14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||
இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
123. ஓம் ஸர்வகாய நம:
ஸர்வத்ர கச்சதீதி ஸர்வக: காரணத்வேனவ்யாப்தத்வாத் ஸர்வத்ர
அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் 'ஸர்வக:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
124. ஓம் ஸர்வவித்பானவே நம:
ஸர்வம் வேத்தி விந்ததீதி வா ஸர்வவித் பாதீதி பானு: ஸர்வவிச்சாஸௌ பானுஸ்சேதி ஸர்வவித்பானு:
பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
125. ஓம் விஶ்வக்ஸேனாய நம:
விஶ்வக் அவ்யயம் ஸர்வேத்யர்த்தே | விஶ்வ கச்சதி தைத்யஸேனா யஸ்ய ரணோத்யோகமாத்ரேணேதி விஶ்வக்ஸேன:
'விஶ்வ' என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான்,போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் 'விஶ்வக்ஸேனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
126. ஓம் ஜனார்தனாய நம:
ஜனான் துர்ஜனான் அர்தயதி ஹினஸ்தி நரகாதீன் கமயதீதி வா ஜனார்தன:
பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஜனை: அப்யுதய நி:ஶ்ரேயஸ லக்ஷணம் யாச்யதே இதி ஜனார்தன:
மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே,பகவான் 'ஜனார்தனர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
127. ஓம் வேதாய நம:
வேதரூபத்வாத் வேத:
பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் 'வேத:'
வேதயதீதி வா வேத:
அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
128. ஓம் வேதவிதே நம:
யதாவத் வேதம் வேதார்த்தம் ச வேத்தீதி வேதவித்
பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும், அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார். எனவே, பகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
129. ஓம் அவ்யங்காய நம:
அவ்யங்க: ஞானாதிபி: பரிபூர்ணோS(அ)விகல இத்யுச்யதே
அவரிடம், ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால், பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யங்கோ வ்யக்திர் ந வித்யத இதி அவ்யங்கோ வா
பகவானுக்கு நமது பார்வையாலோ, மற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவே, பகவான்'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
130. ஓம் வேதாங்காய நம:
வேதா அங்கபூதா யஸ்ய ஸ வேதாங்க:
வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் 'வேதாங்க:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
131. ஓம் வேதவிதே நம:
வேதான் வின்தே விசாரயதி இதி வேதவித்
வேதங்களை ஆராய்கிறார். எனவே, பகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்)என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
132. ஓம் கவயே நம:
க்ராந்ததர்ஶீ கவி: ஸர்வத்ருக்
பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார். எனவே, அவர் 'கவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக