வெள்ளி, ஜூன் 07, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 113

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

129. ஓம் அவ்யங்காய நம:
அவ்யங்க: பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஞானாதிபி: (ஏனெனில்) ஞானம் முதலிய குணங்கள்
பரிபூர்ணோS()விகல எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக உள்ளதால் 
த்யுச்யதே பகவான் இவ்வாறு (அவ்யங்க: என்று) அழைக்கப்படுகிறார்.

அவரிடம், ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால், பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யங்கம் என்றால் குறைபாடு; அவ்யங்க: என்றால் குறைபாடுகள் இல்லாதவர். அவிகல = முழுமையாக

வ்யங்கோ வ்யக்திர் உருவம் (அறிதல்
ந வித்யத அவர் அடைவதில்லை 
இதி அவ்யங்கோ வா எனவே, பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு நமது பார்வையாலோ, மற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவே, பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அவ்யக்தோSயம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 2.25)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: தெளிதற்கரியான்
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

130. ஓம் வேதாங்காய நம:
வேதா வேதங்கள் 
அங்கபூதா யஸ்ய அவரது அங்கங்களாக இருப்பதால் 
வேதாங்க: பகவான் 'வேதாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் 'வேதாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

131. ஓம் வேதவிதே நம:
வேதான் வேதங்களை 
வின்தே விசாரயதி ஆராய்கிறார் 
இதி வேதவித் எனவே, பகவான் 'வேதவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை ஆராய்கிறார். எனவே, பகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
128வது திருநாமத்தில் வேத - வேதங்களை + வித் - அறிகிறார் = வேதவித். இந்தத் திருநாமத்தில் வேத - வேதங்களை + வின் (விசாரயதி) = வேதவித்.

132. ஓம் கவயே நம:
க்ராந்ததர்ஶீ ஊடுருவிப் பார்க்கிறார் 
கவி: எனவே, பகவான் 'கவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வத்ருக் அனைத்தையும் காண்கிறார்.

பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார். எனவே, அவர் 'கவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ப்ரஹ்மத்தைத் தவிர) இங்கு காண்பவர் வேறு இல்லை.

இத்யாதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'கவிர்மனீஶி' (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)
ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ப்ரஹ்மம்) அனைத்தையும் அறிபவன், மனதை ஆள்பவன்.
இத்யாதி மந்த்ரவர்ணாத் | இவ்வாறு மந்திரங்களும் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக