வியாழன், செப்டம்பர் 02, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 189

42. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ: |

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

384. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ: |

389. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

384. ஓம் வ்யவஸாயாய நம:

ஸம்வின்மாத்ர ஞானமே ஸ்வரூபத்வாத் வடிவானவராய் இருப்பதால் 

வ்யவஸாய: பகவான் 'வ்யவஸாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானமே வடிவானவராய் இருப்பதால் பகவான் 'வ்யவஸாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

385. ஓம் வ்யவஸ்தானாய நம:

யஸ்மின் வ்யவஸ்திதி: எவர் ஒழுங்கு செய்பவரோ 

ஸர்வஸ்யேதி அனைவரையும் 

வ்யவஸ்தான: அந்த பகவான் 'வ்யவஸ்தான:' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் (அனைத்தையும்) அவரவரது தகுதிக்கேற்ப ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் 'வ்யவஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்துகிறார்? 

லோகபாலாத்யதிகார அனைத்து லோக பாலகர்களையும் (இந்த ப்ரபஞ்சத்தைக் காக்க பகவானால் நியமிக்கப்பட்டவர்கள்) அவரவரது அதிகாரங்களை வரையறுப்பதன் மூலம், (அனைத்து உயிரினங்களையும்) 

ஜராயுஜ அதன் முழு உருவிலேயே பிறப்பவை (ஆங்கிலத்தில் இவற்றை Mammals என்கிறோம்), 

அண்டஜ முட்டையிலிருந்து பிறப்பவை 

உத்பிஜ்ஜ விதையிலிருந்து பிறப்பவை (என்று வரையறுக்கிறார்) (மனிதர்களை) 

ப்ராஹ்மண அந்தணர்கள் 

க்ஷத்ரிய மறவர் 

வைஶ்ய வணிகர் 

ஸூத்ர தொழிலாளிகள் 

அவாந்தர வர்ண இவையனைத்திலும் சேராதவர் (என்று வரையறுக்கிறார்) 

ப்ரஹ்மசாரி (வேதம் பயிலும்) மாணவன் 

க்ருஹஸ்த இல்லறத்தோர் 

வானப்ரஸ்த உலக வாழ்க்கையின் கடமைகளை முடித்து வனம் சென்றோர் 

ஸந்யாஸ லக்ஷணாஶ்ரம துறவு பூண்டோர் 

தத்தர்மாதிகான் (இத்தகைய நால்வகை வாழ்வு முறையினோரையும்) அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தினாலும் 

விபஜ்ய கரோதி இதி வா பிரித்து வைப்பதனால் 

வ்யவஸ்தான: பகவான் 'வ்யவஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த உலகத்தைக் காக்க அவரால் நியமிக்கப்பட்ட லோக பாலகர்களை அவரவரது அதிகாரங்களின் மூலமும், உயிரினங்களை கருப்பையிலிருந்து தோன்றுவது, முட்டையிலிருந்து தோன்றுவது மற்றும் விதையிலிருந்து தோன்றுவது என்று மூவகையாகவும், மனிதர்களை அந்தணர், மறவர், வணிகர், தொழிலாளி மற்றும் இவையெதிலும் சேராத ஐந்தாவது வகையினர் என்று அவரவரின் தொழில் மூலமும், மாணவர், இல்லறத்தோர், வனவாழ்வை மேற்கொண்டோர் மற்றும் துறவி ஆகியோரை அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தாலும் ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் 'வ்யவஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க்ருத்யல்யுடோ பஹுலம்' (பாணினி ஸூத்ரம் 3.3.223)

இதி பஹுலக்ரஹணாத் கர்த்தரி ல்யுட் ப்ரத்யய:

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி 'வ்யவஸ்தான:' என்ற இந்த திருநாமம் உருவாகிறது.  

386. ஓம் ஸம்ஸ்தானாய நம:

அத்ர பூதானாம் அனைத்து உயிரினங்களும் 

ஸம்ஸ்திதி: ப்ரளயாத்மிகா ப்ரளய (அழியும்) காலத்தில் அவரிடம் சென்று ஒன்றுகின்றன 

ஸம்ஸ்தான: எனவே, பகவான் 'ஸம்ஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழியும் காலமான ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் பகவானிடம் சென்று ஒன்றுகின்றன. எனவே , அவர் 'ஸம்ஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸமீசீனம் மிகவும் சிறந்த 

ஸ்தானமஸ்யேதி வா இருப்பிடமாதலால் 

ஸம்ஸ்தான: பகவான் 'ஸம்ஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்திலும் மிகச் சிறந்த இருப்பிடமாவார். எனவே, அவர் 'ஸம்ஸ்தான:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

387. ஓம் ஸ்தானதாய நம:

த்ருவாதீனாம் 'துருவ' பதம் முதலான 

கர்மானுரூபம் அவரவரது செயல்களுக்கேற்ப 

ஸ்தானம் பதவிகளை 

ததாதீதி அளிக்கிறார் 

ஸ்தானத: எனவே பகவான் 'ஸ்தானத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரவரது செயல்களுக்கேற்ப துருவ பதம் முதலிய பதவிகளை வழங்குகிறார். எனவே, பகவான் 'ஸ்தானத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

388. ஓம் த்ருவாய நம:

அவினாஶித்வாத் அழிவற்றவராதலால் 

த்ருவ: பகவான் 'த்ருவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழிவற்றவராதலால் (நிலையானவராதலால்) பகவான் 'த்ருவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

389. ஓம் பரர்த்தயே நம:

பரா மேலான 

ருத்திர்விபூதிர் 'ருத்தி' அதாவது செல்வம் 

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் 'பரர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் 'பரர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

390. ஓம் பரமஸ்பஶ்டாய நம:

பரா மேலான 

மா ஶோபா 'மா' அதாவது அழகு 

அஸ்யேதி பரம: பகவான் 'பரம:' 

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர் 

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர் 

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும் 

ஸ்பஶ்ட: பகவான் 'ஸ்பஶ்ட:' என்று அழைக்கப்படுகிறார் 

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் 'பரமஸ்பஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் 'பரமஸ்பஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

391. ஓம் துஶ்டாய நம:

பரமானந்தைக பேரின்பமே 

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால் 

துஶ்ட: பகவான் 'துஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் 'துஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் 'த'காரத்தை  'து' (அதாவது வடமொழியில் உள்ள முதல் 'த') என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம். 

392. ஓம் புஶ்டாய நம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும் 

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால் 

புஶ்ட: பகவான் 'புஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் 'புஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

393. ஓம் ஸுபேக்ஷணாய நம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் 'ஈக்ஷணை' அதாவது அருட்பார்வையானது 

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது 

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும் 

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது 

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது 

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது 

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது 

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது 

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது 

ஸுபேக்ஷண: எனவே பகவான் 'ஸுபேக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் 'ஸுபேக்ஷண:' (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதி ஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக