ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 119

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||



இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:


141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
                146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

141. ஓம் ப்ராஜிஶ்ணவே நம:
ப்ரகாஶ ஒளிவடிவானவர் 
ஏகரஸத்வாத் மாற்றமில்லாதவர் 
ப்ராஜிஶ்ணு: எனவே, பகவான் 'ப்ராஜிஶ்ணு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாற்றமில்லாத, ஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ராஜிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

142. ஓம் போஜனாய நம:
போஜ்யரூபாதயா அனுபவிக்க வேண்டிய பொருளாக 
ப்ரக்ருதிர் மாயா 'ப்ரக்ருதி' என்று அழைக்கப்படும் இந்த மாயை 
போஜனம் (அந்த மாயையின் வடிவாக இருப்பதால்) பகவான் 'போஜனம்' என்ற திருநாமத்தால் 
இத்யுச்யதே அழைக்கப்படுகிறார்.

ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளது. எனவே, ப்ரக்ருதி 'போஜனம்' (அனுபவிக்கப்படும் பொருள்) என்றழைக்கப்படுகிறது. பகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால், அவர் 'போஜனம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

143. ஓம் போக்த்ரே நம:
புருஶ ரூபேண புருஷனின் வடிவில் 
தாம் புங்க்தே பகவான் (அந்த ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் பொருள்களை) அனுபவிக்கிறார் 
இதி போக்தா எனவே அவர் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானே. எனவே, அவரே 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரண்டு திருநாமங்களை ஆதிசங்கரர் ப்ரக்ருதி-புருஶ தத்துவத்தைக் கொண்டு விளக்குகிறார். அனைத்தும் பரம்பொருளே. ப்ரக்ருதியின் வடிவில் அனைத்து அனுபவங்களாயும் இருப்பவரும் பகவானே. அவரே, புருஶனின் (அதாவது ஆத்மாவின் வடிவில்) அனைத்தையும் அனுபவிக்கிறார்.
பொது வழக்கில் போஜனம் என்றால் உண்ணும் உணவைக் குறிக்கும், போக்தா என்றால் உண்பவரைக் குறிக்கும். ஆனால், உண்மையில் நாம் அனைத்துப் புலன்களாலும் அனுபவிக்கும் எல்லா பொருட்களுக்குமே 'போஜனம்' என்றுதான் பெயர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக