது அழிவு 

தத்தேதுர் வாஸ்ய (தத் ஹேதுர் வாஸ்ய) அந்த மரணம் அல்லது அழிவின் காரணமும் கூட 

ந வித்யதே பகவானைத் தீண்டுவதில்லை 

இதி அம்ருத்யு: எனவே, பகவான் 'அம்ருத்யு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 மரணம் மட்டுமல்ல, அதன் காரணம் கூட பகவானைத் தீண்டுவது இல்லை. எனவே, அவர் 'அம்ருத்யு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

199. ஓம் ஸர்வத்ருஶே நம:

ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகள் 

க்ருதாக்ருதம் செய்பவை, மற்றும் செய்யாதவை 

ஸர்வம் ஆகிய அனைத்தையும் 

பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்

ஸ்வாபாவிகேன தனது இயற்கையான 

போதேனேதி ஞானத்தால் 

ஸர்வத்ருக் எனவே, பகவான் 'ஸர்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகள் செய்பவை, செய்யாதவை ஆகிய அனைத்தையும் தன் இயற்கையான ஞானத்தால் அறிகிறார். எனவே, அவர் 'ஸர்வத்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்பவை - செய்யத் தகுந்ததை செய்தோமா, செய்யத் தகாததைச் செய்தோமா

செய்யாதவை - செய்யத் தகுந்ததை மறந்தோமா, செய்யத் தகாததை செய்யாதிருந்தோமா

200. ஓம் ஸிம்ஹாய நம:

ஹின்ஸதீதி அழிப்பதால் 

ஸிம்ஹ: பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தக்க காலத்தில், குறிப்பாக பாவிகளையும், அதர்மிகளையும் அழிக்கிறார். எனவே, அவர் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹிம்ஸ: என்னும் இடத்தில்) ஸிம்ஹ: என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் (ப்ருஷோராதி சூத்திரம்) மூலம் கிடைக்கிறது.

இதி நாம்னாம் த்விதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸிம்ஹ: என்னும் இந்த திருநாமம் வரையில்) இருநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக