ஞாயிறு, ஜூன் 16, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 115

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

133. ஓம் லோகாத்யஷாய நம:
லோகான் அனைத்து உலகங்களுக்கும் (அதிலுள்ள ஜீவராசிகளுக்கும்
அத்யக்ஷயதீதி தலைவரான படியால் 
லோகாத்யக்ஷ: பகவான் 'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வேஶாம் அனைத்து 
லோகானாம் உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்
ப்ராதான்யேனோபத்ருஶ்டா முதன்மையான ஸ்தானத்திலிருந்து மேற்பார்வையிடுகிறார்.

பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக 'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

134. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி இந்த உலகிற்கு (மழை, வெயில் முதலிய) தேவையானவற்றை அளிக்கும் பொறுப்பில் உள்ள 
ஸுராணாம் (இந்திரன், வருணன், அக்னி, சூர்யன் முதலான) தேவர்களை 
அத்யக்ஷ: மேற்பார்வையிடுகிறார் 
ஸுராத்யக்ஷ: எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார். எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக