ஞாயிறு, ஏப்ரல் 16, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 219

72. மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |

மஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயக்ஞோ மஹாஹவி: || 

இந்த எழுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

671. மஹாக்ரம:, 672. மஹாகர்மா, 673. மஹாதேஜ:, 674. மஹோரக: |

675. மஹாக்ரது:, 676. மஹாயஜ்வா, 677. மஹாயக்ஞ:, 678. மஹாஹவி: || 

671. மஹாக்ரமாய நம:

மஹாந்த: மிகப்பெரிய (நீண்ட) 

க்ரமா: பாதவிக்ஷேபா 'க்ரமா' அதாவது அடிகளை உடையவராதலால் 

அஸ்யேதி மஹாக்ரம: பகவான் 'மஹாக்ரம:' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகப்பெரிய (நீண்ட) அடிகளை உடையவராதலால் பகவான் 'மஹாக்ரம:' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶம் நோ விஶ்ணுருருக்ரம:' (தைத்ரீய உபநிஶத் ஶாந்தி பாடம்)

தைத்ரீய உபநிஶத் ஶாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது: நீண்ட அடிகளை உடைய பகவான் விஷ்ணு எங்களுக்கு மங்களத்தை கொடுக்கட்டும்.

இங்கு அடி என்ற சொல் பாதத்தை குறிக்கவில்லை. மாறாக, கால்களை வைத்து நடக்கும் அளவைக் குறிக்கிறது.

672. மஹாகர்மணே நம:

மஹத் மிகப்பெரிய (மிகச்சிறந்த

ஜகதுத்பத்யாதி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான 

கர்மாஸ்யேதி செயல்களைப் (காரியங்களை) புரிபவராதலால் 

மஹாகர்மா பகவான் 'மஹாகர்மா'  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான மிகப்பெரிய (மிகச்சிறந்த) செயல்களைப் (காரியங்களை) புரிபவராதலால் பகவான் 'மஹாகர்மா'  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

673. மஹாதேஜஸே நம:

யதீயேன தேஜஸா எவருடைய ஒளியானது 

தேஜஸ்வினோ ஒளியை அளிக்கிறதோ 

பாஸ்கராதய: கதிரவன் முதலானவற்றிற்கு 

தத்தேஜோ அந்த ஒளியானது 

மஹதஸ்யேதி மிகச்சிறந்த ஒளியாகக் கருதப்படுகிறது 

மஹாதேஜ: எனவே (அந்த ஒளியை உடைய பகவான்) 'மஹாதேஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஒளியானது (நமக்கெல்லாம் ஒளியை உமிழும்) கதிரவன் முதலானவற்றிற்கும் ஒளியை அளிக்கிறது. இத்தகைய மிகச்சிறந்த ஒளியுடையவர் ஆதலால் பகவான் 'மஹாதேஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யேன ஸூர்யஸ்தபதி தேஜஸேத்த:' (தைத்ரீய ப்ராஹ்மணம் 3.12.9.7)

தைத்ரீய ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது: எவருடைய ஒளியால் கதிரவன் ஒளிவீசுகின்றதோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம் |

யச்சந்த்ரமஸி யச்சாக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம் ||’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும், சந்திரனிடத்துள்ளதும், தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே என்றுணர்.

இதி பகவத்வசனாச்ச | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

க்ரௌர்ய (தீயவர்களிடம்) கடுமையும், 

ஶௌர்யாதிபிர்தர்மைர் ஸூரத்தனம் முதலிய குணங்களால் 

மஹத்பி: மிகச்சிறந்த 

ஸமலங்க்ருத அலங்கரிக்கப்பட்டுள்ளவர் 

இதி வா மஹாதேஜா: எனவே பகவான் 'மஹாதேஜா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது (தீயவர்களிடம்) கடுமை, ஸூரத்தனம் முதலிய மிகச்சிறந்த குணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளவர் ஆதலால், பகவான் 'மஹாதேஜா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை  காக்கவும், தவறிழைப்போரை தண்டிக்கும் பொருட்டே அவர் கடுமை முதலான குணங்களை ஏற்பதால், அவையும் பகவானுக்கு ஒரு அணிகலன் போன்றதே.

674. மஹோரகாய நம:

மஹாம்ஸ்சாஸாவுரகஸ்சேதி மிகச்சிறந்த பாம்பின் வடிவிலிருப்பதால் 

மஹோரக: பகவான் 'மஹோரக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(வாஸுகி என்னும்) மிகச்சிறந்த பாம்பின் வடிவிலிருப்பதால் பகவான் 'மஹோரக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸர்ப்பானாமஸ்மி வாஸுகி:' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.28)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: பாம்புகளில் வாஸுகி

இதி பகவத்வசனாத் | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஸர்ப்பம் = ஒரு தலை பாம்புகள்; நாகம் = பல தலை கொண்ட பாம்புகள்.

675. மஹாக்ரதவே நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகச்சிறந்த 

க்ரதுஸ்ஶேதி வேள்வியின் வடிவாக இருப்பதால் 

மஹாக்ரது: பகவான் 'மஹாக்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த வேள்வியின் வடிவாக இருப்பதால் பகவான் 'மஹாக்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'யதாஸ்வமேத க்ரதுராட்' (மனு ஸ்ம்ருதி 11.260)

மனு ஸ்ம்ருதியில் மனு பகவான் கூறுகிறார்: எவ்வாறு அஸ்வமேதம் வேள்விகள் அரசனாக உள்ளதோ...

இதி மனுவசனாத் | மனு பகவானின் இந்தக் கூற்றின்படி

ஸோSபி ஸ ஏவேதி ஸ்துதி: (அஸ்வமேதம் குறித்த) இந்த மனுஸ்ம்ருதி வாக்கியமும் பகவானையே போற்றுகின்றது.

676. மஹாயஜ்வனே நம:

மஹாமஸ்சாஸௌ மிகச்சிறந்தவர் 

யஜ்வா சேதி 'யஜ்வா' அதாவது வேள்வி புரிபவராகவும் இருப்பதால் 

லோக ஸங்க்ராஹார்த்தம் உலக நன்மைக்காக 

யஞ்ஞான் வேள்வி 

நிர்வர்த்தயன் புரிகிறார் 

மஹாயஜ்வா எனவே பகவான் 'மஹாயஜ்வா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்தவராக இருப்பதாலும், உலக நன்மைக்காக வேள்வி புரிபகவாராக இருப்பதாலும் பகவான் 'மஹாயஜ்வா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

677. மஹாயக்ஞாய நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகச்சிறந்த 

யக்ஞஸ்ஶேதி வேள்வியாக இருப்பதால் 

மஹாயக்ஞ: பகவான் 'மஹாயக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த வேள்வியாக இருப்பதால் பகவான் 'மஹாயக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யஞானாம் ஜபயஞோஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்

இதி பகவத்வசனாத் | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

678. மஹாஹவிஶே நம:

மஹஸ்ஶ மிகச்சிறந்தவராகவும் 

தத்தவிஸ்ஶேதி (தத் ஹவிஸ்ஶேதி) 'ஹவிஸ்' (வேள்வியில் அர்பணிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார் 

ப்ரஹ்மாத்மனி ப்ரஹ்ம பாவனையில் 

ஸர்வம் அனைத்தும் 

ஜகத்ததாத்மதயா (ப்ரஹ்மமாகவே உள்ள) இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் 

ஹுயத இதி வேள்வியில் அர்பணிப்பதால் 

மஹாஹவி: பகவான் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்தவர். மேலும், ப்ரஹ்ம பாவனையில், ப்ரஹ்ம மயமாயுள்ள இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தையும் வேள்வியில் அர்ப்பணிக்கப்படுவதால் (பரப்ரஹ்மமான) பகவான் வேள்வியின் ஹவிஸாகவும் இருக்கிறார். எனவே அவர் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மஹாகர்துரித்யாதயோ 'மஹாக்ரது:' முதலான திருநாமங்களில் 

பஹுவ்ரீஹயோ குறிக்கப்படுவதாலும் 

வா மஹாஹவி: பகவான் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அல்லது, 'மஹாக்ரது:' முதலான திருநாமங்களில் குறிக்கப்படுவதாலும் பகவான் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக