43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய: |
வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||
இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
394. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400.
அனய: |
401. வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||
394. ஓம் ராமாய நம:
|
நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்
யோகினோ யோகிகளை
ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்
ராம: பகவான் 'ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்தமில் பேரின்ப வடிவினராய், யோகிகளை மனமகிழச் செய்பவராதலால் பகவான் 'ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |
இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே || (பத்ம புராணம்)
எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான
மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் 'ராம' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி பத்மபுராணே | இவ்வாறு பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி
ரமணீயம் மிக அழகிய
வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்
தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்
ராம: பகவான் 'ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, தன்னிச்சையால் தயரதனின்
திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் 'ராம:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே 'ராமநாமத்தை' உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.
நன்மையையும் செல்வமும்
நாளும் நல்குமே
திண்மையும் பாவமும்
சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமும் இன்றித்
தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் - கம்ப ராமாயணம்
கற்பார் இராமபிரானை
அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா
புல்லெறும்பாதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில்
வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே (திருவாய்மொழி 7.5.1)
ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் (ஸ்ரீ ராம ராம ராமேதி...
395. ஓம் விராமாய நம:
விராமோ அவஸானம் 'விராம' என்றால் முடிவாக தங்கும் இடம்
ப்ராணினாம் அஸ்மின் இதி அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்
விராம: பகவான் 'விராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் 'விராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
396. ஓம் விரதாய நம:
விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்
ரதமஸ்ய விஶயசேவாயாமிதி 'ரதம்' அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)
விரத: எனவே பகவான் 'விரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஏனைய உலக இன்பங்களில்
(புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் 'விரத:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.
ஒரு சில பதிப்புகளில் இந்த திருநாமம் 'விரஜ:' என்று வழங்கப்பட்டுள்ளது. பதம் வேறாயினும் பொருள் ஒன்றே.
397. ஓம் மார்காய நம:
யம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்
அம்ருதத்வாய கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ
யோகினோ முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்
ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்
மார்க: எனவே, பகவான் 'மார்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானை அறிவதாலேயே யோகிகள் முக்தியை அடைகின்றனர். முக்தி அடைவதற்கு பகவான் ஒருவரே வழி. எனவே, பகவான் 'மார்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘நான்ய: பந்தா
வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)
ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: எவரை விடுத்து
மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
398. ஓம் நேயாய நம:
மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக
ஜீவ: ஜீவாத்மா
பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு
நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்
நேய: எனவே பகவான் 'நேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பேரறிவான ஞானத்தின் வழியே ஒரு
ஜீவாத்மா பரமாத்ம தன்மையை அடைகிறான் (பகவானே அவனை அவ்வாறு அழைத்துச் செல்கிறார்).
எனவே, பகவான் 'நேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே ஜீவனை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார் என்பது அடுத்த திருநாமத்தால் விளங்கும். இந்த திருநாமம் ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பரமாத்மாவின் செயல்பாடுகளை விளக்குவதே ஆகும். எனவே இந்த திருநாமம் மேலாக ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பகவானையே குறிக்கிறது.
399. ஓம் நயாய நம:
நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்
நய: பகவான் 'நய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
நேதா தலைவராய் இருந்து.
(முன்திருநாமத்தில் குறிப்பிட்டவாறு) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை பரமாத்ம தன்மை (தன்னிடம்) வந்தடையுமாறு தலைவராய் இருந்து வழி நடத்திச் செல்வதால் பகவான் 'நய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மார்கோ வழியாகவும்
நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்
நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்
இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்
பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.
பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.
400. ஓம் அநயாய நம:
நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை
இதி அனய: எனவே பகவான் 'அனய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும்
பகவானுக்கு (அவருக்கு) மேலான தலைவர் வேறொருவரும் இல்லை. எனவே அவர் 'அனய:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமக்கு ஞானம் முதிர்ந்தால் பரமாத்ம தன்மையை அளிக்கிறார் பகவான். ஆனால், அவருடைய பரமாத்ம தன்மையை வேறெவரும் அவருக்கு அளித்தனரா என்ற கேள்வி நமக்குள் பிறக்கலாம். அதை போக்குவதற்காக, அவருக்கு வேறொரு தலைவர் இல்லை என்று விளக்குகிறது இந்த திருநாமம். பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.
இதி நாம்னாம் சதுர்த்தம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (அனய: என்னும் இந்த திருநாமம் வரையில்) நானூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
401. ஓம் வீராய நம:
விக்ரமஶாலித்வாத் வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்
வீர: பகவான் ' வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால் பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
402. ஓம் ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாய நம:
விக்ரமஶாலித்வாத் வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்
வீர:
பகவான் ' வீர:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான
விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்
ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்
ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் 'ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பலம்பொருந்தியோரான நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் மிகுந்த பலமுடையவராதலால் பகவான் 'ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
403. ஓம் தர்மாய நம:
ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்
தாரணாத் தாங்குவதால்
தர்ம: பகவான் 'தர்ம:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து உயிரினங்களையும் தாங்குவதால் பகவான் 'தர்ம:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அணுரேவ தர்ம:’
வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: (அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன
தர்மைர் தர்மத்தாலே
ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)
தர்ம: பகவான் 'தர்ம:' என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(அல்லது) தர்மத்தாலே வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்) பகவான் 'தர்ம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
404. ஓம் தர்ம விதுத்தமாய நம:
ஶ்ருதய: 'ஶ்ருதிகளான' வேதங்களும்
ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்
யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ
ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே
ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள்
உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்
இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் 'தர்மவிதுத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ருதிகளான வேதங்களும் ஸ்ம்ருதிகளும் பகவானின் ஆணைகளே. அவரே, அதில் குறிப்பிட்டுள்ள அறங்களை முழுமையாக அறிந்தவர்களுள் சிறந்தவராவார். எனவே, பகவான் 'தர்மவிதுத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
Excellent explanation. Thanks
பதிலளிநீக்கு