ஞாயிறு, மார்ச் 26, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 216

69. காலநேமிநிஹா வீர: ஶௌரி: ஶூரஜனேஶ்வர: |

த்ரிலோகாத்மா த்ரிலோகேஶ: கேஶவ: கேஶிஹா ஹரி: || 

இந்த அறுபத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

642. காலநேமிநிஹா, 643. வீர:, 644. ஶௌரி:, 645. ஶூரஜனேஶ்வர: |

646. த்ரிலோகாத்மா, 647. த்ரிலோகேஶ:, 648. கேஶவ:, 649. கேஶிஹா, 650. ஹரி: || 

642. காலநேமிநிக்னே நம:

காலநேமிமஸுரம் 'காலநேமி' என்ற ஒரு அஸுரனை 

நிஜகானேதி கொன்றதால் 

காலநேமிநிஹா பகவான் 'காலநேமிநிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'காலநேமி' என்ற ஒரு அஸுரனை கொன்றதால் பகவான் 'காலநேமிநிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

643. வீராய நம:

வீர: ஶூர: மிகுந்த பராக்ரமசாலியாய் இருப்பதால் பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகுந்த பராக்ரமசாலியாய் இருப்பதால் பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

644. ஶௌரயே நம:

ஶூரகுலோத் 'ஶூர' குலத்தில் 

பவத்வாத் (கிருஷ்ணாவதாரத்தில்) அவதரித்ததால் 

ஶௌரி: பகவான் 'ஶௌரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(கிருஷ்ணாவதாரத்தில்) 'ஶூர' குலத்தில் அவதரித்ததால் பகவான் 'ஶௌரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

645. ஶூரஜனேஶ்வராய நம:

ஶூரஜனானாம் வாஸவாதீனாம் இந்திரன் முதலான சூரர்களையும் (அதிபராக்ரமசாலிகளையும்) விட 

ஶௌர்யாதிஶயேனேஶ்ட இதி  மிகுந்த பராக்ரமம் உடையவராதலால் 

ஶூரஜனேஶ்வர: பகவான் 'ஶூரஜனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்திரன் முதலான சூரர்களையும் (அதிபராக்ரமசாலிகளையும்) விட மிகுந்த பராக்ரமம் உடையவராதலால் பகவான் 'ஶூரஜனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

646. த்ரிலோகாத்மனே நம:

த்ர்யானாம் லோகானாம் மூன்று உலகங்களுக்கும் 

அந்தர்யாமிதயா உள்ளுறை 

ஆத்மேதி இதி வா ஆத்மாவாக இருப்பதால் 

த்ரிலோகாத்மா பகவான் 'த்ரிலோகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூன்று உலகங்களுக்கும் (அதில் உறைபவர்களின்) உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'த்ரிலோகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

த்ரயோ லோகோ மூவுலகங்களும் 

அஸ்மாத் அவரிடமிருந்து 

பரமார்த்ததோ உண்மையில் 

ந பித்யந்த இதி வா வேறுபடாது இருப்பதால் 

த்ரிலோகாத்மா பகவான் 'த்ரிலோகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மையில், மூவலகங்களும் அவரைக் காட்டிலும் வேறல்ல. எனவே, பகவான் 'த்ரிலோகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

647. த்ரிலோகேஶாய நம:

த்ரயோ லோகாஸ் மூவுலகங்களும் 

ததாஞப்தா: அவரது ஆணைக்கு (இணங்க) 

ஸ்வேஶு ஸ்வேஶு அவரவரது 

கர்மஸு கடமைகளை 

வர்தந்த இதி சரிவர ஆற்றுவதால் 

த்ரிலோகேஶ: பகவான் 'த்ரிலோகேஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூவுலகங்களும் (மூவுலக வாசிகளும்) பகவானின் ஆணைக்கு இணங்க அவரவரது கடமைகளை ஆற்றுவதால் பகவான் 'த்ரிலோகேஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரிலோக+ஈஶ: = த்ரிலோகேஶ: 

648. கேஶவாய நம:

கேஶஸம்ஞிதா: 'கேஶ' என்று பெயர் 

ஸூர்யாதி கதிரவன் முதலான (ஒளி வீசும் கோள்களின்) 

ஸங்க்ராந்தா உள்ளுறை கிரணங்களை 

அம்ஶவ: தத்வத்தயா உடையவராதலால் (அவை பகவானின் அம்ஸமானதால்) 

கேஶவ: பகவான் 'கேஶவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கேஶ' என்று பெயருடைய கதிரவன் முதலான (ஒளி வீசும் கோள்களின்) கிரணங்களுக்கு கேஶ' என்று பெயர். அவற்றை உடையவராதலால் (அவை பகவானின் அம்ஸமானதால்) பகவான் 'கேஶவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அம்ஶவோ யே ப்ரகாஶாந்தே மம தே கேஶஸம்ஞிதா: |

ஸர்வஞா: கேஶவம் தஸ்மான்மாமாஹுர்த்விஜஸத்தமா: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.48)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஒளிவீசும் எனது கிரணங்கள் 'கேஶ' என்று அழைக்கப்படுகின்றன. எனவே அனைத்தும் அறிந்த அந்தணர்கள் (இருபிறப்பாளர்கள்) என்னை 'கேஶவன்' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர். 

ப்ரஹ்மாவிஶ்ணுஶிவாக்யா: ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய 

ஶக்தய: (மும்மூர்த்திகளின்) ஶக்திகளுக்கு 

கேஶஸம்ஞிதா: 'கேஶி' என்று பெயர் 

தத்வத்தயா வா உடையவராதலால் (அவை பகவானின் அம்ஸமானதால்) 

கேஶவ: பகவான் 'கேஶவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய (மும்மூர்த்திகளின்) ஶக்திகளுக்கு 'கேஶி' என்று பெயர். உடையவராதலால் (அவை பகவானின் அம்ஸமானதால்) பகவான் 'கேஶவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'த்ரய: கேஶின:'

(பரப்ரஹ்மம்) மூன்று ஶக்திகளை உடையவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

'மத்கேஶௌ வஸுதாதலே' (ஸ்ரீவிஶ்ணு புராணம் 5.1.61)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பகவான் கூறுகிறார்: என்னுடைய இரண்டு கேஶங்கள் (ஶக்திகள்) பூமியில் உள்ளன.

இதி கேஶஶப்த: இந்த (ஸ்ரீவிஶ்ணு புராண) ஸ்லோகத்தில் 'கேஶ' என்ற சொல் ஶக்திபர்யாயத்வேன ப்ரயுக்த: ஶக்தி என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 

‘கோ ப்ரஹ்மேதி ஸமாக்யாத ஈஶோஹம் ஸர்வதேஹினாம் |

ஆவாம் தவாம்ஶஸம்பூதௌ தஸ்மாத்கேஶவநாமவான் ||’ (ஹரிவம்ஶம் 3.88.48)

ஹரிவம்ஶத்தில் பரமசிவனாரின் கூற்று: 'க' என்று ப்ரஹ்மாவை அழைப்பர். நான் அனைத்து பூதங்களின் (உடல் படைத்தவரின்) ஈஶ்வரனாவேன். நாங்கள் இருவரும் உங்களின் அம்சத்திலிருந்து உருவானதால் தாங்கள் 'கேஶவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்பு 23ஆம் திருநாமத்தில் 'கேஶவ' என்ற திருநாமத்திற்கு ஆச்சார்யாள் "அழகிய திருமுடியை உடையவர்" என்றும், "ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் பகவானின் ஆணைக்குட்பட்டு இருக்கின்றனர்" என்றும் "கேசி என்ற அசுரனை வதம் செய்தவர்" என்றும் உரை அளித்திருந்தார்.

649. கேஶிக்னே நம:

கேஶினாமானம் 'கேஶி' என்ற பெயருடைய 

அஸுரம் ஒரு அஸுரனை 

ஹதவானிதி வதம் செய்ததால் 

கேஶிஹா பகவான் 'கேஶிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கேஶி' என்ற பெயருடைய ஒரு அஸுரனை வதம் செய்ததால் பகவான் 'கேஶிஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

650. ஹரயே நம:

ஸஹேதுகம் அவற்றின் மூலகாரணத்தோடு 

ஸம்ஸாரம் சம்சாரத்தை (பிறப்பு, இறப்பு சுழற்சியை) 

ஹரதீதி அழிப்பதால் 

ஹரி: பகவான் 'ஹரி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது ஸம்ஸாரத்தை (பிறப்பு, இறப்பு சுழற்சியை) அவற்றின் மூலகாரணத்தோடு (வேரோடு) அழிப்பதால் பகவான் 'ஹரி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

1 கருத்து: