இந்த அறுபத்தேழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
624. உதீர்ண:, 625. ஸர்வதஸ்சக்ஷு:, 626. அனீஶ:, 627. ஶாஶ்வதஸ்திர: |
628. பூஶய:, 629. பூஶண:, 630. பூதி:, 631. விஶோக:, 632. ஶோகநாஶன: ||
624. உதீர்ணாய நம:
ஸர்வபூதேப்ய: அனைத்து ஜீவராசிகளைக் (உயிரினங்களைக்) காட்டிலும்
ஸமுத்ரிக்தத்வாத் மிகவும் உயர்ந்தவரானபடியால்
உதீர்ண: பகவான் 'உதீர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளைக் (உயிரினங்களைக்) காட்டிலும் மிகவும் உயர்ந்தவரானபடியால் பகவான் 'உதீர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
625. ஸர்வதஸ்சக்ஷுஸே நம:
ஸர்வத: அனைத்து திசைகளிலிருந்தும்
ஸர்வம் அனைத்தையும் (அனைவரையும்)
ஸ்வசைதன்யேன தனது உணர்வால் (அறிவுத்திறனால்)
பஶ்யதீதி பார்க்கிறார் (அறிகிறார்)
ஸர்வதஸ்சக்ஷு: எனவே, பகவான் 'ஸர்வதஸ்சக்ஷு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எங்கும் நிறைந்துள்ள பரப்ரஹ்மமான பகவான் தனது இயற்கையான அறிவுத்திறனால் (உணர்வால்) அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து திசைகளிலிருந்தும் காண்கிறார். எனவே அவர் 'ஸர்வதஸ்சக்ஷு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'விஸ்வதஸ்சக்ஷு:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.3)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மத்திற்கு) உலகனைத்தையும் பரவும் கண்கள் (உள்ளன).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
626. அனீஶாய நம:
ந வித்யதேSஸ்யேஶ (ந வித்யதே அஸ்ய ஈஶ) (பகவானைக் காட்டிலும்) மேலான ஒரு ஈஸ்வரன் (கடவுள்) அறியப்படவில்லை
இதி அனீஶ: எனவே பகவான் 'அனீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(பகவானைக் காட்டிலும்) மேலான ஒரு ஈஸ்வரன் (கடவுள்) அறியப்படவில்லை இதி அனீஶ: எனவே பகவான் 'அனீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ந தஸ்யேஶே கஸ்சன'
அவருக்கு மேலான கடவுள் எவரும் இல்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ஶஶ்வத்பவன்னபி எப்பொழுதும் (என்றும்) இருப்பவர்
ந விக்ரியாம் எந்தவித விகாரமும்
கதாசிதுபைதி சிறிதளவும் இல்லாது இருப்பவர்
இதி ஶாஶ்வதஸ்திர: எனவே பகவான் 'ஶாஶ்வதஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றும் (நிரந்தரமாய்) இருப்பவர். எனினும், எந்தவித விகாரங்கள் சிறிதளவும் இல்லாதவர். எனவே அவர் 'ஶாஶ்வதஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி
நாமைகம் இது ஒரே திருநாமமாகும்.
என்றும் இருப்பவராதலால் 'ஶாஶ்வத'. எவ்வித விகாரமும் அற்று இருப்பதால் 'ஸ்திர:'.
628. பூஶயாய நம:
லங்காம் ப்ரதி இலங்கையை அடைவதற்கு
மார்கமன்வேஶயன் வழியை வேண்டி
ஸாகரம் ப்ரதி கடலரசனுக்காக
பூமௌ ஶேத இதி பூமியில் சயனித்து இருந்ததால்
பூஶய: பகவான் 'பூஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(இராமாவதாரத்தில்) இலங்கைக்கு செல்வதற்காக வழியை வேண்டி கடலரசனுக்காக பூமியில் சயனித்து இருந்ததால் பகவான் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இராமர் கடலரசனுக்காக தரையில் சயனித்த வரலாறு:
சீதாதேவி இலங்கையில் அசோக வனத்தில் சிறையிலிருப்பதை அனுமன் மூலம் அறிந்த இராமர், அனைத்து வானரப் படைகளுடன் தென்கோடி கடற்கரையை அடைகிறார். கடலைக் கடப்பதற்காக விபீடணரின் அறிவுரையின் படி கடலரசனைக் நோக்கி ஏழு நாட்கள் தரையில் தர்பைப் புல்லை பரப்பி அதில் சயனித்து தவம் இயற்றினார். கடலரசன் வராதிருக்கவே, தனது வில்லால் கடலை வற்ற பாணங்களைத் தொடுக்க, அஞ்சிய கடலரசன் இராமரின் பாதம் பணிந்தான். அவனது வேண்டுகோளின்படி நளன், நீலன் ஆகிய வானர வீரர்களைக் கொண்டு கடலின் நடுவே பாலம் அமைத்து இலங்கையை அடைந்து இராவணனை ஸம்ஹரித்தார். இன்றும் இராமேஸ்வரம் அருகே திருப்புல்லணை (திருப்புல்லாணி) என்ற திருத்தலத்தில் 'தர்பஶயன' திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
629. பூஶணாய நம:
ஸ்வேச்சாவதாரை: பஹுபி: தனது இச்சையால் பற்பல அவதாரங்கள் எடுத்து
பூமிம் பூமியை
பூஶயன் அலங்கரித்ததால்
பூஶண: பகவான் 'பூஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது இச்சையால் பற்பல அவதாரங்கள் எடுத்தார். அவரது அவதாரங்களே பூமிக்கு அணிகலன்கள் ஆகும். அவ்வாறு தனது அவதாரங்களினால் பூமியை அலங்கரித்ததால் பகவான் 'பூஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
630. பூதயே நம:
பூதி: பவனம் 'பூதி' என்ற சொல்லிற்கு இருப்பிடம் (பவனம்)
ஸத்தா இருத்தல்
விபூதிர்வா செல்வம் என்று பொருள். இவற்றை உடையவராதலால் பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'பூதி' என்ற சொல்லிற்கு இருப்பிடம் (பவனம்), இருத்தல் (ஸத்தா), செல்வம் (விபூதி) என்று பொருள். இவற்றை உடையவராதலால் பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வவிபூதீநாம் அனைத்து செல்வங்களுக்கும் / ஐஸ்வர்யங்களும்
காரணத்வாத்வா மூலகாரணமாய் இருப்பதால்
பூதி: பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அனைத்து செல்வங்களுக்கும் / ஐஸ்வர்யங்களும் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
631. விஶோகாய நம:
விகத: இல்லை
ஶோகோஸ்ய சோகம் (வருத்தம்)
பரமானந்தைக உயர்ந்த இன்பமே (ஆனந்தமே)
ரூபத்வாதிதி வடிவானவராய் இருப்பதால்
விஶோக: பகவான் 'விஶோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உயர்ந்த இன்பமே (பரமானந்தமே) வடிவானவராய் இருப்பதால் பகவானிடத்தில் சோகம் (வருத்தம்) இல்லை. எனவே அவர் 'விஶோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
631. ஶோகநாஶனாய நம:
ஸ்ம்ருதிமாத்ரேண (தன்னை) நினைத்த மாத்திரத்திலேயே
பக்தானாம் அடியவர்களின்
ஶோகம் வருத்தம் (அல்லது துன்பங்களை)
நாஶயதீதி அழிப்பதால்
ஶோகநாஶன: பகவான் 'ஶோகநாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தன்னை நினைத்த மாத்திரத்திலேயே அடியவர்களின் வருத்தங்களை (துன்பங்களை) அழிப்பதால் பகவான் 'ஶோகநாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக