ஞாயிறு, ஜனவரி 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 144

 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

196. ஓம் பத்மநாபாய நம:

பத்மமிவ தாமரையைப் போன்று 

ஸுவர்துலா அழகிய வட்டவடிவமான 

நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால் 

பத்மநாப: பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

ஹ்ருத்பத்மஸ்ய ஒவ்வொருவருடைய இதய கமலத்தின் 

நாபௌ மத்யே நாபியில், அதாவது அந்தத் தாமரையின் நடுவில் 

ப்ரகாஶனத்வா பகவான் ஒளியோடு வீற்றிருப்பதால் பத்மநாப: பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

 197. ஓம் ப்ரஜாபதயே நம:

ப்ராஜானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் 

பதி: பிதா பதியாக, அதாவது தந்தையாக இருப்பதால் 

ப்ரஜாபதி: பகவான் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகைப் படைப்பவர் நான்முகக்கடவுளான ப்ரஹ்மா. அவரே, அனைவருக்கும் தந்தை. பகவானோ, அந்த நான்முகனுக்கும் தந்தை. முன்பு 69-வது திருநாமத்தில், அவர் அரசன், நாம் அனைவரும் அவரது ப்ரஜைகள் என்று ஆச்சார்யர் உரை தந்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக