கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||
இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
586. ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
591. கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய: ||
586. ஶுபாங்காய நம:
ஸுந்தராம் அழகியதான
தனும் உடலை
தாராயன் தரித்திருப்பவராதலால்
ஶுபாங்க: பகவான் 'ஶுபாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மிகவும் அழகிய உடலைத் தாங்கியவர் (உடையவர்) ஆதலால் பகவான் 'ஶுபாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
587. ஶாந்திதாய நம:
ராக விருப்பு
த்வேஶாதி வெறுப்புகள்
நிர்மோக்ஷலக்ஷணம் விலகிய தன்மைக்கு அடையாளமான
ஶாந்திம் (மன)அமைதியை (பொறுமையை)
ததாதீதி அளிப்பவர் ஆதலால்
ஶாந்தித: பகவான் 'ஶாந்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
விருப்பு, வெறுப்புக்கள் அற்ற தன்மையின் அடையாளமான மன அமைதியையும், பொறுமையையும் அளிப்பவர் ஆதலால் பகவான் 'ஶாந்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
588. ஸ்ரஶ்ட்ரே நம:
ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில்
ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)
ஸஸர்ஜேதி படைப்பதால்
ஸ்ரஶ்டா பகவான் 'ஸ்ரஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
படைப்பின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) படைப்பதால் பகவான் 'ஸ்ரஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
589. குமுதாய நம:
கௌ பூம்யாம் 'கு' என்றால் பூமியில் (பூமாதேவியிடம்)
மோதத இதி வா மகிழ்கிறார்
குமுத: பகவான் 'குமுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் 'கு' என்று அழைக்கப்படும் பூமியிடம் (பூமாதேவியிடம்) மகிழ்கிறார். எனவே பகவான் 'குமுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
590. குவலேஶாய நம:
கோ: க்ஷிதேர் 'கு' என்று அழைக்கப்படும் பூமியை
வலனாத் ஸம்ஸரணாத் 'வல' அதாவது சூழ்ந்திருப்பதால்
குவலம் ஜலம் நீரிற்கு 'குவலம்' என்று பெயர்
தஸ்மின் அதில் (நீரில்)
ஶேத இதி சயனித்து இருப்பதால்
குவலேஶய: பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கு' என்று அழைக்கப்படும் பூமியை அதாவது சூழ்ந்திருப்பதால் நீரிற்கு 'குவலம்' என்று பெயர். அதில் (நீரில்) சயனித்து இருப்பதால் பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஶயவாஸவாஸிஶ்வகாலாத்' (பாணினி ஸூத்ரம் 6.3.18)
இதி அலுக் ஸப்தம்யா: |
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இந்த சொல் உருவாயுள்ளது.
குவலஸ்ய பதரி ஃபலஸ்ய 'குவல' என்றால் இலந்தைப் பழம்
மத்யே அதன் நடுவில்
ஶேதே சயனித்து இருக்கிறான்
தக்ஷக: 'தக்ஷகன்'
ஸோபி தஸ்ய அந்த தக்ஷகனும்
விபூதிரிதி வா ஹரி: பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும்.
குவலேஶய: எனவே, பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'குவல' என்றழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் நடுவில்
தக்ஷகன் சயனித்து இருக்கிறான். தக்ஷகனும் பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும்.
எனவே பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த உரையின் படி தக்ஷகனுக்கு 'குவலேஶய:' என்று பெயர். அவன் பகவானின் ஒரு வெளிப்பாடு ஆதலால் பகவானுக்கே அந்த திருநாமம் பொருந்தும்.
கௌ பூம்யாம் 'கு' என்றால் பூமி
வலதே ஸம்ஸ்ரயதே இதி அந்த பூமியில் (ஊர்ந்து) செல்வதால்
ஸர்ப்பாணாம் பாம்புகளின்
உதரம் குவலம் வயிற்றுப் பகுதி குவலம் என்று அழைக்கப்படுகிறது,
தஸ்மிந் ஶேஶோதரே ஆதிசேடனது மடியில் (வயிற்றில்)
ஶேத இதி சயனித்து இருப்பதால்
குவலேஶய: பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'கு' என்றழைக்கப்படும் பூமியில் ஊர்ந்து செல்வதால் பாம்புகளின் வயிற்றுப்பகுதியை 'குவலம்' என்று அழைப்பார்கள். அத்தகைய பாம்பான ஆதிசேடனின் வயிற்றில் (குவலயத்தில்) சயனித்து இருப்பதால் பகவான் 'குவலேஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
591. கோஹிதாய நம:
கவாம் ஆவினங்களை
வ்ருத்யர்த்தம் வளர்ப்பதற்காக (அவற்றை காப்பதற்காக)
கோவர்தனம் கோவர்தன மலையை
த்ருதவானிதி (கையில்) ஏந்தினார்
கோப்யோ ஹிதோ அந்த ஆநிரைகளின் நலத்தை பேணி
கோஹித: எனவே பகவான் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் (இந்திரன் வ்ருந்தாவனத்தின் மீது கல்மாரி பொழிந்த பொது) ஆநிரைகளின் நலத்தை பேணி, அவற்றைக் காக்க கோவர்தன மலையை கையில் ஏந்தினார். எனவே அவர் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கோர்பூமே: 'கோ' என்றழைக்கப்படும் பூமியின்
பாராவதரணேச்சயா (பார அவதரண இச்சயா) பாரத்தைக் குறைக்கும் பொருட்டு தனது இச்சையால்
ஶரீரக்ரஹணம் குர்வன்வா உடலை ஏற்றுக் கொள்வதால்
கோஹித: பகவான் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'கோ' என்றழைக்கப்படும் இந்த பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு (ஒவ்வொரு அவதாரத்தின் பொழுதும்) தனது இச்சையால் ஒரு உடலை ஏற்றுக் கொள்வதால் பகவான் 'கோஹித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
592. கோபதயே நம:
கோர்பூம்யா: 'கோ' என்றழைக்கப்படும் பூமிக்கு
பதி: கணவரானபடியால்
கோபதி: பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'கோ' என்றழைக்கப்படும் பூமிக்கு கணவரானபடியால் பகவான்
'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பதி என்றால் தலைவன் அல்லது அரசன் என்றும் பொருள். அவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது பூமிக்குத் தலைவன் அல்லது பூமியின் அரசன் என்றும் இந்த உரையை கொள்ளலாம்.
593. கோப்த்ரே நம:
ரக்ஷகோ காப்பாற்றுகிறார்
ஜகத இதி பூமியை (பூமியில் உள்ளோரை)
கோப்தா எனவே பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த பூமியை (அதில் உள்ளோரைக்) காப்பதால் பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வமாயயா தனது மாயையால்
ஸ்வமாத்மானம் தனது ஆத்மாவை, அதாவது தனது உண்மையான தன்மையை
ஸம்வ்ருணோதீதி வா மறைத்துக் கொள்கிறார்
கோப்தா எனவே பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது மாயையால் தன் இயற்கையான தன்மையை (ஆத்மாவை) அனைவரிடமிருந்தும் மறைத்துக் கொள்வதால் பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
594. வ்ருஶபாக்ஷாய நம:
ஸகலான் காமான் அனைத்து ஆசைகளையும்
வர்ஶுகே பொழியும்
அக்ஷிணீ அஸ்யேதி திருக்கண்களை உடையவராதலால்
வ்ருஶபாக்ஷ: பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது அடியவர்களின் அனைத்து ஆசைகளையும் (விருப்பங்களையும்) மழையைப்போல பொழியும் திருக்கண்களை உடையவராதலால் பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶபோ தர்ம: 'வ்ருஶ' என்றால் தர்மம் (அறம்)
ஸ ஏவ வா த்ருஶ்டிர் அஸ்யேதி தனது பார்வையாக கொண்டிருப்பதால்
வ்ருஶபாக்ஷ: பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வ்ருஶ' என்று அழைக்கப்படும் அறத்தை தனது பார்வையாக
கொண்டிருப்பதால் பகவான் 'வ்ருஶபாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறமே கண்ணாக - அறத்தின் வழியிலேயே நடக்கிறார் என்று பொருள்.
595. வ்ருஶப்ரியாய நம:
வ்ருஶோ தர்ம: 'வ்ருஶ' என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை)
ப்ரியோ யஸ்ய ஸ எவருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ
வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வ்ருஶ' என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை) விரும்புபவராதலால் பகவான் 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வா ப்ரியஸ்ய' (வார்த்திகம்) இதி பூர்வநிபாதவிகல்பவிதானாத் பரநிபாத:
இங்கு ஆசார்யாள் இந்த சொல்லிற்கு உரித்தான இலக்கணக் குறிப்பை அளிக்கிறார்.
வ்ருஶஸ்சாஸௌ 'வ்ருஶ' அதாவது அறமே வடிவானவராகவும்
ப்ரியஸ்சேதி வா ப்ரியமானவராகவும் (அனைவராலும் விரும்பப்படுபவராகவும்) இருப்பதால்
வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அறமே வடிவானவராகவும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும் இருப்பதால் பகவான் 'வ்ருஶப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக