வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 120

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
 

141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
                146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

144. ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன் ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை
ஸஹதே வெற்றி கொள்கிறார் 
அபிபவதீதி அடக்குகிறார் 
ஸஹிஶ்ணு: எனவே பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸஹதே என்றால் வெல்பவர்; அபபவதி என்றால் அடக்குபவர்.

145. ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண 'ஹிரண்யகர்பரின்' வடிவில் 
ஜகதாதாவுத்பத்யதே இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் உதித்தார் 
ஸ்வயமிதி தாமே வந்து 
ஜகதாதிஜ: எனவே, பகவான் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

146. ஓம் அனகாய நம:
அகம் பாபங்கள் 
ந வித்யதேSஸ்யேதி அவரைத் தீண்டுவதில்லை 
அனக: எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார். இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக - பாபங்கள்; அனக பாபங்களற்றவர்

‘அபஹதபாப்மா’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) பாவங்களற்றவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக