இந்தஅறுபத்தாறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
615. ஸ்வக்ஷ:, 616. ஸ்வங்க:, 617. ஶதானந்த:, 618. நந்தி:, 619. ஜ்யோதிர்கணேஶ்வர: |
620. விஜிதாத்மா, 621. அவிதேயாத்மா, 622. ஸத்கீர்த்தி:, 623. சின்னஸம்ஶய: ||
615. ஸ்வக்ஷாய நம:
ஶோபனே அழகியதான
புண்டரீகாபே தாமரை இதழை ஒத்த
அக்ஷிணீ திருக்கண்களை
அஸ்யேதி உடையவராதலால்
ஸ்வக்ஷ: பகவான் 'ஸ்வக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தாமரை இதழ்களை ஒத்த அழகியதான திருக்கண்களை உடையவராதலால் பகவான் 'ஸ்வக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
616. ஸ்வங்காய நம:
ஶோபனான்யங்கானி (ஶோபனானி அங்கானி) அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை)
அஸ்யேதி உடையவராதலால்
ஸ்வங்க: பகவான் 'ஸ்வங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை) உடையவராதலால் பகவான் 'ஸ்வங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
617. ஶதானந்தாய நம:
ஏக ஏவ பரமானந்த ஒரே பரமானந்தமானது
உபாதிபேதாச்சதயா ஒரு எல்லைக்கு உட்பட்டு
பித்யத இதி பலவாறாகத் (பல்வகையான ஆனந்தமாகத்) தெரிவதால்
ஶதானந்த: பகவான் 'ஶதானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(பரப்ரஹ்மத்தின்) ஒரே பரமானந்தமானது ஒரு எல்லைக்கு (உபாதி) உட்பட்டு பலவாறாகத் (பல்வகையான ஆனந்தமாகத்) தோற்றமளிப்பதால் பகவான் 'ஶதானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதாநி மாத்ராமுபஜீவந்தி' (ப்ருஹதாரண்யக உபநிஶத்
4.3.32)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மத்தின்) எல்லையில்லா ஆனந்தத்தின் ஒரு துளியிலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன (மகிழ்கின்றன).
618. நந்தயே நம:
பரமானந்தவிக்ரஹே ஒப்புயர்வற்ற ஆனந்த வடிவானவராதலால்
நந்தி:
பகவான் 'நந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒப்புயர்வற்ற ஆனந்த (பரமானந்த) வடிவானவராதலால் பகவான் 'நந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
619. ஜ்யோதிர்கணேஶ்வராய நம:
ஜ்யோதிர்கணானாம் அனைத்து ஒளிபடைத்த கூட்டங்களுக்கும்
ஈஶ்வர: தலைவர் (அவற்றை அடக்கி ஆளும் ஈசுவரர்) ஆதலால்
ஜ்யோதிர்கணேஶ்வர: பகவான் 'ஜ்யோதிர்கணேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(கதிரவன், முழுமதி, நக்ஷத்திரங்கள் முதலிய) அனைத்து ஒளிபடைத்த கூட்டங்களுக்கும் தலைவர் (அவற்றை அடக்கி ஆளும் ஈசுவரர்) ஆதலால் பகவான் 'ஜ்யோதிர்கணேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
620. விஜிதாத்மனே நம:
விஜித வென்றவர்
ஆத்மா மனோ 'ஆத்மா' அதாவது மனதை
யேன ஸ விஜிதாத்மா எனவே, பகவான் 'விஜிதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஆத்மா' அதாவது மனதை வென்றவராதலால் பகவான் 'விஜிதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
621. அவிதேயாத்மனே நம:
ந கேனாபி ஒருவராலும் (எவ்விதத்திலும்)
விதேய கட்டுப்படாத (அடக்கியாள முடியாத)
ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி ஆத்மா அதாவது இயற்கையான தன்மையை உடையவராதலால்
அவிதேயாத்மா பகவான் 'அவிதேயாத்மா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒருவராலும் (எவ்விதத்திலும்) கட்டுப்படாத (அடக்கியாள முடியாத) ஆத்மா அதாவது இயற்கையான தன்மையை உடையவராதலால் பகவான் 'அவிதேயாத்மா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
622. ஸத்கீர்த்தயே நம:
ஸதீ அவிததா 'ஸத்' அதாவது உண்மையான
கீர்த்திரஸ்யேதி கீர்த்தி அதாவது பெருமையை உடையவராதலால்
ஸத்கீர்த்தி: பகவான் 'ஸத்கீர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் கீர்த்தி (பெருமை) உண்மையானது. எனவே அவர் 'ஸத்கீர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மற்றோரது கீர்த்தி புகழ்ச்சிக்காகக் கூறப்படுகிறது. பகவானது கீர்த்திகளோ முற்றிலும் உண்மையானது.
623. சின்னஸம்ஶயாய நம:
கரதலாமலகவத்ஸர்வம் (கரதல அமலகவத் ஸர்வம்) உள்ளங்கை நெல்லிக்கனியென அனைத்தையும்
ஸாக்ஷாத்க்ருதவத: உள்ளபடி அறிபவராதலால்
க்வாபி துளியளவும் (எங்கேயும்)
ஸம்ஶயோ நாஸ்தீதி ஐயப்பாடு இல்லாதவராதலால்
சின்னஸம்ஶய: பகவான் 'சின்னஸம்ஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உள்ளங்கை நெல்லிக்கனியென அனைத்தையும் உள்ளபடி அறிபவராதலால்
பகவானுக்கு எதிலும் துளியளவும் ஐயப்பாடு இல்லை. எனவே அவர் 'சின்னஸம்ஶய:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக