ஞாயிறு, ஜனவரி 17, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 143

21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

193. ஓம் புஜகோத்தமாய நம:

புஜேன தோள்களினால் (கைகளினால்

கச்சதாம் செல்லும் ப்ராணிகளில் (அதாவது ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில்

உத்தமோ சிறந்தவராக இருப்பதால் 

புஜகோத்தம: பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேஷன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பாம்புகள் கால்களின்றி தமது உடலால் ஊர்ந்து செல்வதால் அவை 'புஜகம்' என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீமத் பகவத்கீதை 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி பகவான் ஒருதலை பாம்புகளில் வாஸுகியாகவும், பலதலைகள் கொண்ட பாம்புகளில் (நாகர்களில்) அநந்தன் என்றழைக்கப்படும் ஆதிசேஷனாகவும் உள்ளார். 

194. ஓம் ஹிரண்யநாபாய நம:

ஹிரண்யமிவ பொன்னைப்போன்று 

கல்யாணி அழகிய 

நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால் 

ஹிரண்யநாப: பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஹிதரமணீய நன்மையளிக்கவல்லதும் (ஹிதம்), அழகியதுமான (ரமணீய

நாபித்வாத்வா தொப்புளை உடையவராதலால் 

ஹிரண்யநாப: பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த தொப்புளிலிருந்தே நான்முகக் கடவுளான ப்ரஹ்மா தோன்றுகிறார். அதிலிருந்தே, அனைத்து படைப்பும் உருவாகிறது. படைப்பில்லையேல் நாம் நற்கதி அடைய இயலாது. எனவே, பகவானின் தொப்புள், நமக்கு மிகப்பெரிய நன்மையை செய்கிறது. 

195. ஓம் ஸுதபஸே நம:

வதரிகாஶ்ரமே பத்ரிகாச்ரமத்தில் 

நரநாராயணரூபேண நரன் மற்றும் நாராயணன் வடிவத்தில் 

ஶோபனம் அழகிய, மங்களகரமான 

தபஸ்சரதீதி தவம் புரிவதால் 

ஸுதபா: பகவான் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரிகாஸ்ரமத்தில் இன்று நாம் காணும் மூர்த்தி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளால் ஸ்தாபிக்கபட்டதாகும். இன்றும், அங்கு கேரள நம்பூதிரி வகுப்பினரே தலைமை அர்ச்சகராக உள்ளனர்.

'மனஸஸ்சேந்த்ரியாணாம் ச ஹ்யைகாக்ரயம் பரமம் தப:'

மனம் மற்றும் புலன்களின் அடக்கமே சிறந்த தவமாகும்.

இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக