சனி, செப்டம்பர் 10, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 212

65. ஸ்ரீத: ஸ்ரீஶ: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ஶ்ரேய: ஸ்ரீமான்லோகத்ர்யாஶ்ரய: || 

இந்த அறுபத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

605. ஸ்ரீத:, 606. ஸ்ரீஶ:, 607. ஸ்ரீநிவாஸ:, 608. ஸ்ரீநிதி:, 609. ஸ்ரீவிபாவன: |

610. ஸ்ரீதர:, 611. ஸ்ரீகர:, 612. ஶ்ரேய:. 613. ஸ்ரீமான், 614. லோகத்ர்யாஶ்ரய: ||

605. ஸ்ரீதாய நம:

ஶ்ரியம் செல்வத்தை 

ததாதி அளிக்கிறார் 

பக்தானாமிதி (பக்தானாம் இதி) தனது அடியவர்களுக்கு 

ஸ்ரீத: பகவான் 'ஸ்ரீத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களுக்கு செல்வத்தை அளிப்பதால் பகவான் 'ஸ்ரீத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

606. ஸ்ரீஶாய நம:

ஶ்ரிய செல்வத்திற்கு (அல்லது திருமகளுக்கு) 

ஈஶ: ஈஸ்வரனாக இருக்கிறபடியால் 

ஸ்ரீஶ: பகவான் 'ஸ்ரீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செல்வத்திற்கு (அல்லது திருமகளுக்கு) ஈஸ்வரனாக இருக்கிறபடியால் பகவான் 'ஸ்ரீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

607. ஸ்ரீநிவாஸாய நம:

ஸ்ரீமத்ஸு ஸ்ரீமான்களிடம் 

நித்யம் எப்பொழுதும் 

வஸதீதி வசிப்பதால் 

ஸ்ரீநிவாஸ: பகவான் 'ஸ்ரீநிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீஶப்தேன ஸ்ரீ என்ற சொல்லினால் 

ஸ்ரீமந்தோ இங்கு ஸ்ரீமான்கள் 

லக்ஷ்யந்தே குறிக்கப்படுகின்றனர்.

ஸ்ரீமான்களிடம் எப்பொழுதும் வசிப்பதால் பகவான் 'ஸ்ரீநிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீ என்ற சொல்லினால் இங்கு ஸ்ரீமான்கள் குறிக்கப்படுகின்றனர். மேலும் நாம் முந்தைய திருநாமங்களில் ஆச்சார்யாள் அளித்த, வேதங்களே 'ஸ்ரீ' சிறந்த செல்வமாகும், என்ற உரையையும் இங்கு கூட்டிப் பொருள் கொண்டால், இங்கு ஸ்ரீமான்கள் என்பது வேதத்தை நன்கு அறிந்தவர்கள் என்று பொருள்படும். எனவே, வேதங்களை கற்றுணர்ந்த 'ஸ்ரீமான்களிடம்' பகவான் என்றும் வசிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

608. ஸ்ரீநிதயே நம:

ஸர்வஶக்திமயேஸ்மின் ஸர்வ சக்தி படைத்த ஈஸ்வரனான பகவானிடம் 

அகிலா: உலகிலுள்ள (ப்ரபஞ்சம் முழுவதிலுமுள்ள) 

ஶ்ரியோ அனைத்து செல்வங்களும் 

நிதீயந்த இதி உறைந்திருப்பதால் 

ஸ்ரீநிதி: பகவான் 'ஸ்ரீநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வ சக்தி படைத்த ஈஸ்வரனான பகவானிடம் உலகிலுள்ள (ப்ரபஞ்சம் முழுவதிலுமுள்ள) அனைத்து செல்வங்களும் உறைந்திருக்கின்றன. எனவே, பகவான் 'ஸ்ரீநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடம் இல்லாத செல்வங்கள் இல்லை. அனைத்து செல்வங்களின் உறைவிடம் அவர். அவரின்றி வேறொரு செல்வமும் இல்லை.

609. ஸ்ரீவிபாவனாய நம:

கர்மானுரூபேண (தத்தம்) கர்ம வினைக்கு ஏற்ப 

விவிதா: பல்வேறு வகையான 

ஶ்ரிய: செல்வங்களை 

ஸர்வபூதானம் அனைத்து உயிரினங்களுக்கும் (ஜீவராசிகளுக்கும்) 

விபாவயதீதி பிரித்து அளிப்பதால் 

ஸ்ரீவிபாவன: பகவான் 'ஸ்ரீவிபாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் (ஜீவராசிக்கும்) அவரவரது (அதனதன்) கர்ம வினைக்கு ஏற்ப வகைவகையாக செல்வங்களை பிரித்து அளிப்பதால் பகவான் 'ஸ்ரீவிபாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு செல்வம் மிகையாகவோ, குறைவாகவோ கிடைப்பது நமது கர்ம வினைக்கு ஏற்பவேயாகும். அதை, பாரபட்சமின்றி பிரித்து அளிப்பதே பகவானின் செயலாகும். பலரும் இதற்கு பகவானை நொந்து கொள்கின்றனர். இது தேவையற்றது.

 610. ஸ்ரீதராய நம:

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களின் (ஜீவராசிகளின்) 

ஜனனீம் தாயாரான 

ஶ்ரியம் 'ஸ்ரீ' அதாவது திருமகளை 

வக்ஷஸி வஹன் தனது திருமார்பில் தாங்கியுள்ளபடியால் ஸ்ரீதர: பகவான் 'ஸ்ரீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் (ஜீவராசிகளின்) தாயாரான திருமகளை தனது திருமார்பில் தாங்கியுள்ளபடியால் பகவான் 'ஸ்ரீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

611. ஸ்ரீகராய நம:

ஸ்மரதாம் (தம்மைப் பற்றி) நினைத்தும் 

ஸ்துவதாம் துதித்தும் 

அர்ச்சயதாம் பூசனை செய்தும் 

பக்தானாம் வழிபடும் அடியவர்களுக்கு 

ஶ்ரியம் செல்வத்தை 

கரோதீதி தருவதால் 

ஸ்ரீகர: பகவான் 'ஸ்ரீகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(தம்மைப் பற்றி) நினைத்தும், துதித்தும், பூசனை செய்தும் வழிபடும் அடியவர்களுக்கு செல்வத்தை தருவதால் பகவான் 'ஸ்ரீகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

612. ஶ்ரேயஸே நம:

அநபாயி அழியாத (குறையாத) 

ஸுகாவாப்தி லக்ஷணம் இன்பத்திற்கு 

ஶ்ரேய: 'ஶ்ரேய' என்று பெயர் 

தஸ்ச பரஸ்யைவ அந்த குறையாத இன்பமே பரம்பொருளின் 

ரூபமிதி ஸ்வரூபமாதலால் (உருவமாதலால்) 

ஶ்ரேய: பகவான் 'ஶ்ரேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழியாத (குறையாத) இன்பத்திற்கு 'ஶ்ரேய' என்று பெயர். அந்த குறையாத இன்பமே பரம்பொருளின் ஸ்வரூபமாதலால் (உருவமாதலால்), பகவான் 'ஶ்ரேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

613. ஸ்ரீமதே நம:

ஶ்ரியோஸ்ய 'ஸ்ரீ' யை (செல்வத்தை) 

ஸந்தீதி உடையவராதலால் 

ஸ்ரீமான் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செல்வத்தை (ஸ்ரீ) உடையவராதலால் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

22  வது திருநாமத்தில் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்திற்கு "பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்பவர்" என்று ஆச்சார்யாள் விளக்கவுரை அளித்திருந்தார்.

178 வது திருநாமத்தில் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்திற்கு "அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள்" என்று ஆச்சார்யாள் விளக்கவுரை அளித்திருந்தார்.

220 வது திருநாமத்தில் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்திற்கு "அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவர்" என்று ஆச்சார்யாள் விளக்கவுரை அளித்திருந்தார்.

இந்த திருநாமத்தில் செல்வத்தை உடையவர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

613. லோகத்ர்யாஶ்ரயாய நம:

த்ரயானாம் லோகாநாம் (பூ, பூவ:, ஸுவ:) என்ற மூன்று உலகங்களுக்கும் (மூவுலக வாசிகளுக்கும்) 

ஆஶ்ரயத்வாத் புகலிடமாக இருப்பதால் 

லோகத்ர்யாஶ்ரய: பகவான் 'லோகத்ர்யாஶ்ரய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பூ, பூவ:, ஸுவ:) என்ற மூன்று உலகங்களுக்கும் (மூவுலக வாசிகளுக்கும்) புகலிடமாக இருப்பதால், பகவான் 'லோகத்ர்யாஶ்ரய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக