செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 117

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:


133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:



137. ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு படைத்தல் முதலான காரியங்களுக்காக 
ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர நான்கு வெவ்வேறு 
ஆத்மானோ மூர்த்தயோ உருவங்கள் 
யஸ்ய ஸ: எவர் எடுக்கிறாரோ, அந்த பகவான் 
சதுராத்மா 'சதுராத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ்ததைவாகிலஜந்தவ: |
விபூதயோ ஹரேரேதா ஜகத: ஸ்ருஶ்டிஹேதவ: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.31)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ப்ரஹ்மா, தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகள், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் படைக்கும் காலத்தில் பகவான் ஹரியின் தோற்றங்களாகும்.

விஶ்ணோர்மன்வாதய: கால: ஸர்வபூதானி ச த்விஜ: |
ஸ்திதேர்நிமித்தபூதஸ்ய விஶ்ணோரேதா விபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.32)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
விஶ்ணு, மனு முதலானோர், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் காக்கும் காலத்தில் பகவான் விஶ்ணுவின் தோற்றங்களாகும். 

ருத்ர: காலோSந்தகாத்யாஸ்ச ஸமஸ்தாஸ்சைவ ஜந்தவ: |
சதுர்தா ப்ரளயாயைதா ஜனார்தனவிபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.33)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ருத்ரன், காலம், யமன் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் அழிக்கும் ப்ரளய காலத்தில் பகவான் ஜனார்தனரின் தோற்றங்களாகும்.
இதி வைஶ்ணவபுராணே – இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

138. ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
பகவான் ஜனார்தனர் (வேதங்களிலும், மற்ற ஶ்ருதிகளிலும்) மிகவும் புகழப்பெற்ற தனது வடிவத்தை வாஸுதேவர் முதலிய நான்கு வடிவங்களாக வகுத்துக் கொண்டு படைப்பு முதலிய செயல்களைப் புரிகிறார்.
இதி வ்யாஸவசனாத் ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி 
சதுர்வ்யூஹ: பகவான் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யூஹ என்றால் வகுத்தல், அல்லது பிரித்துக் கொள்ளுதல் என்று பொருள்.

139. ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ நான்கு தெற்றிப் பற்களை 
யஸ்யேதி எவரிடம் உள்ளதோ 
சதுர்தம்ஶ்ட்ர: (அந்த பகவான்) 'சதுர்தம்ஷ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ந்ருஸிம்ஹவிக்ரஹ: ஸ்ரீநரஸிம்ஹ மூர்த்தி.

பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது 
ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தோற்ற ஒப்புமையால் கொம்புகளை 
தம்ஶ்ட்ரேத்யுச்யதே பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள் 
சதுர்தம்ஶ்ட்ர: பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் 'சதுர்தம்ஷ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சத்வாரி ஶ்ருங்கா:' (ரிக்வேதே)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது:
(அவருக்கு) நான்கு கொம்புகள் உள்ளது.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

140. ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ நான்கு 
புஜா திருத்தோள்களை 
அஸ்யேதி உடையவராதலால் 
சதுர்புஜ: பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்த நான்குத் திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தி இருக்கும் பகவானின் திருஉருவம் மிகவும் பிரபலாமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக