வெள்ளி, செப்டம்பர் 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 192

45. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ: |

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

416. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |

421. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

416. ஓம் ருதவே நம:

காலாத்மனா பகவான் காலமே வடிவானவன் 

ருதுஶப்தேன 'ருது' என்ற 

லக்ஷ்யத இதி குறிக்கிறது 

ருது: எனவே பகவான் 'ருது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ருது' என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் 'ருது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

417. ஓம் ஸுதர்ஶனாய நம:

ஶோபனம் மங்களமான 

நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்கவல்லது 

தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம் 

ஸுதர்ஶன: எனவே, பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶுபே மங்களகரமான 

தர்ஶனே ஈக்ஷணே 'தர்ஶனம்' அதாவது திருக்கண்களை உடையவராதலால் 

பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற 

ஸுதர்ஶன: எனவே, பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய் 

த்ருஶ்யதே காட்சி அளிக்கிறார் பக்தைரிதி வா தனது அடியவர்களுக்கு 

ஸுதர்ஶன: எனவே, பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை என்றும் கொள்ளலாம். 

418. ஓம் காலாய நம:

கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்) 

ஸர்வமிதி வா அனைத்தையும் 

கால: எனவே, பகவான் 'கால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'கால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: இயங்குனவற்றில் காலம் நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார். 

419. ஓம் பரமேஶ்டினே நம:

பரமே ப்ரக்ருஶ்டே 'பரம' அதாவது உயர்ந்ததான 

ஸ்வே மஹிம்னி தன்னுடைய (இயற்கையான) மகிமையால் 

ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள் 

ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும் 

ஶீலமஸ்யேதி தன்மையுடையவராதலால் 

பரமேஶ்டி பகவான் 'பரமேஶ்டி' என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் ஒரு சிறிய வெற்றிடம் இருக்கும். அதை இதய ஆகாயம் என்று கூறுவர். பகவான் அந்த இதய ஆகாயத்துள் தன்னுடைய இயற்கையான, மிகச்சிறந்த மகிமையால் என்றும் நிலைபெற்றிருக்கிறார். எனவே அவர் 'பரமேஶ்டி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவர் அங்கே தனது இயற்கையான பெருமையினால் (மஹிமையினால்) வீற்றிருக்கிறார். அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).

'பரமேஶ்டி விப்ராஜதே' – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் 'பரமேஶ்டி' என்று அழைக்கப்படுகிறார்).     

420. ஓம் பரிக்ரஹாய நம:

ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால் 

பரிதோ எல்லாவிடங்களிலும் 

க்ருஹ்யதே  அடையப்படுகிறார் 

ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் 

பரிக்ரஹ: எனவே பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிதோ எங்கும் 

ஞாயதே இதி வா அறியப்படுகிறார் 

பரிக்ரஹ: எனவே பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் அறியப்படுகிறார் . எனவே, பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ 

பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் 

பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார் 

பரிக்ரஹ: எனவே பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

421. ஓம் உக்ராய நம:

ஸூர்யாதீனாமபி கதிரவன் முதலானோருக்கும் கூட 

பயஹேதுத்வாத் அச்சத்தை தருபவராக இருப்பதால் 

உக்ர: பகவான் 'உக்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலானோருக்கும் கூட அச்சத்தை தருபவராக இருப்பதால் பகவான் 'உக்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பீஶாதேதி ஸூர்ய:' (தைத்ரீய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (இந்த பரப்ரஹ்மனிடத்திருந்து உருவான அச்சத்தினால்) கதிரவன் உதிக்கின்றான்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

422. ஓம் ஸம்வத்ஸராய நம:

ஸம்வஸந்தி வசிக்கின்றனர் 

பூதாநி அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) 

யஸ்மின் இதி எவருக்குள் 

ஸம்வத்ஸர: அந்த பகவான் 'ஸம்வத்ஸர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) பகவானுக்குள் வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

423. ஓம் தக்ஷாய நம:

ஜகத்ரூபேண இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் 

வர்த்தமானத்வாத் பரந்து, விரிந்து வளர்வதால் 

தக்ஷ: பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்து வளர்வதால் பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸர்வகர்மாணி அனைத்து செயல்களையும் 

க்ஷிப்ரம் கரோதி இதி வா விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் 

தக்ஷ: பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து செயல்களையும் விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தக்ஷ என்ற சொல்லிற்கு உள்ள பல பொருள்களில் விரைவாக செயல்படுதல், வளர்தல் (தக்ஷதே) ஆகியவையும் உள்ளன. ஆச்சார்யாள் இந்த இரு பொருள்களிலும் உரை அளித்துள்ளார். 

424. ஓம் விஶ்ராமாய நம:

ஸம்ஸாரஸாகரே இந்தப் பிறவிப்பெருங்கடலில் 

க்ஷுத்பிபாஸாதி பசி, தாகம் முதலிய 

ஶடூர்மிபிஸ் ஆறு வகையான துன்பங்களால் 

தரங்கிதே அலைக்கழிக்கப்பட்டும் 

அவித்யாத்யைர்மஹாக்லேஶைர் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் 

மதாதிபிருபக்லேஶைஸ்ச (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் 

வஶீக்ருதானாம் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற (ஆத்மாவானது) 

விஶ்ராந்திம் (இவற்றலிருந்து விடுபடுவதான) அமைதியை 

காங்க்ஷமானானாம் விரும்பும்பொழுது 

விஶ்ராமம் மோக்ஷம் முக்தி என்னும் பேரின்பத்தை 

கரோதீதி அளிப்பவராதலால் 

விஶ்ராம: பகவான் 'விஶ்ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவிப்பெருங்கடலில் பசி, தாகம் முதலிய ஆறு வகையான துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டும் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற ஆத்மாவானது அமைதியை விரும்பும்பொழுது முக்தி என்னும் பேரின்பத்தை அளிப்பவராதலால் பகவான் 'விஶ்ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.     

425. ஓம் விஶ்வதக்ஷிணாய நம:

விஶ்வஸ்மாத் இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் 

தக்ஷிண: ஶக்த: 'தக்ஷிண' அதாவது (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் 

விஶ்வதக்ஷிண: ஆதலால் பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் ஆதலால் பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

விஶ்வேஶு இவ்வுலகிலுள்ள 

கர்மஸு அனைத்துக் செயல்களையும் 

தாக்ஷிண்யாத்வா விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் 

விஶ்வதக்ஷிண: பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைத்துக் செயல்களையும் விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக