ஞாயிறு, ஜூலை 17, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 211

64. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

596. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ: |

601. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

596. அநிவர்த்தினே நம:

தேவாஸுரஸங்க்ரமான் தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் 

ந நிவர்த்தத இதி எப்பொழுதும் பின்வாங்காதவர் ஆதலால் 

அநிவர்த்தீ பகவான் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் (தேவர்களின் சார்பாக போராடும் பொழுது) பகவான் எப்பொழுதும் பின்வாங்குவதில்லை  ஆதலால், அவர் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வ்ருஶபரியத்வாத் அறவழியை விரும்புபவர் ஆதலால் 

தர்மான் ந நிவர்த்தத இதி வா அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை) 

அநிவர்த்தீ எனவே, பகவான் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியை விரும்புபவர் (வ்ருஶபரிய:) ஆதலால் பகவான் அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை). எனவே, அவர் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

597. நிவ்ருத்தாத்மனே நம:

ஸ்வபாவதோ இயற்கையாகவே 

விஶயேப்யோ விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) 

நிவ்ருத்த நாட்டமின்றி திரும்பும் 

ஆத்மா மனோSஸ்யேதி ஆத்மா அதாவது மனதை உடையவராதலால் 

நிவ்ருத்தாத்மா பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மனது (ஆத்மா) இயற்கையாகவே விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) நாட்டமின்றி அவற்றை விட்டு விலகித் திரும்புகிறது. எனவே அவர் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

598. ஸங்க்ஷேப்த்ரே நம:

விஸ்த்ருதம் பரந்து, விரிந்துள்ள 

ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 

ஸம்ஹாரஸமயே ப்ரளய காலத்தில் 

ஸூக்ஷ்மரூபேண அதன் நுண்வடிவாய் 

ஸங்க்ஷிபன் சுருக்குவதால் 

ஸங்க்ஷேப்தா பகவான் 'ஸங்க்ஷேப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரந்து, விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் அதன் நுண்வடிவாய் சுருக்குவதால் பகவான் 'ஸங்க்ஷேப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

599. க்ஷேமக்ருதே நம:

உபாத்தஸ்ய படைக்கப்பட்ட பொருட்களை 

பரிரக்ஷணம் கரோதீதி காப்பதால் 

க்ஷேமக்ருத் பகவான் 'க்ஷேமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைக்கப்பட்ட பொருட்களை காப்பதால் பகவான் 'க்ஷேமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

600. ஶிவாய நம:

ஸ்வநாம தன்னுடைய திருநாமத்தை 

ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே 

பாவயன் புனிதப்படுத்துவதால் 

ஶிவ: பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய திருநாமத்தை நினைத்த மாத்திரத்திலேயே (நினைப்போரின் பாவங்களை அழித்து அவர்களை) புனிதப்படுத்துவதால் பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஶஶ்டம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஶிவ: என்னும் இந்த திருநாமம் வரையில்) அறுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

601. ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:

ஸ்ரீவத்ஸ ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் 

சிஹ்னமஸ்ய சின்னம் (குறி) 

வக்ஷஸி திருமார்பில் 

ஸ்திதமிதி இருப்பதால் 

ஸ்ரீவத்ஸவக்ஷா: பகவான் 'ஸ்ரீவத்ஸவக்ஷா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் சின்னம் (மறு) அவரது திருமார்பில் இருப்பதால் பகவான் 'ஸ்ரீவத்ஸவக்ஷா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

602. ஸ்ரீவாஸாய நம:

அஸ்ய அவரது 

வக்ஷஸி திருமார்பில் 

ஸ்ரீரனபாயினி அவரை விட்டு என்றும் பிரியாத திருமகளானவள் 

வஸதீதி வசிப்பதால் 

ஸ்ரீவாஸ: பகவான் 'ஸ்ரீவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமார்பில், அவரை விட்டு என்றும் நீங்காத திருமகள் நித்ய வாசம் செய்கிறாள். எனவே, பகவான் 'ஸ்ரீவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

603. ஸ்ரீபதயே நம:

அம்ருதமதனே அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது 

ஸர்வான் அனைத்து 

ஸுரா(அ)ஸுராதீன் தேவர்கள் மற்றும் அஸுரர்களை 

விஹாய விடுத்து 

ஸ்ரீரேனம் பதித்வேன திருமகளால் தனது பதியாக (கணவனாக) 

வரயாமாஸேதி வரிக்கப்பட்டதால் 

ஸ்ரீபதி: பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது திருமகள் அனைத்து தேவர்கள் மற்றும் அஸுரர்களை விடுத்து பகவானேயே தனது பதியாக (கணவனாக) வரித்தாள். எனவே, பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீ: பராஶக்தி: 'ஸ்ரீ' என்றால் பராசக்தியைக் குறிக்கும் 

தஸ்யா: பதிரிதி வா அந்த பராசக்தியின் (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் 

ஸ்ரீபதி: பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ்ரீ' என்றால் பராசக்தியைக் குறிக்கும் அந்த பராசக்தியை (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே' (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 6.8)

ஸ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது உயர்ந்த சக்தியானது (வேதங்களில்) பலவாறாக கூறப்பட்டுள்ளது.

604. ஸ்ரீமதாம்வராய நம:

ரிக்யஜு: ஸாமலக்ஷணா ரிக், யஜுர் மற்றும் ஸாமவேதங்கள் 

ஸ்ரீர்யேஶாம் அவரது ஸ்ரீ, அதாவது செல்வங்களாகும் 

தேஶாம் அவர்களை (விட

ஸர்வேஶாம் அனைவரின் 

ஸ்ரீமதாம் ஸ்ரீமான்களாகிய 

விரிஞ்ச்யாதீனம் ப்ரஹ்மா முதலான 

ப்ரதானபூத: மேலானது 

ஸ்ரீமதாம்வர: எனவே பகவான் 'ஸ்ரீமதாம்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே பகவானின் செல்வங்களாகும். (இவ்வாறு வேதங்களை அறிந்த) ஸ்ரீமான்களாகிய ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் (அவர்களை விட) பகவானின் செல்வம் (வேத ஞானம்) மேலானது. எனவே அவர் 'ஸ்ரீமதாம்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ரிச: ஸாமானி யஜூஶி | ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே ஸத்புருஷர்களின் (நல்லோரின்) அழியாத செல்வங்களாகும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக