வியாழன், அக்டோபர் 28, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 195

48. யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி: |

ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||

இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

445. யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி: |

451. ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம் ||  

445. ஓம் யக்ஞாய நம:

ஸர்வயக்ஞ அனைத்து வேள்விகளின் 

ஸ்வரூபத்வாத் வடிவாக திகழ்வதால் 

யக்ஞ: பகவான் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து வேள்விகளின் வடிவாக இருக்கிறார். எனவே அவர் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

துஶ்டிகாரகோ (அனைத்து தேவர்களுக்கும்) திருப்தியை (இன்பத்தை) 

யக்ஞாகாரேண வேள்விகளின் வடிவாய் இருந்து 

ப்ரவர்த்தத வளர்க்கிறார் 

இதி வா யக்ஞ: எனவே, பகவான் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேள்விகளின் வடிவில் அனைத்து தேவர்களுக்கும் மகிழ்ச்சியை வளர்க்கிறார். எனவே அவர் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு:’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவே வேள்வியாவார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

446. ஓம் இஜ்யாய நம:

யஶ்டவ்யோப்யயம் ஏவ இதி (அந்த யக்ஞங்களின் மூலம்) வழிபடப்படுபவரும் பகவான் ஒருவரே 

இஜ்ய: எனவே, அவர் 'இஜ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் யக்ஞங்களின் வடிவாக உள்ளது மட்டுமன்றி, அந்த யக்ஞங்களால் வழிபடப்படுபவராகவும் உள்ளார். எனவே அவர் 'இஜ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஏவ என்ற சொல் யக்ஞங்களால் பகவான் ஒருவர் மட்டுமே வழிபடப்படுகிறார், மற்றோர் யவரும் அல்லர் என்பதை குறிக்கிறது.

யே யஜந்தி மகை: புண்யைர்தேவதாதீன்பித்ருனபி |

ஆத்மானமாத்மனா நித்யம் விஶ்ணுமேவ யஜந்தி தே || || (ஸ்ரீ ஹரி வம்சம்)

ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் புண்ணியமான வேள்விகளால் தேவர்களையும், முன்னோர்களையும் (பித்ருக்கள்) வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைத்திற்கும் (தமது, அந்த தேவர்கள் மற்றும் பித்ருக்களின்) உள்ளுறை ஆத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணுவையே (அந்த வேள்விகளின் மூலம்) வழிபடுகின்றனர்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது. 

447. ஓம் மஹேஜ்யாய நம:

ஸர்வாஸு அனைத்து 

தேவதாஸு தேவர்களை 

யஶ்டவ்யாஸு வழிபடப்படும் 

ப்ரகர்ஶேண மிகவும் சிறப்பாக (மிக உயர்வாக) 

யஶ்டவ்யோ வழிபடப்படுகிறார் 

மோக்ஷஃபலதாத்ருத்வாத் முக்தியை பலனாக அளிக்கவல்லவராகையால் 

இதி மஹேஜ்ய: எனவே, பகவான் 'மஹேஜ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

குறிப்பிட்ட பலனை வேண்டி வேள்விகளால் பற்பல தேவர்கள் வழிபடப்படுகின்றனர். ஆயினும், எவராலும் முக்தியை பலனாக அளிக்க இயலாது. அதை அளிக்கவல்ல பகவானை அனைவரும் மிகவும் சிறப்பாக வழிபடுகின்றனர். எனவே, பகவான் 'மஹேஜ்ய:' (அனைவரைக் காட்டிலும் சிறப்பாக வழிபடப்படுகிறார்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை அளிக்க வல்லவராதலால் வழிபடப்படும் அனைத்து தேவர்களைக் காட்டிலும் பகவானே உயர்ந்தவர். எனவே அவர் மஹா (உயர்ந்த) + இஜ்ய: (வழிபடப்படுபவர்) = மஹேஜ்ய:

448. ஓம் க்ரதவே நம:

யூபஸஹிதோ யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் 

யக்ஞ: வேள்விக்கு 

க்ரது: 'க்ரது' என்று பெயர். அந்த 'க்ரது' வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'க்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் வேள்விக்கு 'க்ரது' என்று பெயர். அந்த 'க்ரது' வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'க்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

449. ஓம் ஸத்ராய நம:

ஆஸத்யுபைதி சோதனாலக்ஷணம் விதிவடிவான தர்மத்தை அடைபவர்களை 

ஸத்ரம் 'ஸத்ரம்' என்று அழைப்பர். அவர்களின் உள்ளுறை ஆன்மாவான பகவானும் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விதிவடிவான தர்மத்தை அடைபவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸதஸ் ஸத்புருஶர்களான யோகிகளை அல்லது 'ஸத்' என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தை 

த்ராயத காப்பதால் 

இதி வா ஸத்ரம் பகவான் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்புருஶர்களான யோகிகளையும், 'ஸத்' என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தையும் காப்பதால் பகவான் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

450. ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் முமுகஷூணாம் 'ஸத்' அதாவது முக்தியை விழைவோருக்கு 

நான்யா கதிரிதி ஒரே புகலிடமாக இருப்பதால் 

ஸதாம் கதி: பகவான் 'ஸதாம் கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு ஒரே புகலிடமாக இருப்பதால் பகவான் 'ஸதாம் கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்யா = ந + அன்யா

451. ஓம் ஸர்வதர்ஶினே நம:

ஸர்வேஶாம் அனைத்து 

ப்ராணினாம் உயிரினங்களின் 

க்ருதாக்ருதம் செய்யும் (அல்லது செய்யாது விடும்) செயல்கள் ஸர்வம் அனைத்தையும் 

பஶ்யதி அறிகிறார் (காண்கிறார்) 

ஸ்வாபாவிகேன போதேனேதி தனது இயற்கையான தன்மையால் (வேறொன்றின் உதவியின்றி) 

ஸர்வதர்ஶீ எனவே பகவான் 'ஸர்வதர்ஶீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து உயிரினங்களின் செயல்களையும் அறிகிறார் (காண்கிறார்). எனவே அவர் 'ஸர்வதர்ஶீ' என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

க்ருதாக்ருதம் = செய்யத்தகுந்ததை செய்தல், செய்யவேண்டியதை செய்யாமலிருத்தல், செய்யத் தகாத செயல்களை செய்யாதிருத்தல் மற்றும் செய்யத் தகாத செயல்களை செய்தல் ஆகிய அனைத்தையும் பகவான் அறிகிறார். 

452. ஓம் விமுக்தாத்மனே நம:

ஸ்வபாவேன இயற்கையாகவே 

விமுக்த ஆத்மா அவருடைய ஆத்மா பற்றற்று இருப்பதால் 

யஸ்யேதி விமுக்தாத்மா பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இயற்கையாகவே பற்றற்ற ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விமுக்தஸ்சாஸாவாத்மா பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் 

சேதி வா விமுக்தாத்மா பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள் 350) 

453. ஓம் ஸர்வஜ்ஞாய நம:

ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார் 

ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார் 

ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் 'ஸர்வஜ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் 'ஸர்வஜ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை 

454. ஓம் ஞானமுத்தமாய நம:

ஞானமுத்தமம் 'ஞானம் உத்தமம்' என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த 

அஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாத 

ஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியது 

ஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததான 

ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு 'ஞானமுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு 'ஞானமுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.   

ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக