71. ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தன: |
இந்த எழுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
661. ப்ரஹ்மண்ய:, 662. ப்ரஹ்மக்ருத், 663. ப்ரஹ்மா, 664. ப்ரஹ்ம, 665. ப்ரஹ்மவிவர்த்தன: |
666. ப்ரஹ்மவித், 667. ப்ராஹ்மணோ, 668. ப்ரஹ்மீ, 669. ப்ரஹ்மஞ:, 670.ப்ராஹ்மணப்ரிய: ||
661. ப்ரஹ்மண்யாய நம:
'தபோ வேதாஸ்ச விப்ராஸ்ச ஞானம் ச ப்ரஹ்மஸம்ஞிதம் |' தவம், மறை (வேதங்கள்), அந்தணர்கள் மற்றும் அறிவு (ஞானம்) ஆகியவை 'ப்ரஹ்மம்' என்று அழைக்கப்படும்
தேப்யோ இவை நான்கின்
ஹிதத்வாத் நன்மையை விழைபவராதலால்
ப்ரஹ்மண்ய: பகவான் 'ப்ரஹ்மண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தவம், மறை (வேதங்கள்), அந்தணர்கள் மற்றும் அறிவு (ஞானம்) ஆகியவை 'ப்ரஹ்மம்' என்று அழைக்கப்படும். இவை நான்கின் நன்மையை விழைபவராதலால் (இவை நான்கிற்கும் நன்மையை அளிப்பவராதலால்) பகவான் 'ப்ரஹ்மண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
662. ப்ரஹ்மக்ருதே நம:
தபஆதீனாம் தவம் முதலானவைகளை
கர்த்ருத்வாத் உருவாக்கியவர் ஆதலால்
ப்ரஹ்மக்ருத் பகவான் 'ப்ரஹ்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(மேற்கூறிய) தவம் முதலியவைகளை பகவானே உருவாக்கினார். எனவே, அவர் 'ப்ரஹ்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
663. ப்ரஹ்மணே நம:
ப்ரஹ்மாத்மனா நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் வடிவில்
ஸர்வம் அனைத்தையும்
ஸ்ருஜதீதி படைப்பதால்
ப்ரஹ்மா பகவான் 'ப்ரஹ்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே நான்முகக் கடவுளின் வடிவில் (அவரது உள்ளுறை ஆன்மாவாக இருந்து) அனைத்தையும் படைக்கிறார். எனவே அவர் 'ப்ரஹ்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
664. ப்ரஹ்மணே நம:
ப்ருஹத்வாத் தான் (ஞானம் முதலானவற்றில்) மிகப்பெரியவராகவும்
ப்ருஹ்மணத்வாச்ச தன்னை அடைந்தோரை (தன்னை அறிந்தோரை) மிகப்பெரியவராய் உயர்த்தவல்லவராகவும்
ஸத்யாதி உண்மை, இருப்பு முதலான
லக்ஷணம் இலக்கணங்கள் பொருந்தியவராகவும் இருப்பதால்
ப்ரஹ்ம பகவான் 'ப்ரஹ்ம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தான் (ஞானம் முதலானவற்றில்) மிகப்பெரியவராகவும் தன்னை அடைந்தோரை (தன்னை அறிந்தோரை) மிகப்பெரியவராய் உயர்த்தவல்லவராகவும், உண்மை, இருப்பு முதலான இலக்கணங்கள் பொருந்தியவராகவும் இருப்பதால் பகவான் 'ப்ரஹ்ம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம' (தைத்ரீய உபநிஶத் 2.1)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்ம்) என்றுமுள்ள ஸ்வரூபத்தை உடையது, அறிவு மயமானது, வரையறுக்கப்படாதது (எல்லைகள் அற்றது).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
‘ப்ரத்யஸ்தமிதபேதம் யத் ஸத்தாமாத்ரமகோசரம் |
வசஸாமாத்மஸம்வேத்யம் தஞ்ஞானம் ப்ரஹ்மஸம்ஞிதம் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.7.53)’
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எது அனைத்து பேதங்களும் (பிரிவுகள், வேற்றுமைகள்) அற்றதோ, உண்மையாக இருப்பதோ, வாக்கால் விவரிக்க இயலாததோ, அறியத்தக்க ஒன்றாக இருக்கிறதோ அந்த ஞானத்தை (அறியத்தக்க பகவானை) ப்ரஹ்மம் என்று அழைக்கின்றனர்.
இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
665. ப்ரஹ்மவிவர்த்தனாய நம:
தபஆதீனாம் தவம் முதலானவைகளை
விவர்த்தநாத் வளர்ப்பதால்
ப்ரஹ்மவிவர்த்தன: பகவான் 'ப்ரஹ்மவிவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தவம் முதலானவைகளை வளர்ப்பதால் பகவான் 'ப்ரஹ்மவிவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
666. ப்ரஹ்மவிதே நம:
வேதம் மறைகளையும்
வேதார்த்தம் ச மறைகளின் பொருளையும்
யதாவத் உள்ளதை உள்ளபடி
வேத்தீதி அறிவதால்
ப்ரஹ்மவித் பகவான் 'ப்ரஹ்மவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மறைகளையும், மறைகளின் பொருளையும் உள்ளதை உள்ளபடி அறிவதால் ப்ரஹ்மவித் பகவான் 'ப்ரஹ்மவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
667. ப்ராஹ்மணே நம:
ப்ராஹ்மணாத்மனா (அவர்களது உள்ளுறை ஆன்மாவாக) அந்தணர்களின் வடிவில்
ஸமஸ்தானாம் அனைத்து
லோகாநாம் உலகங்களிலும்
ப்ரவசனம் குர்வன் உபதேசிப்பதால்
வேதஸ்யாயமிதி மறைகளில் (வேதங்களில்) உள்ளவற்றை (உள்ளபடி)
ப்ராஹ்மண: பகவான் 'ப்ராஹ்மண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்தணர்களின் வடிவில் (அவர்களது உள்ளுறை ஆன்மாவாக) உலகனைத்திற்கும் மறைகளில் (வேதங்களில்) உள்ளவற்றை (உள்ளபடி) உபதேசிப்பதால் பகவான் 'ப்ராஹ்மண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
668. ப்ரஹ்மிணே நம:
ப்ரஹ்மஸம்ஞிதாஸ் ப்ரஹ்மம் என்ற சொல்லினால் குறிக்கப்படும்
தச்சேஶபூதா ப்ரஹ்மத்திற்கு உட்பட்ட (தவம், வேதம், மனம் முதலியவற்றை)
அத்ரேதி தன்னுள்ளே கொண்டவராதலால்
ப்ரஹமீ பகவான் 'ப்ரஹமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்மம் என்ற சொல்லினால் ப்ரஹ்மத்திற்கு உட்பட்ட (தவம், வேதம், மனம் முதலியவற்றை) அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவராதலால் பகவான் 'ப்ரஹமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
669. ப்ரஹ்மஞ்ஞாய நம:
வேதான் அனைத்து மறைகளையும் (வேதங்களையும்)
ஸ்வாத்மபூதான் தம்முடைய உருவமாகவே
ஜானாதீதி அறிவதால்
ப்ரஹ்மஞ்ஞ: பகவான் 'ப்ரஹ்மஞ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து மறைகளையும் (வேதங்களையும்) தம்முடைய உருவமாகவே அறிவதால் பகவான் 'ப்ரஹ்மஞ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
670. ப்ராஹ்மணப்ரியாய நம:
ப்ராஹ்மணானாம் அந்தணர்களுக்கு
ப்ரியோ விருப்பமானவர்
ப்ராஹ்மணப்ரிய: பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்தணர்களுக்கு விருப்பமானவர் ஆதலால் பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராஹ்மணா: அந்தணர்களை
ப்ரியா விரும்புபவராதலால்
அஸ்யேதி வா ப்ராஹ்மணப்ரிய: பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அந்தணர்களை விரும்புபவராதலால் பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘க்னன்தம் ஶாபந்தம் பருஶம் வதந்தம் யோ
ப்ராஹ்மணம் ந ப்ரணமேத் யதார்ஹம் |
ஸ பாபக்ருத் ப்ரஹ்மதவாக்னிதக்தௌ
வத்யஸ்ச தண்டயஸ்ச ந சாஸ்மதீய: ||’
பகவான் கூறுகிறார்: கொன்றாலும், சாபமிட்டாலும், சுடுசொல் கூறினாலும் அந்தணர்களை தகுந்த முறையில் வணங்காத பாவிகள் அந்த அந்தணர்களின் (தவத்தால் உருவாகும்) நெருப்பால் துன்புறுத்தப்படுவர். அத்தகைய பாவி கொல்லப்படவும், தண்டிக்கப்படவும் தக்கவன். அவன் எனது அடியவனும் இல்லை.
இதி பகவத்வசனாத் இது பகவானின் கூற்றாகும்.
‘யம் தேவம் தேவகி தேவி வஸுதேவாதஜீஜனத் |
பௌமஸ்ய ப்ரஹ்மணோ குப்த்யை தீப்தமக்னிமிவாரணி: ||’ (ஸ்ரீமத் மஹாபாரதம் ஶாந்தி
பர்வம் 47.29)
ஸ்ரீமத் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு அரணிக்கட்டையானது (அதனின்று) ஒளிரும் நெருப்பை உருவாக்குகிறதோ, அவ்வாறே தேவகி வஸுதேவரின் மூலம் பூமி மற்றும் அந்தணர்களை காக்கும் பொருட்டு அந்த தேவனை (பகவான் கண்ணனை) பிறப்பித்தாள்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக