46. விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம் |
அர்த்தோSனர்த்தோ மஹாகோஶோ மஹாபோகோ மஹாதன: ||
இந்த நாற்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
426. விஸ்தார:, 427. ஸ்தாவரஸ்தாணு:, 428. ப்ரமாணம், 429. பீஜமவ்யயம் |
430. அர்த்த:, 431. அனர்த்த:, 432. மஹாகோஶ:, 433. மஹாபோக:, 434. மஹாதன: ||
426. ஓம் விஸ்தாராய நம:
விஸ்தீர்யந்தே விரிவடைகின்றன
ஸமஸ்தானி அனைத்து
ஜகந்த்யஸ்மின்னிதி உலகங்களும் எவருக்குள்ளே
விஸ்தார: அவர் (பகவான்) 'விஸ்தார:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து உலகங்களும் பகவானுக்குள்ளே விரிவடைகின்றன. எனவே, பகவான் 'விஸ்தார:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
427. ஓம் ஸ்தாவரஸ்தாணவே நம:
ஸ்திதிஶீலத்வாத் என்றும் நிலையாக இருப்பதை தனது தன்மையாகக் கொண்டிருப்பதால்
ஸ்தாவர: பகவான் 'ஸ்தாவர:' என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்திதிஶீலானி என்றும் நிலையாக இருக்கும்
ப்ருதிவ்யாதீனி பூமி முதலியனவும்
திஶ்டந்த்யஸ்மின்னிதி (தாம்) எவருக்குள் நிலைபெற்றிருக்கின்றனவோ, எவரால் தாங்கப்படுகின்றனவோ
ஸ்தாணு: (அந்த) பகவான் 'ஸ்தாணு:' என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்தாவரஸ்சாஸௌ ஸ்தாவரமாகவும்
ஸ்தாணுஸ்ச ஸ்தாணுவாகவும் இருப்பதால்
ஸ்தாவரஸ்தாணு: பகவான் 'ஸ்தாவரஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றும் நிலையாக இருப்பதை தனது இயற்கையாக (தன்மையாக) கொண்டிருப்பதால் 'ஸ்தாவர:' என்று அழைக்கப்படுகிறார். என்றும் நிலையாக இருக்கும் பூமி முதலியனவும் (தாமே) பகவானிடம் நிலைபெற்றிருக்கின்றன. எனவே, அவர் 'ஸ்தாணு:' என்று அழைக்கப்படுகிறார். தான் நிலையானவராகவும், பூமி முதலான மற்ற நிலையானவற்றிற்கும் தான் ஆதாரமாய் (அவற்றை) தாங்கி இருப்பதாலும் பகவான் 'ஸ்தாவரஸ்தாணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
428. ஓம் ப்ரமாணாய நம:
ஸம்விதாத்மனா நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால்
ப்ரமாணம் பகவான் 'ப்ரமாணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால் பகவான் 'ப்ரமாணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
429. ஓம் பீஜயாவ்யயாய நம:
அன்யதா வேறேதும்
பாவ பற்றுதல்கள்
வ்யதிரேகேன இன்றி
காரணமிதி (இந்தப் ப்ரபஞ்சத்திற்கும், பிறவிகளுக்கும்) காரணமாய் இருத்தலால்
பீஜமவ்யயம் பகவான் 'பீஜமவ்யயம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸவிஶேஶேணமேகம் இது பகவானை குறிக்கும் தனித்துவமான (பீஜம், அவ்யயம் என்று பிரிக்காது)
நாம ஒரே திருநாமமாகும்.
பகவான் பற்றுதல்களோ, தூண்டுதலோ இல்லாது இந்தப் ப்ரபஞ்சத்திற்கு (பிறவிகளுக்கு) ஒரே காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் 'பீஜமவ்யயம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஒரே திருநாமமான இது பகவானை தனியாகக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு திருநாமமாகும்.
430. ஓம் அர்த்தாய நம:
ஸுகரூபத்வாத் பேரின்பமே வடிவானவராய் இருத்தலால்
ஸர்வைரர்த்யத இதி அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார்
அர்த்த: எனவே, பகவான் 'அர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பேரின்பமே வடிவானவராய் இருத்தலால்
பகவான் அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார். எனவே, பகவான் 'அர்த்த:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வைரர்த்யத = ஸர்வை: +
அர்த்த்யத
உன்னை அருத்தித்து வந்தோம் (திருப்பாவை 25 - ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்று தொடங்கும் பாசுரம்)
431. ஓம் அனர்த்தாய நம:
ந வித்யதே இல்லை
ப்ரயோஜனம் பலன்கள்
ஆப்தகாமத்வாத் அஸ்யேதி தன்னிறைவு பெற்றவரானபடியால்
அனர்த்த: பகவான் 'அனர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு அடையப்படவேண்டிய பலன்கள்
என்று ஒன்றும் இல்லை. அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே அவர் 'அனர்த்த:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரிடமிருந்து பலன்களை பெறுவதற்காக நாம் அவரை அருத்திக்கிறோம். தன்னிறைவு பெற்றபடியால் அவருக்கு யாரையும் அருத்திக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அடையவேண்டிய அர்த்தங்களும் (அதாவது பொருள் முதலானவைகள்) எதுவுமில்லை.
432. ஓம் மஹாகோஶாய நம:
மஹாந்த: மிகப்பெரியதான (எளிதில் கடக்க இயலாத)
கோஶா உறைகளான
அன்னமாதய: அன்னம் (உணவு) முதலான
ஆச்சாதகா நாம் அறியவொட்டாமல் நம்மிடமிருந்து பகவானை மறைக்கின்றன
அஸ்யேதி எனவே
மஹாகோஶ: பகவான் 'மஹாகோஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அன்னம், ப்ராணம் முதலான உறைகள் (திரைகள் என்றும் கொள்ளலாம்) நாம் அறியவொட்டாமல் பகவானை நம்மிடமிருந்து மறைக்கின்றன. இவ்வாறு மிகப் பெரிய கோஶங்களால் (திரைகளால்) மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் பகவான் 'மஹாகோஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
433. ஓம் மஹாபோகாய நம:
மஹான் மிகச்சிறந்த
போக: ஸுகரூப 'போகம்' அதாவது இன்பமே வடிவாய்
அஸ்யேதி இருப்பதால்
மஹாபோக: பகவான் 'மஹாபோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பேரின்ப (போக) வடிவாய் இருப்பதால் பகவான் 'மஹாபோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
434. ஓம் மஹாதனாய நம:
மஹத் மிகச்சிறந்த
போகஸாதனலக்ஷணம் இன்பத்தைக் குறிப்பதாக
தனமஸ்யேதி செல்வத்தை உடையவராதலால்
மஹாதன: பகவான் 'மஹாதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் பேரின்பமே அவரது மிகப்பெரிய செல்வமாகும். அத்தகைய இன்பத்தை செல்வமாக உடையவராதலால் பகவான் 'மஹாதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக